என் மலர்
நீங்கள் தேடியது "Woman jewelry robbery"
- பெண்மணி வாங்கி கொடுத்த உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி உள்ளிட்ட சிலர் மயக்கமடைந்துள்ளனர்.
- அப்போது சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் நகையை பெண் திருடிச் சென்றுள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை.
இதனையடுத்து எரையூர் கிராமத்தில் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அக்கம் பக்கத்தினர் கூறியதையடுத்து நேற்று சண்முகம், அவரது மனைவி சிவசக்தி ஆகிய இருவரும் திருவள்ளூர் தேரடியில் இருந்து ஆட்டோ மூலம் எரையூர் கிராமத்திற்கு செல்வதற்காக ஏறியுள்ளனர்.
அதே ஆட்டோவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஏறியுள்ளார். செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு தானும் எரையூர் செல்வதாக கூறி ஆட்டோவில் பயணித்தவர் நட்பாக பழகியுள்ளார்.
இரவு நேரமானதால் அந்த 35 வயது பெண்மணி உணவு வாங்கி வந்து கொடுத்துள்ளார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி உள்ளிட்ட சிலர் மயக்கமடைந்துள்ளனர்.
அப்போது சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் நகையை அந்த பெண் திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து சரவணன் புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த 3 பேர் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாம்பரம்:
குரோம்பேட்டை நியூ காலனி, 12-வது தெருவில் உள்ள குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வருபவர் பிருந்தா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு அவர் பணி முடிந்து வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் மர்ம வாலிபர் வீட்டின் கதவை தட்டினான். பிருந்தா கதவை திறந்ததும் அவன் கத்தியை காட்டி மிரட்டி உள்ளே புகுந்தான். பின்னர் பிருந்தாவை கட்டிபோட்டு வாயில் துணியை திணித்தான்.
மேலும் பிருந்தா அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.
சிறிது நேரம் கழித்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பிருந்தாவை மீட்டனர்.
இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பெருமாள் பட்டியைச் சேர்ந்த குருமூர்த்தி மனைவி அமிர்தவல்லி (வயது29). இவர் சம்பவத்தன்று இரவு சென்னைக்கு செல்வதற்காக உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் வைத்திருந்த கைப்பையில் 14 பவுன் நகை இருந்ததாக தெரிகிறது.
அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதையடுத்து அமிர்தவல்லி உசிலம்பட்டி-தேனி மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு பஸ் நிலையம் திரும்பினார்.
இந்த நிலையில் அமிர்தவல்லி தற்செயலாக கைப்பையை சோதித்து பார்த்தார். அப்போதுதான் பையில் இருந்த 14 பவுன் நகைகள் திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அமிர்தவல்லி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குணசீலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
உசிலம்பட்டி போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 68). டாக்டரான இவர், அலங்காநல்லூரில் கிளீனிக் நடத்தி வருகிறார். வேலை நிமித்தமாக ராமலட்சுமி நேற்று திருநெல்வேலிக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார்.
திருமங்கலம் வந்தபோது ராமலட்சுமி வைத்திருந்த கைப்பை மாயமாகி இருந்தது. அதில் 11 பவுன் நகையும், ரூ.16 ஆயிரம் ரொக்கமும் இருந்தது. அதிர்ச்சியடைந்த ராமலட்சுமி பஸ் முழுவதும் தேடிப்பார்த்தும் கைப்பை கிடைக்கவில்லை.
இது குறித்து ராமலட்சுமி திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். அதில், பஸ்சில் பயணம் செய்தபோது எனது அருகில் அமர்ந்திருந்த பெண் நகை, பணத்தை திருடியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் நகை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டி பட்டி பழனியப்பா தெருவை சேர்ந்தவர் அகிலா(வயது22). இவர் அதேபகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி செல்வக்குமாரி என்பவரது அழகுநிலையத்திற்கு சென்றார்.
