என் மலர்
நீங்கள் தேடியது "World Environment Day"
- வனப்பகுதியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பேணி காப்பது, தீயிலிருந்து வனத்தை காப்பாற்றுவது, வேட்டைகளில் இருந்து வன உயிரினங்களை காப்பாற்றுவது போன்ற விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது.
- இது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்ற இரண்டு வாரங்கள் நடைபெற உள்ளது.
பழனி:
கொடைக்கானல் வனக்கோட்டம், பழனி வனச்சரகத்தின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பழங்குடியினர் வசிக்கும் இடங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம வனக்குழு மக்களை தேர்வு செய்து அந்தந்த கிராமங்களில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் வனப்பகுதியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பேணி காப்பது, தீயிலிருந்து வனத்தை காப்பாற்றுவது, வேட்டைகளில் இருந்து வன உயிரினங்களை காப்பாற்றுவது போன்ற விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. இதில் பழனி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் மற்றும் பிரேம்நாத், ஜெயசீலன், வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புக்காவலர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டனர். இது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்ற இரண்டு வாரங்கள் நடைபெற உள்ளது.
மேலும் காற்று மாசினை தடுக்கும் விதமாக தேக்கந்தோட்டம் வன சோதனை சாவடியிலிருந்து வருகிற ஜூன் 20-ந் தேதி காலை 7 மணிக்கு மிதிவண்டி வைத்திருப்போர் பழனி வாழ் மக்கள் ஒன்றிணைந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நெகிழிகளை அகற்ற ஒன்று சேருமாறு பழனி வனச்சரத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நகரமன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்களிடம் உள்ள பயனற்ற பொருட்களை குறைத்தல், மறு பயன்பாடு, மற்றும் மறு சுழற்சி என்ற அடிப்படையில் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள், பழைய துணிகள் மற்றும் பயன்படாத காலணிகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை சேகரிப்பதற்காக நகராட்சி வளாகம், நந்தீஸ்வரர் கோயில் அருகில், பஸ் நிலையம், வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் ஆகிய 4 இடங்களில் பயனற்ற பொருட்களை வாங்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை நகர மன்ற தலைவர் மோகனவேல் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், மணிவண்ணன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
- மராத்தான் போட்டி அண்ணா ஸ்டேடியத்தில் தொடங்கி ஆயுதப்படை மைதானம், பாளை பஸ் நிலையம் வழியாக மீண்டும் அண்ணா ஸ்டேடியத்தை வந்தடைந்தது.
நெல்லை:
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியை பாதுகாக்கவும், மாவட்டத்தின் மக்கள் அனைவரும் நம் மண்ணை பாதுகாக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மராத்தான் போட்டி பாளை அண்ணா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் நடந்த இந்த மராத்தான் அண்ணா ஸ்டேடியத்தில் தொடங்கி ஆயுதப்படை மைதானம், பாளை பஸ் நிலையம் வழியாக மீண்டும் அண்ணா ஸ்டேடியத்தை வந்தடைந்தது.
சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த போட்டியானது ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் என தனித்தனியாக பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது. சிறியவர்கள் முதல் இளம் வயதினர், முதியவர்கள் வரையிலும் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர். இதில் முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 5 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 4 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 3 ஆயிரமும் என ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் 4 முதல் 50 இடங்கள் வரை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ. 200 ஊக்க பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மராத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன.
- இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
சென்னை:
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் அரசு காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படுகிறது.
இதன் தொடக்க விழா தி.நகர் பஸ்நிலையம் அருகே இன்று நடந்தது. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:- உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன. இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் மக்கள் பாதிக்க கூடிய சூழல் உள்ளது.
தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சுற்று சூழலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழுக்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை. இதை தீவிரப்படுத்த வேண்டும்.
இதை தனிமனிதரால், சாத்தியப்படுத்த முடியாது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப் பாளர் மு.ஜெயராமன், பசுமைத்தாயம் மாநில செயலாளர் அருள், இணை செயலாளர்கள் எஸ்.கே.சங்கர், சத்ரிய சேகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, முத்துக்குமார், அடையார் வடிவேல், சவுமியா அன்பு மணியின் மகள் சுஞ்சத்ரா சவுமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுற்றுப்புற சூழலை பாதுகாக்க உறுதி மொழியினை வேளாண் அலுவலர் நடராஜன் வாசித்தார்.
