என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "win"

    • தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தோல்வியால் மனமுடைந்து வெளியேறினர்
    • தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இந்தியர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இறுதிப்போட்டிவரை எந்த மேட்சிலும் இரண்டு அணிகளும் தோல்வியடையாமல் முன்னேறி வந்த நிலையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.

    இந்தியர்கள் என்ற அடிப்படையில் இந்த வெற்றியை ஒரு பக்கத்தில் இருந்தே பெரும்பாலானோர் பார்க்கும் நிலையில் வெற்றிக்காக கடுமையாக போராடிய தென் ஆப்பிரிக்க அணி தோல்வியால் மனமுடைந்துள்ளதை பற்றி சிலர் மட்டுமே எண்ணியிருக்கக் கூடும்.

     

    ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இந்தியர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்களும், அணியின் பணியாளர்களும் மைதானத்தைவிட்டு  மிகவும் வருத்தத்துடன் வெளியேறியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் தென் ஆபிரிக்க வீரர்களை நோக்கி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் [We love you] என்று கோரஸ் செய்து  கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வரும் நெட்டிஸன்கள், இந்தியர்களின் நல்லியல்பை எண்ணி பெருமைப்பட்டு வருகின்றனர். 

    • முதல்வர் பதவியை சம்பய் சோரன் கடந்த 3-ம் தேதி ராஜினாமா செய்தார்.
    • சுயேட்சை உறுப்பினர் சரயுராய் பங்கேற்கவில்லை.

    ராஞ்சி:

    ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய முடிவு செய்தது.

    இதையடுத்து ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அன்றே அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார். இதற்கிடையே ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது.

    இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், முதல்வர் பதவியை சம்பய் சோரன் கடந்த 3-ம் தேதி ராஜினாமா செய்தார். அதன்பின் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

    இந்நிலையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை யில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1 எம்.எல்.ஏ., பா.ஜனதாவுக்கு 24 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

    நம்பிக்கைத் தீர்மானத்தை முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒரு மணி நேரத்தை சபாநாயகர் ரவீந்திரநாத் மஹ்தோ ஒதுக்கினார். இதையடுத்து விவாதம் நடந்தது.

    பின்னர் நடந்த வாக்கெடுப்பில் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. சுயேட்சை உறுப்பினர் சரயுராய் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    மத்திய அரசு பணியாளர் தேர்வில் மைக்கேல்பட்டி மாணவி இந்திய அளவில் 338-வது இடத்தை பிடித்துள்ளார்.
    பூதலூர்:

    மத்திய அரசு நடத்திய மத்திய தேர்வாணைய தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ளன. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்–பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ரவி என்பவரின் மகள் ஏஞ்சலின் ரெனிட்டா (23) அகில இந்திய அளவில் 338-வது இடத்தை பிடித்தார்.

    ஆரம்பம் முதல் மேல்நிலை படிப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்று, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி. இ. வேளாண்மை முடித்தவர் ஏஞ்சலின்ரெனிட்டா. தொடக்க கல்வியை மைக்கேல்பட்டி உதவி–பெறும் தொடக்கப்–பள்ளியில் படித்தார். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடியமைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்–பள்ளியில் படித்தவர்.

    10-ம் வகுப்பில் 490 மதிப்பெண்ணும் 12-ம் வகுப்பில் 1158 மதிப்பெண் பெற்றார். சென்னையில் பி.இ. வேளாண்மை முடித்த பின்னர் முழு வீச்சில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயார் படுத்திக்கொண்டார். தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றார். 

    இவரது அண்ணன் எம். டெக் படித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அண்ணன்-தங்கை இருவரும் பொறி–யியல் படித்திருந்த போதிலும் முயற்சியுடன் முனைந்து படித்து முதல் தடவையில் மத்திய அரசு தேர்வாணைய தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்த ஏஞ்சலின் ரெனிட்டாவை பெற்றோர்கள், உறவினர்கள் நண்பர்கள் பாராட்டினார்கள்.

    • வெற்றி பெற்ற ஆட்டோ டிரைவர் பால்ராஜிடம் வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் ராஜம் வழங்கினார்.
    • 148 வாக்குகள் பெற்று நாச்சியார் என்பவர் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் கண்ணன் வழங்கினார்.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் விடுபட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலி பதவியிடங்களுக்கான தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் அம்பை யூனியன், வாகைகுளம் ஊராட்சி 8-வது வார்டுக்கும், சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டுக்கும் உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல் நடந்தது.

    நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் வாகைகுளம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக பால்ராஜ் என்பவர் 70 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பால்ராஜ் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். அவரது வார்டில் மொத்தம் 197 வாக்குகள். ஆனால் அதில் 142 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. அவருக்கு வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் ராஜம் வழங்கினார்.

    தென்காசி

    இதேபோல் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக ஜெயந்தி என்பவர் 106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் மேலப்பாவூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் 4 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 306 வாக்குகள் பதிவான நிலையில் 148 வாக்குகள் பெற்று நாச்சியார் என்பவர் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் கண்ணன் வழங்கினார். இவர்கள் நாளை மறுநாள்(15-ந்தேதி) பதவி ஏற்கின்றனர்.

    பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெலா சிட்டி அணியை வீழ்த்தி சூப்பர் நோவாஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #WomenT20 #Velocity #Supernovas
    ஜெய்ப்பூர்:

    3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் சந்தித்தன.

    ‘டாஸ்’ ஜெயித்த வெலா சிட்டி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சூப்பர் நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 5 பந்துகளில் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெலா சிட்டி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களே எடுத்தது. இதனால் சூப்பர் நோவாஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேனிலி வியாத் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் மிதாலி ராஜ் 40 ரன்னுடனும், வேதா கிருஷ்ணமூர்த்தி 30 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். லீக் ஆட்டங்கள் முடிவில் சூப்பர் நோவாஸ், வெலா சிட்டி, மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

    ரன்-ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ், வெலா சிட்டி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. டிரைல் பிளாசர்ஸ் அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இறுதிப்போட்டி ஜெய்ப்பூரில் நாளை இரவு நடக்கிறது. #WomenT20 #Velocity #Supernovas
    ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் என நடிகை ஜெயபிரதா கூறினார். #JayaPrada
    நகரி:

    தெலுங் கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல நடிகை ஜெயபிரதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து, மாநிலங்களவை எம்.பி.யாகவும் பணியாற்றினேன். தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவின் வசம் வந்த பிறகு என்னை மிகவும் அவமதித்தனர். அப்போது அமர்சிங், என்னை சமாஜ்வாடி கட்சியில் சேர்த்துவிட்டார்.

    2004-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எனக்கு உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

    எனக்கு கட்சியில் செல்வாக்கு உயர்ந்தது அக்கட்சியில் இருந்த அசம்கானுக்கு பிடிக்கவில்லை. 2009-ம் ஆண்டு மீண்டும் எனக்கு ராம்பூர் தொகுதி வழங்கப்பட்டதால் என்னை தோற்கடிக்க அசம்கான் முயற்சி செய்தார். இருப்பினும் நான் வெற்றி பெற்றேன்.

    அகிலேஷ் யாதவுடன் அமர்சிங்குக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் என்னையும், அவரையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தனர். இதற்கிடையே, அசம்கான் என்மீது ஆசிட் ஊற்ற முயன்றார். மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து என்னை அசிங்கப்படுத்தினார். இதையடுத்து 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி சார்பில் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தேன். அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி இருந்தேன்.

    ஆந்திர மாநிலம் ராஜமுந்தியில் நான் பிறந்திருந்தாலும், ராம்பூர் தொகுதி மக்கள் என்மீது காட்டிய அன்பு அளப்பரியது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை விடவில்லை. அந்த நேரத்தில் எனக்கு ராம்பூர் தொகுதியில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பு அளித்தது.

    அதனால் அக்கட்சியில் இணைந்து ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் அசம்கான் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. ராம்பூர் தொகுதி மக்கள் என்னை 3-வது முறையாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொச்சியில் நேற்றிரவு நடந்த புரோ கைப்பந்து போட்டி 4-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 15-10, 12-15, 15-13, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் மும்பா வாலியை வீழ்த்தியது. #ProVolleyballLeague
    கொச்சி:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோத வேண்டும்.

    இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு அரங்கேறிய 4-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி, மும்பா வாலியை எதிர்கொண்டது. திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 15-10, 12-15, 15-13, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் மும்பா வாலியை வீழ்த்தியது. கோழிக்கோடு அணியில் அதிகபட்சமாக அஜித் லால் 16 புள்ளிகள் சேகரித்தார். கோழிக்கோடு அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே தனது முதல் லீக்கில் சென்னை அணியை தோற்கடித்து இருந்தது.

    இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ்- ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. #ProVolleyballLeague

    ‘புரோ கைப்பந்து லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது’ என்று அந்த அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் நம்பிக்கை தெரிவித்தார். #ProVolleyballLeague
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி வருகிற 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு வீரர்களுடன் 2 வெளிநாட்டினரும் இடம் பெறுவார்கள்.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிப்ரவரி 2-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கிலும், பிப்ரவரி 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 லீக் ஆட்டம் மற்றும் அரையிறுதி, இறுதிப்போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் அரங்கேறுகிறது. தினசரி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி 1, சோனி 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    ஒவ்வொரு ஆட்டமும் 5 செட்கள் கொண்டதாகும். முதலில் 15 புள்ளியை எட்டும் அணி செட்டை வெல்லும். 5-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு மொத்தம் 3 வெற்றி புள்ளிகள் கிடைக்கும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளி எதுவும் கிடைக்காது. 3-2 மற்றும் 4-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு 2 வெற்றி புள்ளிகள் மட்டுமே கிட்டும்.

