search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker missing"

    • வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமானார்
    • மனைவி போலீசில் புகார் அளித்தார்


    கரூர்:

    கரூரில் கூலி வேலைக்கு சென்ற தொழிலாளி மீண்டும் வீடு திரும்பா ததால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். கரூர் அருகே, மணவாடி, பெருமாள் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், மனைவி கோகிலா கரூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 23-ந் தேதி கடைக்கு சென்ற மணிகண்டன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
    • இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி ஜோதி ராமலிங்க தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (45). தொழிலாளி. சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கடந்த 23-ந் தேதி கடைக்கு சென்ற மணிகண்டன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராசிபுரத்தில் நெசவு தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் டவுன் நரசிம்மன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 62). நெசவு தொழிலாளி. இவர் கடந்த மாதம் 18-ந் தேதி நெல்லை மாவட்டம், தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக அவரது நண்பர் ஒருவருடன் சென்றிருந்தார். விழாவில் கலந்து கொண்டுவிட்டு ரெயிலில் புறப்பட்டு ராசிபுரத்திற்கு வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த மாதம் 20-ந் தேதி விடியற்காலையில் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கி உள்ளனர்.

    பிறகு அங்கிருந்து ராசிபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றனர். புதிய பஸ் நிலையத்தில் இறங்கிய சந்திரன் அவரது நண்பரை வீட்டுக்கு போகச் சொல்லியுள்ளார். ஆனால் சந்திரன் அவரது வீட்டுக்கு செல்லவில்லை.

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கு சென்றவர் ஊர் திரும்பிய நிலையில் வீட்டுக்கு திரும்பி வராததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் தெரியவில்லை. இது பற்றி சந்திரன் மனைவி சாந்தி (59) தனது கணவர் மாயமானது குறித்து ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். இது பற்றி ராசிபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பாகூர் அருகே தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுவை பாகூர் தாமரைக்குளம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது55).தொழிலாளி. இவர் கடந்த 29-ந்தேதி சென்னைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஏகாம்பரம் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஏகாம்பரத்தின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் இது குறித்து பாகூர் போலீசில் ஏகாம்பரத்தின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஏகாம்பரத்தை தேடி வருகின்றனர்.

    பொன்னேரி அருகே தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #missing

    பொன்னேரி:

    பொன்னேரி என்.ஜி.ஓ. நகர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்பாபு (55). தொழிலாளி. இவர் கடந்த 15-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உறவினர் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.

    தக்கலை மற்றும் கோட்டாரில் நர்சிங் மாணவி, தொழிலாளி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
    தக்கலை:

    தக்கலையை அடுத்த மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் முருகன். பால்வெட்டும் தொழிலாளி. இவரது மகள் அனிஷா (வயது 21). இவர் நர்சிங் படித்துள்ளார்.

    இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்து நாகர் கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அனிஷா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    நாகர்கோவில் கோட்டார் பூசாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (41). தொழிலாளி. இவர் கடந்த மாதம் 15-ந்தேதி வீட்டில் இருந்து மதுரைக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றார். சில நாட்கள் கழித்து அவரை தொடர்பு கொண்ட போது எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லை.

    இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தொழிலாளி நாராயணனை தேடி வருகிறார்கள்.
    பாவூர்சத்திரம் அருகே குளத்தில் நண்பருடன் குளிக்க சென்ற தொழிலாளி மாயமானதால் இன்று 2-வது நாளாக தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வணிகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது 40). கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். நண்பர்களான இவர்கள் இருவரும் மாலையில் கீழப்பாவூருக்கு வடக்கு பகுதியில் உள்ள மேலப்பாவூர் குளத்துக்கு குளிக்கச் சென்றனர். சமீபத்தில் பெய்த மழையால் குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் சென்று வருகிறது.

    இந்தநிலையில் குளிக்க சென்ற சுடலையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் அவரை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சுடலை குளத்தில் மூழ்கியிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆகவே அதுபற்றி ஆலங்குளம், சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வீரர்கள் குளத்துக்கு விரைந்து வந்து சுடலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் பாளையங்கோட்டையில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குளத்தில் ரப்பர் படகு மூலம் தீவிரமாக தேடினர். பின்பு இரவாகி விட்டதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

    சுடலையை தேடும் பணி இன்று 2-வது நாளாக மேற்கொள்ளப்பட்டது.
    ×