search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women missing"

    • மூத்த மகள் இறந்ததால் வள்ளி செல்வம் மன விரக்தியில் இருந்து வந்தார்.
    • நம்பிராஜன் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 43). இவரது மனைவி வள்ளி செல்வம் (39). இவர்களது மூத்த மகள் கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்தார். இதனால் வள்ளி செல்வம் மன விரக்தியில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வள்ளி செல்வத்திற்கும், நம்பிராஜ னுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நம்பிராஜன் வெளியே சென்று விட்டார். அதன்பின் நம்பிராஜன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வள்ளி செல்வத்தையும், அவரது 10 வயது மகளையும் காண வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நம்பிராஜன் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி மாயமான வள்ளி செல்வம் மற்றும் அவ ரது மகளை தேடி வருகிறார்.

    • நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் மாயமாவது அதிகரித்து வருகிறது.
    • கடந்த 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடுமுழுதும் சுமார் 13 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

    புதுடெல்லி:

    தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. கடந்த, 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதில் 2021ல் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளனர்.

    இந்த காலகட்டத்தில் 18 வயதுக்கும் கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமியர் காணாமல் போயுள்ளனர்.

    இவற்றில் மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 57 ஆயிரம் பெண்கள் மாயமாகி உள்ளனர்.

    யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் தான் அதிக அளவில் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அக்சா வின்சி பெனிட்டாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
    • கடந்த 23-ந் தேதி மாலை காரில் வெளியே சென்ற அக்சா வின்சி மீண்டும் வீடு திரும்பவில்லை.

    நெல்லை:

    தச்சநல்லூர் சுகர் மில் காலனியை சேர்ந்தவர் மைக்கேல் பிரபாகர். இவரது மகள் அக்சா வின்சி பெனிட்டா (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது அவரை பிரிந்து தனது தந்தை மைக்கேல் பிரபாகர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 23-ந் தேதி மாலை வீட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டு சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக அவரது தந்தை தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெனிட் டாவை தேடி வருகின்றனர்.

    • கடந்த 1- ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், மறுபடியும் வீடு திரும்பவில்லை.
    • அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தீபா (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1- ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், மறுபடியும் வீடு திரும்பவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுபோல் சேலம் தாத காப்பட்டி, தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). கடந்த மாதம் 28- ம் தேதி வீட்டில் இருந்து வேலை விஷயமாக வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி

    சேலம் சின்னத்திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் தேவதர்ஷினி (20). இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த இவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இது குறித்து அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    சேலம் திருவாக்கவுண்ட னூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (27). கடந்த 1- ம் தேதி வீட்டில் இருந்து அவர் திடீரென மாயமானார். இது குறித்து அவரின் கணவர் பூபதி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சூரமங்கலம் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    சேலம் இரும்பாலை அருகே உள்ள பூமிநா யக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (50). இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 1- ம் தேதி அருகில் உள்ள மளிகைக் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்யா தனது மகளை அழைத்து கொண்டு மார்க்கெட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய் -மகளை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை நெகமம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 34). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா (28). இவர்களது மகள் ஷாதனய் (2). சம்பவத்தன்று சத்யா தனது மகளை அழைத்து கொண்டு மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் அவர்களை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

    இதையடுத்து முருகேசன் நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய் -மகளை தேடி வருகின்றனர். 

    • குடும்ப பிரச்சினை மற்றும் வீட்டைவிட்டு வெளியே சென்ற பெண்கள் திடீரென மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    போடி புதுகாலனியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி அமுதா(36). இவர்களுக்கு பிரியதர்ஷன், தேவ்பிரசாத் என 2 மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அமுதா தனது 2-வது மகன் தேவ்பிரசாத்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்வதாக வீட்டில் கூறிச்சென்றார்.

    ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த அறிவுச்செல்வம் மகன் சாருலதா(21). இவர் கம்பத்தில் உள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சாருமிதா மாயமானார். அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு பிள்ளைகளை பார்க்க வேண்டி வேதாம்பாள் வ.உ.சி. நகரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.
    • குடும்பத்தினருக்கும், வேதாம்பாளுக்கும் இடைேய பிரச்சிைன ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பச்சப்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி வேதாம்பாள் (வயது 59).

    இந்த தம்ப திக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பெரியசாமி, தனது மனைவியுடன் திருச்சியில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிள்ளைகளை பார்க்க வேண்டி வேதாம்பாள் வ.உ.சி. நகரில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது குடும்பத்தி னருக்கும், வேதாம்பாளு க்கும் இடைேய பிரச்சிைன ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வேதாம்பாள் கடந்த 8-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். இதுவரையிலும் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அக்கம், பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து கிச்சிப் பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேதாம்பாளை தேடி வருகின்றனர்.மாயமான அன்று சிமெண்ட் கலர் புடவை அணிந்திருந்தார். எனவே அவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி கிச்சிப்பாளையம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது68). இவரது மகள் மகராசி (29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மாப்பிள்ளை பார்த்து வந்தனர். 

    இந்த நிலையில் வீட்டில் இருந்த மகராசி கடந்த 23-ந்தேதியன்று திடீரென்று காணவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்க வில்லை. இதுதொடர்பாக சண்முகசுந்தரம் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகராசியை தேடி வருகிறார்கள்.

    நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த பட்டன்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் சுபலட்சுமி (18). இவருக்கும் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி முதல் சுபலட்சுமியை காணவில்லை.

    இது குறித்து சுந்தர்ராஜ் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபலட்சுமியை தேடி வருகிறார்கள்.
    மதுரை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண்கள் மாயமானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மேலூர் அருகே உள்ள சேக்குப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் காளீஸ்வரி (வயது17).

    இவர் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள சித்தப்பா வெய்யமுத்து (30) வீட்டில் தங்கி கூத்தியார்குண்டு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    தினமும் வீட்டில் இருந்து பஸ்சில் காளீஸ்வரி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 15-ந்தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் காளீஸ்வரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காளீஸ்வரியை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்....

    டி.குன்னத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (25) தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 15-ந்தேதி திடீரென மாயமானார்.

    இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×