- வருவாய் கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் உலக சுற்றுப்புற சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சுற்றுப்புற சூழலுக்கு நன்மைதரும் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க உறுதி மொழியினை வேளாண் அலுவலர் நடராஜன் வாசித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, கிராம விரிவாக்கப் பணியாளர் புவனேஷ்வரி செயல்விளக்க உதவியாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர், சண்முகம் மற்றும் மதகடிப்பட்டு உழவர் உதவியகத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
- உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடம் செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் ஆணையர் (பொ) ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடம் செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்க வேண்டும், சுற்றுப்புற பகுதியை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு மரங்களின் அவசியம் எடுத்துரைக்க அனைத்து பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் அனைத்து வார்டுகளில் விநியோகம் செய்யப்பட்டன.
- உலக சுற்றுசூழல் தினம் முன்னிட்டு நடந்தது
- உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலையில் உலக சுற்றுசூழல் தினம் முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் தலைமை தாங்கினார் ஏலகிரி மலை போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இதில் தனியார் கல்லூரி மாணவிகள் ஏலகிரி மலை இயற்கை பூங்கா உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.
இவ்விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஸ்டாண்டத்தான் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இதுதவிர, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்ய உள்ளனர்.
மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 74 நாடுகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.
இதையும் படியுங்கள்.. ரெய்டு பயத்தால் வாய் திறப்பதில்லை அதிமுக- பாரதிய ஜனதா மீண்டும் தாக்கு
- தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி அறங்காவலர் டாக்டர் கல்பனா சங்கர் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் துணை பொது மேலாளர் பிரபாகரன் மற்றும் முதன்மை பொது மேலாளர் மோசஸ் வழிகாட்டுதலின்படி 130-க்கும் மேலான மகளிர் குழு பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு கொண்டாடப்பட்டது.
ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் ஜெய்சங்கர் சமூக ஒருங்கிணைப்பு மேலாளர் நடராஜன் இணைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் டில்லிபாபு, ஒன்றிய குழு உறுப்பினர் யுவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி அன்பரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வஜ்ஜிரவேல், அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் ரகு, கிராம ஊராட்சி செயலாளர் ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுற்று சூழல் தின உறுதிமொழி மரக்கன்றுகள் வழங்குதல் விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது தூய்மை பணியாளர்கள் சவுசியா பரிசு வழங்கப்பட்டது.
சௌமியா செழியன் உதவி மண்டல பயிற்சியாளர் ரேவதி ராஜேஷ் மற்றும் அனுப்பிரியா இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
- உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
- மரக்கன்றுகள் நடும் விழாவும் நடந்தது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா மற்றும் இளைஞர் மன்றத்தின் சார்பில் கொட்டரை கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பரஞ்சோதி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் திருமுருகன், துணை தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா மரக்கன்று நடுதலை தொடங்கிவைத்தார்.
சிறப்பு விருந்தினராக தத்தனூர் எம்ஆர்சி கல்விநிறுவன செயலாளர் கமல்பாபு கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில் 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆதனூர் அரசு டாக்டர் முத்துசாமி, கிராம முக்கியஸ்தர்கள் பொன்னுசாமி, தர்மதுரை, மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பாஞ்சாலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- உலக சுற்றுச்சூழல் தினம்
- 500 வகையான மரக்கன்றுகள் நட்டனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், நாற்றம்பள்ளி ஒன்றியம் எக்லாஸ்புரம் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பலவகையான மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர். இ.எஸ்.பாரதிசேட்டு, துணைத்தலைவர், தினகரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதேபோல், அம்பலூர் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500 பல்வேறு வகையான பலன் தரும் மரக்கன்றுகள் நட்டனர்.
- பல்வேறு இயற்கைப் பாதுகாப்பு முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- மஞ்சப்பை திட்டத்திற்கு வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
சென்னை:
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, 'மீண்டும் மஞ்சப்பை' என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
அதன்படி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த இயந்திரத்தை இன்று அறிமுகம் செய்துவைத்தார். இந்த இயந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் செலுத்தினால் துணியால் ஆன மஞ்சள் பை வழங்கும். மேலும் கள ஆய்வுக்காக புதிய 25 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர்.
மேலும், சோதனை முயற்சியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு தொடங்கி வைத்தார். வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் சந்தையில இந்த வசதி தொடங்கபட்டுள்ளதால், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், மீண்டும் மஞ்சப்பை, பசுமைத் தமிழகம் இயக்கம், முதன்முறையாக Tamil Nadu Green Climate Company என்னும் சிறப்பு நோக்க வாகனம் உள்ளிட்ட பல இயற்கைப் பாதுகாப்பு முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், உலகச் சுற்றுச்சூழல் நாளில் நமக்கு இருப்பதே ஒரே உலகம் என்பதை மனதில்கொண்டு, அனைத்து வகையிலும் அதனைக் காக்கப் பாடுபடுவோம் என்றும் தெரிவித்திருந்தார்.