என் மலர்
நீங்கள் தேடியது "worker kills"
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே அரும்பாரத்தபுரம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 52). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது ஆஸ்பெட்டாஸ் கூரை வீட்டை மனைவி பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் செப்பனிடும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆஸ்பெட்டாஸ் கூரை சரிந்து விழுந்ததில் முருகானந்தம் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே முருகானந்தம் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவரது தம்பி தினேஷ் (28).
இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான தென்னை மரங்கள் கஜா புயலில் சாய்ந்ததால் அதனை சக தொழிலாளர்களுடன் இணைந்து வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தென்னை மரம் முறிந்து ரமேஷ் மீது விழுந்தது.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு உள்ளிக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேசை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதுபற்றிய புகாரின் பேரில் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான ரமேசுக்கு பிரேமலத (32) என்ற மனைவியும், சாதனா (3) என்ற மகளும் உள்ளனர்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் புறக்குட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 57). இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
தமிழரசன் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று மாலை மது குடித்து விட்டு வீட்டுக்கு மது பாட்டில் வாங்கி வந்தார்.
மது பாட்டில் வைத்திருந்த இடத்தில் துணி வெளுக்க வைக்கும் ஆலா பாட்டில் இருந்ததால் குடிபோதையில் மது என நினைத்து ஆலா பாட்டிலை எடுத்து குடித்து விட்டார். இதில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த தமிழரசனை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பொள்ளாச்சி:
ஆனைமலை அருகே உள்ள சின்னப்பன் பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (24). மில் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முருகானந்தம் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர். அவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியதை சிலர் பார்த்தாக கூறினார்கள்.
இந்த நிலையில் சுந்தரபுரியில் உள்ள ஆழியாறில் முருகானந்தம் பிணமாக மிதந்தார். அவரது உடலை ஆனைமலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் ஆற்றில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீதிபதி (வயது 43). இவர் கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று தனது வீட்டில் குடிநீர் பிடிப்பதற்காக மோட்டாரை இயக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீதிபதி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் நீதிபதியை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நீதிபதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது அண்ணன் விஜயராஜ் தேவாரம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பயர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (27). இவர் சென்னையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். தற்போது சென்னை துறைமுகம் 5-வது வாயிலில் அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால நடைபாதை பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று இரவு மற்ற தொழிலாளர்களுடன் குமரேசனும் வேலை செய்து கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
இதில், நடை மேம்பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த ரெயில்வே மின்சார கம்பியில் விழுந்தார். இதனால் குமரேசன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியானார்.
இதை கண்ட மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உடல் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.
காவிரி ஆற்றில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்
இந்த நிலையில் மறையூர் அக்ரஹார தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிசாமி (வயது 52) என்பவர் நேற்றுமாலை சித்தர்காடு காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு அவர் மதுகுடித்தார். ஆனால் அவருக்கு போதை ஏறாததால் ஆத்திரம் அடைந்தார். இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் தகராறு செய்தார்.
பின்னர் இந்த கடை சரக்கு சரியில்லை. நான் அக்கரையில் உள்ள கடைக்கு மது குடிக்க போகிறேன் என்று கூறினார். இதைகேட்டு மற்றவர்கள் ‘வேண்டாம்.. ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது,’’ என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் காதில் வாங்கி கொள்ளாமல் காவிரி ஆற்றில் குதித்து நீந்த தொடங்கினார்.
அப்போது ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆழமான பகுதிக்கு சென்ற அவரால் நீந்த முடியாமல் தத்தளித்தார். பிறகு சில நிமிடங்களில் பழனிசாமி ஆற்று தண்ணீருடன் அடித்து செல்லப்பட்டார்.
இதைபார்த்து கரையில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையிலும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் இளைஞர்கள் காவிரி ஆற்றில் பழனிசாமி உடலை தேடி பார்த்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடைக்கு சுற்றி செல்லாமல் காவிரி ஆற்றில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.