அங்கு தனது 5 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு முகஅலங்காரம் செய்து கொண்டிருந்தார். திரும்ப வந்து பார்த்தபோது சங்கிலி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
செல்வக்குமாரியிடம் கேட்டபோது தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அகிலா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்வக்குமாரி தங்கச்சங்கிலியை திருடியது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள மேல வன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 81) இவரது மனைவி சரோஜா (71). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
ராஜகோபால் காற்றுக்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு வெளியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவரின் மனைவி சரோஜா வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார்.
இதை நோட்டமிட்ட 4 மர்ம மனிதர்கள் நேற்று நள்ளிரவில் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சரோஜாவின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.
அப்போது திடுக்கிட்டு எழுந்த சரோஜா திருடன்.... திருடன்... என அலறினார். உடனே அந்த மர்ம மனிதர்கள் கத்தியை காட்டி சரோஜாவை மிரட்டினர்.
பின்னர் அவர் வாயில் துணியை வைத்து சரோஜாவின் கைகளை கயிற்றினால் கட்டி போட்டு விட்டு கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்க சங்கலியை பறித்து கொண்டு மர்ம மனிதர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
அப்போது வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்த ராஜகோபால் திடீரென கண் விழித்தார். வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது மர்ம மனிதர்கள் 4 பேர் வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தனர். உடனே ராஜகோபால் அந்த மர்ம மனிதர்களை பிடிக்க முயன்றார்.
அப்போது மர்ம மனிதர்களில் ஒருவன் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ராஜகோபாலை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் ராஜகோபால் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய மர்ம மனிதர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் வீட்டில் கட்டி போட்டிருந்த சரோஜாவையும் தாக்குதலில் காயம் அடைந்த ராஜகோபாலையும் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.
இது குறித்து குமராட்சி போலீசில் ராஜகோபால் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பத்தன்யாபுரம், சாமிக்கண்ணு தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 60). இவர் நேற்று இரவு மனைவியுடன் வெளியூர் செல்வதற்காக ஆலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது 3 வாலிபர்கள் சுற்றி வளைத்து முத்து மனைவி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதில் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கதறிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசில் முத்து புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் பாண்டியராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகிறார். #Tamilnews
பரமக்குடி:
பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட அ.காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு, விவசாயி. இவருடைய மனைவி பூமயில் (வயது 42).
கணவன்-மனைவி இருவரும் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் யாரோ மர்ம மனிதன் அவர்களது வீட்டின் மேற்கூரையை பிரித்து வீட்டுக்குள் புகுந்தான்.
அவன், பூமயில் கழுத்தில் அணிந்திருந்த 3 தங்க சங்கிலிகளை பறித்தான். அப்போது கண் விழித்த பூமயில் கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம மனிதன் பூமயில் கழுத்தில் கிடந்த 3 தங்க சங்கிலிகளையும் பறித்துக்கொண்டு ஓடினான். அவனை ராசுதுரத்தி சென்றார். அதற்கு பலன் இல்லை.
இதுகுறித்து நயினார் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. 15 பவுன் நகைகள் கொள்ளை போனதாக புகாரில் கூறப்பட்டு இருந்தது. இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கே.கே நகர் பிருந்தாவனம் குடியிருப்பில் வசித்த சந்திரா (வயது67). இன்று காலை 7 மணி அளவில் மருமகளுடன் வீட்டிற்கு அருகே உள்ள ராஜமன்னார் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் சந்திரா அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலிகிராமம் சாந்தி காலனியை சேர்ந்தவர் மேகலை (வயது65). அவர் தினமும் காலையில் அருணாச்சலம் சாலையில் உள்ள குபேர சாய் பாபா ஆலயத்திற்கு வந்து செல்வது வழக்கம்.
இன்று காலை 7 மணி அளவில் மேகலை கோவில் அருகே நடந்து வரும் போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் மேகலை அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்து சென்றனர்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த ராணி (வயது46). இன்று காலை நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த 3 செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews