search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yoga training"

    • மன உளைச்சலை போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது.
    • காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்குப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலு வலகத்தில் காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது. இதில் ஏராளமான காவலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.போலீஸ் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொ ள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றகூடிய அதிவிரைவு படை மற்றும் ஆயுதப்படை காவலர்களு க்குமாநகரகாவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில்வாழ்க வளமுடன் அமைப்பின் சார்பில் யோகா பயிற்சி அளிக்க ப்பட்டது.

    இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சி களும் அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் பணியாற்ற கூடிய காவ லர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட னர்.

    • காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
    • யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் காவலர்க ளுக்கு சரியான உடற்பயிற்சி அல்லது மன வலிமையை ஊக்குப்படு த்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொ ள்ளப்பட வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு இயக்குனர் சங்கர் வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்ற க்கூடிய காவலர்களுக்கு மனவலிமையை ஊக்கப்படு த்தும் நோக்கத்துடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதி காவல் உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் ரயில் நிலையம் அருகில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சி களும் அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு காவல் நிலையம்,15 வேலம்பாளை யம் காவல் நிலையம் மற்றும் வடக்கு மகளிர் காவல் நிலைய காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    • இளைஞர் வல்லமையும் என்ற பண்பாட்டுக் கல்வி ஒரு வருட கல்வியாக அளிக்கப்பட்டது.
    • பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஜி.மோகன் தலைமை தாங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் பள்ளியில்வேதாத்திரி மகரிஷியின் யோகமும் இளைஞர் வல்லமையும் என்ற பண்பாட்டுக் கல்வி ஒரு வருட கல்வியாக அளிக்கப்பட்டது. இதில் 416 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மாணவர்களின் அனுபவ உரை செயல்பாட்டு அறிக்கை சிறப்பாக செய்த மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஜி .மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் சுதா மோகன் வரவேற்று பேசினார். வாவிபாளையம் அறக்கட்டளை நிர்வாகிகள் பொருளாளர் அசோக்குமார் மற்றும் யோகமும் இளைஞர் வல்லமையும் தலைவர் சுந்தரமுத்து ஆகியோர் பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் யோகா ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கமும், ஆங்கிலத்துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • பேராசிரியர் வேலாயுதம், மாணவர்களுக்கு யோகாசனம் எவ்வாறு பயில்வது மற்றும் எவ்வாறு பயிற்சி செய்வது பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கமும், ஆங்கிலத்துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது. ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் பர்வதவர்த்தினி சிறப்பு விருந்தினரை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தாா். சிறப்பு விருந்தினர் கணினி துறை தலைவர் பேராசிரியர் வேலாயுதம், மாணவர்களுக்கு யோகாசனம் எவ்வாறு பயில்வது மற்றும் எவ்வாறு பயிற்சி செய்வது பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான உதயவேல், மற்றொரு சிறப்பு விருந்தினரான விலங்கியல் துறை பேராசிரியர் லிங்கதுரையை அறிமுகம் செய்தார்.

    நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பு விருந்தினரான டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் கணேஷ், மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். இயற்பியல் துறை தலைவர் பாலு, முனைவர் சேகர், பொருளியல் துறை பேராசிரியர் மாலைசூடும் பெருமாள், வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த முனைவர் அந்தோணி சகாய சித்ரா, பேராசிரியர் செல்வகுமார் மற்றும் நிவேதா உள்பட திரளான மாணவர்கள் பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றனர்.

    • மதுரை ஜெயிலில் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
    • குற்ற சம்பவங்களில் இருந்து விலகி, நல்வாழ்க்கை நடத்த வழிவகை செய்யும் என்று ஜெயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    மதுரை

    சர்வதேச யோகாதினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மத்திய ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் வழங்குவது என்று சிறை நிர்வாகம் முடிவு செய்தது.

    மதுரை மத்திய சிறையில் 680 தண்டனை கைதிகள், 842 விசாரணை கைதிகள், 166 நீதிமன்ற விசாரணை கைதிகள், 299 தடுப்புக்காவல் கைதிகள் உள்பட மொத்தம் 1987 சிறைவாசிகள் உள்ளனர்.

    இவர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி நேற்று தொடங்கியது.