    புரோ கைப்பந்து லீக் போட்டிக்கான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கடந்த 12-ந் தேதி முதல் ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. போட்டி குறித்து சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    புரோ கைப்பந்து லீக் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. போகப்போக இந்த போட்டி மக்களை நிச்சயம் வெகுவாக கவரும். இந்த போட்டியின் மூலம் பல இளைஞர்கள் கைப்பந்து ஆட்டத்தில் ஈடுபட முற்படுவார்கள். இதுபோன்ற போட்டிகளில் பண பலன் கிடைப்பதால் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கைப்பந்து ஆட்டத்தில் களம் இறக்க ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து ஆடுவதன் மூலம் நமது வீரர்கள் நல்ல ஆட்ட அனுபவத்தை பெற முடியும். இதன் மூலம் இந்திய கைப்பந்து அணியின் தரம் உயரும். இது இந்திய அணி சர்வதேச போட்டிகளில் வெற்றி வாகை சூட வழிவகுக்கும். போட்டி முழுவதும் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுவதால் வீரர்கள் பிரபலம் அடைவதுடன் அவர்களின் வாழ்க்கை ஸ்டைலும் மாறும்.

    போட்டியில் பல விதிமுறை மாற்றம் செய்து இருப்பதன் மூலம் இந்த லீக் போட்டி 20 ஓவர் கிரிக்கெட் போல் விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளும் சமபலம் வாய்ந்தவை தான். எனவே போட்டி தினத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ? அந்த அணி வெற்றி பெறும். சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் நவின் ராஜா ஜேக்கப், ஒலிம்பிக் போட்டியில் ஆடிய கனடாவை சேர்ந்த ரூடி, லாத்வியாவை சேர்ந்த ருஸ்லான் மற்றும் கபில்தேவ், அக்கின் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். செர்வ், அட்டாக்கிங் உள்பட எல்லா துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே இந்த போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு ஷெல்டன் மோசஸ் கூறினார். #ProVolleyballLeague
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள காளைகளில் சிறந்த காளை மற்றும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. #Jallikattu #AlanganallurJallikattu
    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் பச்சைக் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகளை அடக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கி உள்ளனர். இன்றைய ஜல்லிக்கட்டில் 1400 காளைகள் பங்கேற்றுள்ளன. காளைகளை அடக்குவதற்கு சுமார் 848 வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.

    ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாயும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    இன்றைய ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்களில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு கார் பரிசாக வழங்கப்படுகிறது. இதேபோல் சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஒரு கார் பரிசு வழங்கப்படுகிறது. இத்தகவலை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.



    ஜல்லிக்கட்டு போட்டிகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்காக மதுரை எஸ்பி தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Jallikattu #AlanganallurJallikattu
    சென்னையில் தொடங்கிய தேசிய ஹாக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி வெற்றி பெற்றது. #Nationalhockey
    சென்னை:

    ஹாக்கி இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் 9-வது தேசிய ஹாக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 41 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த தொடக்க விழாவில் தமிழ்நாடு கூடைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஆதவா அர்ஜூனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஹாக்கி பிரிவு தலைவர் சேகர் மனோகரன், பொதுச்செயலாளர் ரேணுகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எழும்பூரில் நடந்த சாஷ்த்ரா சீமா பால்-மணிப்பூர் அணிகள் இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முன்னதாக நடந்த ஆட்டங்களில் மத்திய பிரதேச ஹாக்கி அகாடமி அணி 9-0 என்ற கோல் கணக்கில் பீகாரையும், தெலுங்கானா அணி 5-3 என்ற கோல் கணக்கில் உத்தரகாண்ட் அணியையும், ஜார்கண்ட் அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஐம்மு-காஷ்மீர் அணியையும் தோற்கடித்தன. ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டங்களில் மத்திய செயலக அணி 20-0 என்ற கோல் கணக்கில் குஜராத்தையும், பெங்களூரு அணி 20-1 என்ற கோல் கணக்கில் திரிபுராவையும் விரட்டி அடித்தன. #Nationalhockey
    தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, துவக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

    மதிய நிலவரப்படி ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை தாண்டி, 86 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வர் ஆவது உறுதியாகிவிட்டது.



    இந்நிலையில், காஜ்வெல் தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் துவக்கத்தில் இருந்தே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சந்திரசேகர ராவ், 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் வந்தேரு பிரதாப் ரெட்டி 2ம் இடத்தைப் பிடித்தார். பாஜக வேட்பாளர் அகுல விஜயா நான்காம் இடத்திற்கு பின்தங்கினார். #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
    பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி பெற்றன. #ICCWomensWorldT20 #AUSWvPAKW #WIWvBANW
    புரோவிடென்ஸ்:

    பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் (பி பிரிவு) இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது. அதன்பின்னர் நள்ளிரவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில்

    ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி துவக்க வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தினால் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.

    துவக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி, பெத் மூனே ஆகிய இருவரும் தலா 48 ரன்கள் விளாசினர். கேப்டன் மெக் லேனிங் 41 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முன்னணி வீராங்கனைகள் சோபிக்காத நிலையில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பிஸ்மா மரூப் 26 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களே சேர்த்தது. இதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.



    இன்று அதிகாலையில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் (ஏ பிரிவு) வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கசேத அணியை வீழ்த்தியது.

    இப்போட்டித் தொடரில் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். #ICCWomensWorldT20 #AUSWvPAKW  #WIWvBANW
    ×