என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Aids"

    • சிவகங்கையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறு டிவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனா ளிகளுக்கான உபக ரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 376 மனுக்கள் பெறப்பட்டன.

    தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார். மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 5 பள்ளி மாணவிகளுக்கும், 3 கல்லூரி மாணவிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு

    சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அறிவானந்த பாண்டியன் நினைவு நாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக்குழு தலைவர் கவிஞர் சிதம்பர பாரதி தையல் எந்திரம் வழங்கியும் புகழ் அஞ்சலி செலுத்தினர்.

    மதுரை

    அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் மறைந்த அறிவானந்த பாண்டியனின் 22-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பாரதப் பெருந்தலைவர் காமராஜர் அறிநிலையத்தில் நடந்தது.

    அவைத்தலைவர் எஸ்.கே.மோகன் தலைமை தாங்கினார். காமராஜர் அறநிலைய பொதுச்செயலாளர் காசிமணி முன்னிலை வகித்தார். பேரவையின் பொதுச்செயலாளர் வி.பி.மணி வரவேற்றார்.

    வேளாண் உணவு வர்த்தக மைய நிர்வாக இயக்குநர் ரத்தினவேல் ஏழை பெண்களுக்கு சேலை வழங்கியும், மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக்குழு தலைவர் கவிஞர் சிதம்பர பாரதி தையல் எந்திரம் வழங்கியும் புகழ் அஞ்சலி செலுத்தினர்.

    விழாவில் ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் செந்தில்குமார், செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், துணைச்செயலாளர் பாஸ்கரன், காமராஜர் அறநிலைய தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் சோமசுந்தரம், பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக்குலேசன் பள்ளி தலைவர் கணேசன், துணைத்த லைவர் பழனிக்குமார். செயலளர் ஆனந்த், இணைச்செயலாளர் சூசை அந்தோணி.

    வழக்கறிஞர் விஜய முருகேசன் மாவட்டத் துணைத்தலைவர் சந்தி ரசேகரன், பொருளாளர் கிடாரிபட்டி சேகர், மதுரை மாநகர் துணைத்தலைவர் ரவி, முத்து, செயலாளர் மதிவாணன். இணைச்செயலாளர் பாண்டி. மடப்புரம் சம்பத், கிழக்குத் தொகுதி தலைவர் கதிர்வேல், துணைத்தலைவர் கலைமதிச்செல்வன், செயலாளர் முருகேச பாண்டியன், பொருளாளர் ரவிச்சந்திரன்.

    மத்திய தொகுதி தலைவர் கார்த்திகைசெல்வம், துணைத்தலைவர் பாண்டி யராஜன். துணைத்தலைவர் ஆனந்த ஜோதி, செயலாளர் கணேசன். துணைச்செயலாளர் குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ராதா கிருஷ்ணன், பொருளாளர் நாகராஜ், மேற்குத்தொகுதி தலைவர் சிவக்குமார். துணைத்தலைவர் தவசிலிங்கம், பொருளாளர் பால்ராஜ், துணைச்செயலாளர் வினோத், இரும்பு கண்ணன்.

    தெற்கு தொகுதி தலைவர் நாகசேகர், துணைத்தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் மகாராஜன், பொருளாளர் செல்வராஜ், துணைச்செயலாளர் முத்துமாரியப்பன், ஆலோசகர் சரவணக்குமார் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். மதுரை மாநகர் தலைவர் குமார் நன்றி கூறினார்.

    • மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நாளை வழங்கப்படுகிறது
    • இந்த நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை ஏ.ஜி.எஸ். அகாடமி, ஏ.ஜி.எஸ்.ஆர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    மதுரை

    முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு வின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரையில் நாளை ஏழை எளியவருக்கு இலவச வேட்டி- சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    மதுரையின் முன்னாள் நகர் மன்ற தலைவராகவும் மதுரை பாராளுமன்ற உறுப்பினராக 2 முறை திறம்பட மக்கள் பணியாற்றியவர் ஏஜி.சுப்புராமன்.இவரது மகனும், மதுரை மாவட்ட காங்கிரசின் தன்னிகரில்லா தலைவராக விளங்கி மதுரை மக்களின் பேரன்பினால் 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றியவர் ஏ.ஜி.எஸ். ராம்பாபு.

