என் மலர்
நீங்கள் தேடியது "youths arrested"
- கீழ்மதுரை ரெயில் நிலையம் அருகே 24 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் இளைஞர்களை குறிவைத்து சமூக விரோதிகள் கஞ்சா விற்பது அதிகரித்துள்ளது. மதுரையில் உள்ள கீழ்மதுரை ரெயில் நிலையம் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கீழ்மதுரை ரெயில்நிலையம் அருகே மறைவான இடத்தில் பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது 24 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சிடைந்த போலீசார் 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திடீர்நகர் அலாவுதீன் தோப்பு சலீம் மகன் சசீர் (வயது23), வாடிப்பட்டி வினோபா நகர் சொக்கலிங்கபுரம் காந்தி மகன் திலீப் குமார் (22), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வெள்ளாளர் தெரு செல்வம் மகன் குருமூர்த்தி(20), உசிலம்பட்டி வடக்கு தெரு நரியம்பட்டி சந்திரன் மகன் சரத்குமார் (22) என்று தெரியவந்தது.
இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார்.
- ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர்.
சென்னை:
சென்னையில் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற நேரங்களில் ரெயிலில் இருந்து பயணிகள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் பறக்கும் ரெயிலில் இளம்பெண் ஒருவர் செல்போன் பறிப்பின்போது தவறி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பிரீத்தி. பட்டதாரி இளம்பெண்ணான இவர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி பறக்கும் ரெயிலில் பயணம் செய்தார்.
அடையாறு இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் வைத்து நடைமேடையில் நின்று கொண்டிருந்த 2 பேர் பிரீத்தி செல்போனை பறித்தனர்.
ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்று பிரீத்தி சுயநினை வை இழந்தார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரீத்தி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். இதில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த வினோத், அடையாறை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரும் பிரீத்தியின் செல்போனை பறித்து அவரது உயிரிழப்புக்கு காரணமானது தெரியவந்தது.
இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழிப்பறி மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ரெயில் நிலையங்களில் இதுபோன்று நடைபெறும் செல்போன் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கண்ணூர் ரெயில் நிலையம் வரை பெண்ணுக்கு 3 பேரும் தொடர்ந்து தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளனர்.
- நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலிசாரிடம் பெண் பயணி புகார் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
நாகர்கோவிலில் இருந்து மங்களூருவுக்கு ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
அதிகாலை இயக்கப்பட்ட போதிலும் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பயணிக்கிறார்கள். இந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் நேற்று இளம்பெண் ஒருவர் பயணித்தார்.
அந்த பெண் பயணித்த பொதுப்பெட்டியில் பயாஸ்(26), முகம்மது ஷபி(36), அப்துல் வாஹித் (35) ஆகியோரும் பயணித்துள்ளனர். குடிபோதையில் இருந்த அவர்கள், அந்த பெண் பயணியிடம் தவறாக நடந்துள்ளனர்.
கண்ணூர் ரெயில் நிலையம் வரை அந்த பெண்ணுக்கு அவர்கள் 3 பேரும் தொடர்ந்து தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளனர். அவர் கண்டித்தும் வாலிபர்கள் 3 பேரும் தொடர்ந்து அத்துமீறியபடி இருந்துள்ளனர்.
இதனால் அந்த பெண் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதையடுத்து ரெயில் நடுவழியில் நின்றது. டிக்கெட் பரிசோதகர் பொதுப்பெட்டிக்கு வந்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது யார்? என்று விசாரித்தார்.
அப்போது அந்த பெண், வாலிபர்கள் 3 பேரும் தன்னிடம் தவறாக நடந்ததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து 3 வாலிபர்களையும் சக பயணிகள் பிடித்து ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலிசாரிடம் அந்த பெண் பயணி புகார் தெரிவித்தார். அதன்பேரில் 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
- மான்வேட்டை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே யுள்ள எலவனாசூர் கோட்டை பகுதியில் உள்ள காடுகளில் மான்வேட்டை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி எலவ னாசூர்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் எறையூர் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் 2 நபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றனர்.
அவர்களை அழைத்தபோது, 2 பேரும் தப்பியோடினர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் எறையூரை சேர்ந்த ராஜ் என்கிற அருள்ஜோதி (வயது 31), அம்புரோஸ் மகன் குறவன் என்கிற டேவில் செல்வராஜ் (40) என்பது தெரியவந்தது. இவர்கள் நாட்டுத் துப்பாக்கி மூலம் மான்களை வேட்டையாட முயற்சித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு கடத்திய 35 மூடை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அருப்புக் கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி 35 மூடைகள் ரேஷன் அரிசி இருந்தது. வேனில் வந்தவர் களை விசாரித்தபோது அவர்கள் கடலாடி தொண்டு நல்லம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது18), மதுரை பெருங்குடியைச் சேர்ந்த லோடுமேன் ஜோதிமுத்து (28) என்பது தெரியவந்தது.
மேலும் அருப்புக் கோட்டை அருகே உள்ள கே.எம்.கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேருக்கு சொந்தமான இடத்தில் இருநது மதுரை வில்லா புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. வேனுடன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டிரைவர், லோடுமேனை கைது செய்தனர்.
மேலும் சந்திரசேகர், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவம் குறித்து இளம்பெண் ஸ்ரீஹரிகோட்டா போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால் அவரது காதலன் காதலியை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள பிலிகாட் ஏரியில் காதலியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். இளம்பெண்ணின் காதலனை தாக்கி கை கால்களை கட்டி போட்டனர்.
இதனைக் கண்ட இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். அப்பபகுதியில் யாரும் இல்லாததால் இளம்பெண்ணை காப்பாற்ற யாரும் வரவில்லை.
பின்னர் 2 வாலிபர்களும் காதலன் கண்முன்னே அவரது காதலியை பலாத்காரம் செய்தனர்.
இதனை தடுக்க முடியாமல் காதலன் கடும் வேதனை அடைந்தார். வாலிபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து இளம்பெண் ஸ்ரீஹரிகோட்டா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இசக்கி, ராம்குமார் வைத்திருந்த லத்தி, கம்புகளை பிடுங்கி அவர்களையே சரமாரியாக தாக்கினர்.
- படுகாயமடைந்த 2 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு தொடர்பாக வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றனர்.
அப்போது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்களை தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் எச்சரித்தனர். இருப்பினும் அந்த கும்பல் அத்துமீறி நடந்து கொண்டதோடு இசக்கி, ராம்குமார் வைத்திருந்த லத்தி கம்புகளை பிடிங்கி அவர்களையே சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்கள் லத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் அசோக்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ்காரர்களை தாக்கியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கீழ பால்பாண்டி (வயது 31), கிளிராஜன் (24), பாஞ்சாலி ராஜா (40) பாண்டியராஜ்(22) ஆகிய 4 பேரை தட்டிதூக்கி கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த ராமநாதன் மகன் சரவணகார்த்திக்(33), சேவகன் மகன் முத்துராஜ்(34) ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
- கல்லூரி மாணவர்களான சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சந்துரு மற்றும் 2 கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, 2 கார்களில் வந்த 8 வாலிபர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வழிமறித்தனர். அத்துடன் அந்த பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டினர். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கானத்தூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். வாலிபர்கள் வந்த 2 கார்களையும் பொத்தேரியில் பறிமுதல் செய்தனர். அதில் ஒரு கார் இரும்புலியூரை சேர்ந்த சந்துரு என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்களான சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸுக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சந்துரு மற்றும் 2 கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
- காரில் வந்த பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டி உள்ளனர்.
- கைது செய்யப்பட்ட 4 பேருக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, 2 கார்களில் வந்த 8 வாலிபர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வழிமறித்து, அந்த பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டி உள்ளனர்.
இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கானத்தூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸுக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சந்துருவை தேடி வந்தநிலையில் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈசிஆர் சம்பவத்தில் கைதான சந்துரு அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்.
- திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள்
சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, 2 கார்களில் வந்த 8 வாலிபர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வழிமறித்து, அந்த பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டி உள்ளனர்.
இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸுக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சந்துருவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இசிஆர் கார் சம்பவத்தில் கைதான சந்துருவின் வாக்குமூல வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், "நான் எந்தக்கட்சியையும் சேராதவன். உறவினர்கள் மட்டுமே அதிமுகவில் இருக்கின்றனர். சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்கவே திமுக கொடியை காரில் பொருத்தினோம். மற்றபடி தங்களுக்கும் கட்சிக்கும் தொடர்பே இல்லை" என்று சந்துரு விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், சந்துருவின் வாக்குமூல வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "முகத்தை எங்கே வைத்துக் கொள்வார் எடப்பாடி பழனிசாமி? திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக் கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.
திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது.
திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?" என்று பதிவிட்டுள்ளார்.
- வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 22 புதுவை மது பாட்டில்கள் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே விழுப்புரத்தில் இருந்து வளவனூர் காவல் நிலையத்திற்கு எல்லை க்குட்பட்ட கலஞ்சிகுப்பம் பகுதியில் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்ததாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதாவிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவில் பேரில் டி.ஏஸ்.பி. உமாசங்கர் (பொறுப்பு) வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது களஞ்சிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த புகழ் (வயது 30) அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் ஆகிய இருவரும் புதுவையில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடமிருந்து 22 புதுவை மது பாட்டில்கள் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
- பெண்களின் குளியல் காட்சிகளை ஆபாச இணைய தளத்துக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எத்தனை வீடியோக்கள் எடுக்கப்பட்டது.
- யார்? யாருக்கு அனுப்பப்பட்டது என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
வேளச்சேரி:
வேளச்சேரி, தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இங்குள்ள கழிவறை அருகே நின்றபடி பெண்கள் குளிப்பதை 2 வாலிபர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விசாரித்த போது 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர்.
பொதுமக்கள் மடக்கி பிடித்து விசாரித்த போது வாலிபர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த செல்போனில் வீடியோக்களை அழித்தான். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபர்கள் 2 பேருக்கும் தர்ம அடி கொடுத்து வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் வேளச்சேரி பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீராம் (வயது 29). அவரது நண்பரான வெங்கடேசன் (32) என்பது தெரிந்தது.
அவர்களது செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போது அதில் வீடியோக்கள், புகைப்படம் எதுவும் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து 'ரெக்கவரி சாப்ட்வேர்' மூலம் செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்கள், படங்களை திரும்ப எடுத்தனர்.
இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் குளியல் வீடியோக்கள், ஆபாச படங்கள் இருந்தன. கைதான இருவரும் சாலையோரம் குளியல் அறை உள்ள வீடுகளை நோட்டமிட்டு அதில் தங்களது செல்போன்களை மறைத்து வைத்து பெண்களின் குளியல் காட்சிகளை பதிவு செய்து வந்து உள்ளனர். பலருக்கு அனுப்பினர்.
அந்த ஆபாச வீடியோக்களை அவர்கள் பார்த்து ரசித்து வந்த உள்ளனர்.
மேலும் பலருக்கு பெண்கள் குளியல் காட்சிகளை அனுப்பி உள்ளதும் தெரியவந்து உள்ளது.
பெண்களின் குளியல் காட்சிகளை ஆபாச இணைய தளத்துக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எத்தனை வீடியோக்கள் எடுக்கப்பட்டது.
யார்? யாருக்கு அனுப்பப்பட்டது என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்களை அவர்கள் மிரட்டி பணம் பறித்தனரா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கைதான இருவரும் வேளச்சேரி பகுதியில் காலை நேரங்களில் பல வீடுகளை நோட்டமிட்டு தங்களது செல்போனை கழிவறை பின் ஜன்னல்களில் மறைத்து வைத்து பெண்கள் குளிப்பதை வீடியோ பதிவு செய்து உள்ளனர்.
ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து செல்போன் வைத்து விட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து எடுத்து சென்று உள்ளனர்.
இதனை யாரும் கவனிக்காததால் அவர்களது ஆபாச வீடியோ பதிவு நீடித்தது உள்ளது.
அவர்கள் கடந்த 6 மாதத்துக்கு மேலாக இவ்வாறு குளியல் காட்சிகளை பதிவு செய்து உள்ளனர். அவர்கள் தாங்கள் பார்த்து ரசிப்பதற்கும், நண்பர்களுக்கு அனுப்பவும் பதிவு செய்து இருக்கிறார்கள். இணையதளத்தில் பெண்கள் குறியல் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறோம்.
பெண்கள் சிலரை ஆபாச வீடியோ பதிவை காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது.
ஆனால் இதுவரை எந்த புகாரும் வரவில்லை. பிடிபட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.