    நிகழ்ச்சியில் மதுரை மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை மத்திய ஜெயில் கைதிகளுக்கு யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்கள் ஜெயிலில் இருந்து ஆனபிறகு குற்ற சம்பவங்களில் இருந்து விலகி, நல்வாழ்க்கை நடத்த வழிவகை செய்யும்" என்று ஜெயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • கம்பம் பள்ளியில் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இதில் பல்வேறு வகையான ஆசனங்கள் செய்து ஆசிரியர்கள் பயனடைந்தனர்

    கம்பம் :

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால், உடல் ரீதியாகவும், மனரீதியா கவும் சோர்வடைந்ததை போக்கவும், ஆசிரியர்கள் சுறுசுறுப்புடன் இருக்கும் வகையிலும்,உலக யோகா தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இருபால் ஆசிரியர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வழங்கப்ப ட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் காந்தவாசன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் சுகன்யா காந்தவாசன் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர்கள் ராஜேந்திரன், ரவிராம் யோகா பயிற்சியினை வழங்கினர்.இதில் அர்த்தசக்கராசனம், அர்த்த காதி சக்கராசனம், திரிகோணாசனம், உட்கட்டாசனம், உஷட்ராசனம் உள்ளிட்ட ஆசனங்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. பள்ளி முதல்வர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜப்பான் மாணவிகள் ராஜகோபுரம் எதிரே ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்தனர். #KalahastiTemple #Yoga
    ஸ்ரீகாளஹஸ்தி:

    சென்னையைச் சேர்ந்த யோகா ஆசிரியரான பாஸ்கர் என்பவர் ஜப்பான் நாட்டில் உள்ளார். அவர், அங்கு யோகா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.

    அவருடைய யோகா மையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவிகளில் 50 பேர், 2 நாள் சுற்றுப் பயணமாக ஆந்திரா வந்தனர்.

    அவர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்தனர். ஜப்பான் மாணவிகள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தைச் சுற்றிப்பார்த்தனர். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள தூண்கள், மண்டபங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை பார்த்து வியந்தனர். அந்தச் சிற்பங்கள் அழகிய வடிவில் அற்புதமாக உள்ளதாக ஜப்பான் மாணவிகள் கூறினர்.

    அதைத்தொடர்ந்து ஜப்பான் மாணவிகள் சிவன் கோவிலின் ராஜகோபுரம் எதிரே ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்தனர். இதையடுத்து ராகு-கேது பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். அவர்களுக்கு கோவில் அதிகாரிகள் அனைத்து வசதி ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.  #KalahastiTemple #Yoga
    சர்வதேச யோகா தினத்தையொட்டி திருவாரூர் அருகே அரசு பள்ளியில் நடந்த யோகா பயிற்சியில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார்.
    திருவாரூர்:

    சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திருவாரூர் அருகே விளமலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடந்தது. இதில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார். இதில் யோகா பயிற்றுனர் பல்வேறு ஆசனங்கள் செய்து காண்பித்தார். அதனை பின்பற்றி கலெக்டர் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் யோகா செய்தனர். இதுகுறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் கூறுகையில்,

    யோகா பயிற்சி மேற்கொள்வதால் ஞாபக சக்தி, ரத்த ஓட்டம், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் சிறப்பாக செயல்படும். மேலும் உடல் நலம், மன வளம் மேன்மை அடையும். எனவே அனைத்து தரப்பு மக்களும் யோகாவினால் பல பயன்கள் பெறமுடியும் என்பதால் தினந்தோறும் யோகா செய்ய வேண்டும் என கூறினார். இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி நடைபெற்றது.

    மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, பின்லே மேல்நிலைப்பள்ளி, அரசினர் கலைக்கல்லூரி ஆகியவற்றின் தேசிய மாணவர் படை சார்பில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடந்தது. இதில் 150 தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இதில் தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். யோகா பயிற்சி முறை குறித்த கையேடுகளை சுபைதார் ஜெயசீலன் மாணவர்களுக்கு வழங்கினார். முன்னதாக பின்லே தேசிய மாணவர் படை அதிகாரி டேனியல் ராஜாஜி வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அதிகாரி திவாகர் செய்து இருந்தார். முடிவில் அரசினர் கலைக்கல்லூரி என்.சி.சி. அதிகாரி ராஜன் நன்றி கூறினார்.
    தஞ்சையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற யோகா பயிற்சியில் 340 இளநிலை போலீசார் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பணியாற்றும் போலீசாருக்கு அதிகளவில் பணிசுமை உள்ளதாகவும், இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போலீஸ் அதிகாரிகள் முதல் போலீஸ்காரர் வரை தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்தன. இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உயர் அதிகாரிகளின் டார்ச்சர் மற்றும் பணிசுமை காரணமாக மன அழுத்தம் போலீசாருக்கு ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டப்படுவதாக தெரிய வந்தது.

    இதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அவ்வப்போது யோகா பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த யோகா பயிற்சி காரணமாக மன அழுத்தம் குறைந்து தற்கொலைக்கு தூண்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும் போலீசார் புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உதவுகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் உள்ள இளநிலை போலீஸ் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான யோகா பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் தஞ்சை, வல்லம், திருவையாறு ஆகிய சப்-டிவிசன்களில் இருந்து இளநிலை போலீசார் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 340 பேர் கலந்து கொண்டனர். காவலர்களுக்கு யோகா செய்வது குறித்த பயிற்சியை திருச்சி யோகா மாஸ்டர் ராமசாமி வழங்கினார்.

    ×