என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young-lady"

    இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் ஜோ சாண்ட்லர் என்ற 23 வயது இளம்பெண் கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளார்.
    லண்டன் :

    இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இளம்பெண் ஜோ சாண்ட்லர் (வயது 25). இவருக்கு சிறு வயது முதலே சாண்ட்விச் மீது கொள்ளை பிரியம். இதனால், பள்ளி கூடத்தில் படிக்கும்போது கூட லஞ்ச் பாக்சில் சாண்ட்விச்சுகளையே எடுத்து சென்றிருக்கிறார். கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளார்.

    அவரது 2 வயதில் இருந்து இந்த பழக்கம் ஆரம்பித்து உள்ளது. மற்ற உணவுகளை சாண்ட்லரின் பெற்றோர் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதனை ஏற்காமல் அவர் முகம் திருப்பி கொள்வார். மற்ற உணவுகள் உடல்ரீதியாக அவருக்கு ஒத்து கொள்ளவில்லை. எண்ணெயில் பொரிக்கப்பட்டு எடுக்கும் உருளைக்கிழங்கு வறுவலில் தினமும் 2 பேக் எடுத்து கொள்வார்.

    வெண்ணெய் தடவிய வெள்ளை பிரட்டையும் சாப்பிடுவார். இதுபற்றி சாண்ட்லர் கூறும்போது, எனக்காக எனது தாயார் வாங்க கூடிய ஒரு பொருள் உருளைக்கிழங்கு வறுவலே. அதனையும், மிருது தன்மை வரும்வரை வாயில் போட்டு உறிஞ்சுவது வழக்கம் என கூறுகிறார்.

    பள்ளியில் படிக்கும்போது எனது உணவாக வெண்ணெய் தடவிய பிரட்டின் நடுவே வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு வறுவல்களையே (ஒரு வகையான சாண்ட்விச்) எடுத்து செல்வேன் என கூறுகிறார். அது ஒன்றையே சாப்பிட நான் விரும்புவேன். சில சமயங்களில் காலை உணவாக உலர்ந்த தானியங்களை சாப்பிடுவேன்.

    மதிய உணவு, இரவு உணவாக மேற்கூறிய சாண்ட்விச்சுகளையே எடுத்து கொள்வேன். ஒரு சில சமயங்களில் பாலாடைக்கட்டி மற்றும் வெங்காய வறுவல்களையும் சாப்பிடுவேன் என கூறுகிறார். இதனால், ஒரு கட்டத்தில் அவருக்கு மூளை மற்றும் நரம்புகளை பாதிக்க கூடிய தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் நோய் தாக்கம் ஏற்பட்டு உள்ளது. இது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் பாதிப்புகளை கொண்டது.

    இதனால் பயந்து போன சாண்ட்லர் உடல்நலம் தேற மருத்துவர் டேவிட் கில்முர்ரி என்பவரை சந்தித்து உள்ளார். அவர் அளித்த சிகிச்சையின் பயனாக, முதன்முறையாக பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் பிற உணவுகளையும் சாண்ட்லர் சாப்பிட தொடங்கியிருக்கிறார். சீச்சீ... இந்த பழம் புளிக்கும் என கூறி வந்த அவர், ஸ்டிராபெர்ரி பழங்கள் எவ்வளவு சுவையாக உள்ளன என என்னால் நம்ப முடியவில்லை என கூறுகிறார்.

    இவருக்கு ஏற்பட்டுள்ள வியாதி நியோபோபியா என மருத்துவ உலகில் கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின்னர் சாண்ட்லர், புளூபெர்ரி, ஸ்டிராபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களையும், முட்டைகோஸ், கடலைகள் மற்றும் பிற உணவுகளையும் எடுத்து வருகிறார். அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெற உள்ள தனது திருமணத்தில் ஒரு முழு உணவையும் எடுத்து கொள்வேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

    இதையும் படிக்கலாம்...அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் குறித்த பரபரப்பு தகவல்
    புளியங்குடியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள வெள்ளானகோட்டையை சேர்ந்தவர் முருகேசன். இவரும், அதே பகுதியை சேர்ந்த கற்பகசெல்வி(33) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  கற்பக செல்வி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் கடன் வாங்கியதாகவும், அதனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    அதனை அடைப்பதற்கு மனைவியின் நகைகளை அடகு வைத்துள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

     இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவினாசி அருகே தெக்கலூரில் உள்ள ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார்.
    • நேற்று முன்தினம்இரவு சுவேதா செளத்ரி குழந்தையுடன் தூங்க சென்று விட்டார்.

    அவினாசி:

    உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அமித் (வயது30) .இவர் அவினாசி அருகே தெக்கலூரில் உள்ள ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி சுவேதா செளத்ரி (26) மற்றும் 8 மாத பெண் குழந்தையும் உள்ளது. நேற்று முன்தினம்இரவு சுவேதா செளத்ரி குழந்தையுடன் தூங்க சென்று விட்டார். இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அமித் அறையை திறந்து பார்த்தபோது சுவேதா செளத்ரி மின்விசிறியில் தூக்கில் தொங்கிகொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சுவேதா சௌத்ரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரஞ்சித்குமார் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
    • தீயை அனைத்து சரண்யாயை மீட்டனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கோவை,

    கோவை சிறுமுகையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). இவரது மனைவி சரண்யா (29). கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் வலியால் அலறி துடித்து சத்தம் போட்டார்.அவரின் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.அவர்கள் தீயை அனைத்து சரண்யாயை மீட்டனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவன்-மனைவி பிரச்சினையால் 3 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படத்தி உள்ளது.