    அவர் கடந்த ஆண்டு ஜனவரி 11-ந் தேதி இயற்கை எய்தினார். ஏ.ஜி.எஸ். ராம்பாபுவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள மஹால் வடம்போக்கி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

    இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏ.ஜி.எஸ். ராம்பாபு மீது பற்று கொண்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், முன்னாள், இந்நாள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சவுராஷ்டிரா சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள், சமுதாய பெருமக்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டு ஏ.ஜி.எஸ். ராம்பாபுவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்துகிறார்கள். இதை தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக நலிவுற்ற, ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி -சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இந்த நினைவேந்த லுக்கான ஏற்பாடுகளை ஏ.ஜி.எஸ். அகாடமி, ஏ.ஜி.எஸ்.ஆர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    • விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
    • காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, திறந்தஜீப்பில் சென்று பார்வையிட்டார்.

    விழுப்புரம்:

    நாடுமுழுவதும் இன்று 74-வது குடியரசு தினவிழா கோலகலமாக கொண்டா டப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து வானில் வண்ண பலூன்களையும், வெண்புறக்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, திறந்தஜீப்பில் சென்று பார்வையிட்டார். அதனையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுதந்திர போராட்ட தியாகிகள் 24 பேருக்கு சால்வை அணைத்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் விழாவில் மொத்தம் 181 பேருக்கு ரூ.1, 18,94 ,483 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மேலும் நிவாரண நிதியிலிருந்து நான்கு நபர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை கலெக்டர் சித்ரா விஜயன், டி.ஐ.ஜி. பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் போலீசார், அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது.
    • இதில் 66 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி 66 பயனாளிகளுக்கு ரூ.51.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மனிதநேயத்தை எல்லோரும் சரியாக கடை பிடித்தால் சமுதாயத்தில் பாகுபாடு என்ற நிலை முற்றிலும் ஒழியும். அதை ஒவ்வொருவரும் உணர்ந்து மனிதநேயத்தை உறுதிப்படுத்தும் வகையில் தீண்டாமையை அகற்றி நல்லிணக்கத்துடன் வாழவேண்டும்.

    அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜக்கிய நாடுகளை சேர்ந்த அனைத்து நாடுகளிலும் இலக்கீடுகளை நிர்ணயித்து 2030-க்குள் அதனை செயல்படுத் துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதனடிப்படையில் மத்திய, மாநில அரசின் சார்பில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிகழ்ச்சியில் மனித நேயம் குறித்து பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் பேச்சுத்திறன் வாயிலாக விரிவாகவும், சிறப்பாகவும் எடுத்துரைத்தனர். இதனை கருத்தில் கொண்டு எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைவரும் மனித நேயத்துடன் செயல்பட்டு, பிறருக்கு உதவும் மனப்பான்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், அரசு வழக்கறிஞர் (வன்கொடுமை) துஷாந்த் பிரதீப்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு, தூய்மை பணிபுரிவோர்களுக்கான கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களான ஆறுமுகம், பூமிநாதன், மலைச்சாமி, செல்வக்குமார், பிச்சை, மற்றும் பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே சக்கந்தியில் ரூ.1.69 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை தேர்ந்தெடுத்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சக்கந்தியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பல்வேறு துறைகளின் சார்பில் 288 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இதன் மூலம் பலதரப்பட்ட மக்கள் பயனடைகின்றனர்.

    பொது மக்களுக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவல கத்தை தேர்ந்தெடுத்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தின் கடைகோடிவரை மக்கள் பயனடைவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார்.
    • ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிரா விடர் நலம் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை சார்பில், ரூ.2.80 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் சிறப்பாக நடைபெற்றது. காரைக்காலை அடுத்த கோட்டிச்சேரி சிங்காரவேலர் திருமண மண்டபத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி, மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், ஆதிதிராவிட நலத் துறையின் உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் பயனாளிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி, பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி, நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு மாதம் ரூ.3000 வீதம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளை, அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், கலெக்டர் முகம்மது மன்சூர் பேசுகையில், இந்த ஆண்டு காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பட்ஜெட்டில் இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏழை களுக்கான உதவித்தொகை அவர்களுக்கு சரியாக சென்று சேர வேண்டும். கல்விக்காக செலவு செய்வதை யாரும் குறை கூற மாட்டார்கள். சுய உதவி குழுக்கள் மூலம் நிறைய திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    • 49 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 331 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமை யில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊன முற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 331 மனுக்கள் பெறப்பட்டன.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 16 பயனா ளிகளுக்கு பல்வேறு வகை யான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த முரளி என்பவர் தீ விபத்தால் இறந்ததையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சம் , காரைக்குடி வட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததையொட்டி அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