    இதேபோன்று பொள்ளாச்சி மரபேட்டை வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் (42). கூலி தொழிலாளி. அவரது மனைவி கிருத்தியா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் மகேந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கிருத்தியா கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரிஷிதேவ் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கோவை,

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சவுரவ்குமார் ரிஷிதேவ் (வயது 18). இவர் கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுரவ்குமார் ரிஷிதேவுக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த இளம்பெண்ணை அவர் ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் கூறியும் அவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக சவுரவ்குமார் ரிஷிதேவ் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்ததினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட சவுரவ்குமார் ரிஷிதேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  

    • சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.
    • இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி(31). இவர் சம்பவத்தன்று கோவில்மட்டம் பகுதிக்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கு உறவினை சந்தித்து பேசி விட்டு மீண்டும், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    ஒன்னட்டி-கோவில்மட்டம் செல்லும் சாலையில் வந்த போது, அங்கு சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • இளம்பெண் மகனுடன் வெளியில் சென்றார்.

    கோவை 

    பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவ–ருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்தார். ஆனாலும் இளம்பெண் வாலிபருடனான கள்ளக்கா–தலை தொடர்ந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மகனுடன் வெளியில் சென்றார். அதன்பின்னர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து இளம்பெ–ண்ணின் கணவர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மனைவிக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றிய தகவல் எனக்கு தெரிந்ததும், நான் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் எனது மனைவி எனது மகனுடன் அந்த வாலிபருடன் சென்றி–ருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே எனது மனைவி மற்றும் மகனை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் முதல் தெரு பகுதியில் இளம்பெண் மாயம்.
    • நேற்று மாலை 6 மணிக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. சைக்கிள் ஸ்பேர்ஸ் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆயிஷா (வயது 18). பள்ளிப் படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் குடும்பத்தி னர் நேற்று மாலை 6 மணிக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். குடும்பத்தினர் கடையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது ஆயிஷா அங்கு இல்லை. திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கம், அருகிலுள்ள இடங்களில் தேடியும் எங்கும் ஆயிஷாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

    • புகாரின் பேரில் போலீசார் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    கோவை

    பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த திவ்யா (22) என்பவரை கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அர்ஜூன் அவரது உறவினர் திருமணத்துக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பினார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் திவ்யா கோபித்து கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்றார். உடனே அர்ஜூன் தனது அண்ணன் ஆனந்த் மற்றும் தாயார் வசந்தியை அைழத்து கொண்டு திவ்யாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு 3 பேரும் சேர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அர்ஜூன், திவ்யாவை தாக்கினார். பின்னர் அங்கிருந்து 3 பேரும் சென்றனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் 3 பேரும் திவ்யாவின் வீட்டுக்கு சென்றனர்.

    அப்போது திவ்யா மற்றும் அவரது தாயாரை, அர்ஜூன் மற்றும் ஆனந்த் தாக்கினர். இதில் திவ்யா காயம் அடைந்தார். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் திவ்யாவை மீட்டு கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து திவ்யா கோமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அர்ஜூன், அவரது அண்ணன் ஆனந்த் மற்றும் தாயார் வசந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரும் சேர்ந்து டிராவல்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.
    • ரோகித்துடன் மது குடிப்பதற்காக ரேஸ்கோர்சில உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார்.

    கோவை 

    கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள ராஜா அண்ணாமலை ரோட்டை சேர்ந்தவர் துரை.இவரது மகன் விக்னேஷ் (வயது 28). இவரது நண்பர் சீர நாயக்கன் பாளையத்தை சேர்ந்த ரோகித் (26). இவர்கள் 2 பேரும் சேர்ந்து டிராவல்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.

    விக்னேசுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்தநிலையில் இளம்பெண் மன்சூர் அலி என்ற வாலிபருடன் பழகி வந்தார். இது சம்பந்தமாக விக்னேசுக்கும், மன்சூர் அலிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அவர் தனது நண்பர் ரோகித்துடன் மது குடிப்பதற்காக ரேஸ்கோர்சில உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். மது குடித்த பின்னர் 2 பேரும் 5-வது மாடியில் இருந்து 1-வது மாடிக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த மன்சூர் அலி தான் மறைத்து வைத்து இருந்த பீர் பாட்டிலால் விக்னேசை தாக்கினார். இதனை தடுக்க சென்ற ரோகித்தையும் பீர் பாட்டிலால் குத்தினார். இதில் அதிர்ச்சியடைந்த 2 பேரும் அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றனர்.

    அப்போது இவர்களை பின் தொடர்ந்து சென்ற அஸ்கர் அலி என்பவர் காரில் மறைத்து வைத்து இருந்த இரும்பு கம்பியால் 2 பேரையும் தாக்கினார். 2 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மன்சூர் அலி, அஸ்கர் அலி ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள். 

    • மாரிமுத்து. கடந்த 2019 ம் ஆண்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றார்.
    • அங்கு பணியாற்றிய 29வயது பெண்ணை சந்தித்தார்.

    திருச்சி :

    திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் தீயணைப்பு துறை குடியிருப்பில் வசித்து வருபவர் தீயணைப்பு வீரர் மாரிமுத்து. இவர் கடந்த 2019 ம் ஆண்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றார்.

    அப்போது அங்கு பணியாற்றிய 29வயது பெண்ணை சந்தித்தார். பின்னர் அவரை காதலிப்பதாக கூறி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் தங்கியிருக்கும் தீயணைப்பு துறை குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதில் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். பின்னர் கருக்கலைப்பிற்கான மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்டது. அதன்பின் தீயணைப்பு படை வீரர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

    இது குறித்து அந்தப் பெண் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீயணைப்பு படை வீரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தியாகதுருகம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 36) கொத்தனார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் கவிதா (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் கவிதா தியாகதுருகம் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கமாக கடைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×