    செபாஸ்டின் என்பவர் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த போது கொரோ னாவால் உயிரிழந்ததை யொட்டி, அவரது வாரிசு தாரரான மனைவிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சம், தேவகோட்டை வட்டத்தைச் சார்ந்த ஜெகதீசுவரன் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1லட்சம் என மொத்தம் ரூ.8லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சாக்கோட்டை ஊராட்சியைச் சார்ந்த 10 மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மொத்தம் ரூ.6 லட்சத்துக்கான காசோலை உள்ளிட்ட மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    • த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லா கான் அறிவுரையின் பேரில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பபுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை ஏழைகளுக்கு வழங்கினர். 170 குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி, உணவு பொருட்கள் ரூ. 1லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாய், 12 பேருக்கு ரூ.500 வீதம் ரூ.6 ஆயிரம், கல்வி உதவியாக ரூ.22 ஆயிரம், மருத்துவ உதவி 2 பேருக்கு ரூ.20 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பில் உதவிகளை மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா தலைமையில் கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    இதில் ம.ம.க. செயலாளர் பாலகிருஷ்ணன், த.மு.மு.க., ம.ம.க. பொருளாளர் நவீன் பாதுஷா, மூத்த நிர்வாகி செய்யது முகமது, கிளை நிர்வாகிகள் மதார், அர்ஜுணை குமார், கரீம் கனி,ஹபீப் ராஜா,பாருக் உசேன், ராஜா சலீம்,ரியாஸ், நாகூர் கனி, சேக், அஜாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சி 16 கால் மண்டபம் பகுதியில் நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 16 கால் மண்டபம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ஆறுமுகம், ஜெயராமன், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர். மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர். பகுதி துணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கவுன்சிலர்கள் சிவசக்தி ரமேஷ், கருப்பசாமி, வக்கீல் ஸ்ரீதர், தனுஷ்கோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.7.84 கோடி மதிப்பில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக முதல்-அமைச்சர் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையின சமூகத்தினர் சமூக கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில், மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் போன்ற நிலை களில் தங்களது நிலையை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செய்ல்பட்டு வருகிறார்.

    அதன் அடிப்படையில் சமுதாயத்திலுள்ள இதர பிரிவினருக்கு சமமான நிலையினை அனைத்துத் துறைகளிலும் அவர்கள் அடைவதை இலக்காக கொண்டும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் அதே பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட் டுள்ளது. டாப்செட்கோ கடன் திட்டம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    7 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பில் இலவச தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு பல்வேறு அரசு துைறகளின் சார்பில் பல கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளன. முஸ்லிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் சார்பில் 286 பெண்களுக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், உலமாக்கல் மற்றும் இதர பணியாளர் நலவாரியம் சார்பாக ரூ.72 ஆயிரம் மதிப்பில் கடனு தவியும் வழங்கப்பட்டுள்ளது.

    டாம்கோ திட்டத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் 101 பயனாளிகளுக்கும், 12 ஆயிரத்து 162 பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 6ஆயிரத்து69 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சம் மதிப்பில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின பிரிவை ேசர்ந்த 5,346 மாணவ-மாணவி களுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் (மே 2021 முதல் ஜூன் 2023 வரை) ராமநாதபுரம் மாவட்டத்தில் 25460 பயனாளிகளுக்கு ரூ.7கோடியே 48லட்சத்து 87ஆயிரத்து 172 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • அய்யங்கோட்டை பள்ளிக்கு ரூ.9.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட் டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் கழிவறை வசதியின்றி மாணவ-மாணவிகள் வயல் வெளி யை பயன்படுத்தி வந்தனர். இது பற்றி தகவலறிந்த நகரி வைகை அக்ரோ நிறுவனம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது,

    ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி கருப்பண் ணன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகே சன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் காளீஸ்வரி வரவேற்றார்.

    இந்த விழாவில் வட்டார கல்வி அலுவலர் ஜெசிந்தா நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். அக்ரோ இயக்குநர் குணசேகரன் ஸ்மார்ட் டி.வி. வழங்கினார்.

    இதில் ஆசிரியர்கள் வைகை அக்ரோ நிறுவன பணியாளர்கள் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    ×