என் மலர்
நீங்கள் தேடியது "ஓலா எஸ்1 ப்ரோ"
- நண்பர்கள் 4 பேர் உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
- தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கஞ்சா மற்றும் குடி பழக்கத்துக்கு அடிமையான இவர் சத்தி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மாணவரை தாக்கி கொலை செய்தது யார் என்பது குற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக மாணவர் இறந்து கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாக காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மாணவரை அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது. காட்சிகளை கைபற்றி போலீசார் மாணவரை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய 2 சிறுவர்களை கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். இறந்த எங்களுடைய நண்பர் கஞ்சா மற்றும் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.
சம்பவத்தன்று நாங்கள் ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம். போதை தலைக்கேறிய நிலையில் நாங்கள் எங்களது நண்பருக்கு அறிவுரை கூறினோம். இதனை ஏற்க மறுத்த அவர் எங்களிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கினோம். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.
இதனால் பயந்த நாங்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார். தொடர்ந்து சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகிறார்கள்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கீழ்புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை இவரது மகள் சத்யா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வை சத்யா எழுதினார்.
கடந்த வாரம் தேர்வு முடிவு வெளியானது அதில் சத்யா 369 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்று சத்யா தனது நண்பர்களிடம் கூறி வருத்தமடைந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை சத்யா மண்எண்ணையை உடலில் ஊற்றி தீகுளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சத்யா கருகி இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வினை புதுவை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்து 949 மாணவர்களும், 7 ஆயிரத்து 906 மாணவிகளும் ஆக 14 ஆயிரத்து 855 பேர் எழுதினார்கள். அதில் 6 ஆயிரத்து 465 மாணவர்களும், 7 ஆயிரத்து 615 மாணவிகளுமாக 14 ஆயிரத்து 80 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அதாவது 94.78 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 5.43 சதவீதம் அதிகம் ஆகும். அரசு பள்ளிகளை பொருத்தவரை புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 88.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 9.97 சதவீதம் அதிகம் ஆகும்.
காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த 90.87 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 13.72 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரி பகுதியில் 5 அரசு பள்ளிகளும், 55 தனியார் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. காரைக்காலில் 4 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளது.
வேதியியல், பொருளியல் பாடத்தில் தலா 2 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 5 பேரும், வணிகவியலில் ஒருவரும், கணக்குப்பதிவியலில் 18 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 9 பேரும், வணிக கணிதத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். #Plus1Result
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புகளுக்கு அரசு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 7,039 மாணவர்களும், 7414 மாணவிகளும் என மொத்தம் 14453 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.
இதில் 6466 மாணவர்களும், 7116 மாணவிகளும் என மொத்தம் 13582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.97 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 94.06 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மேலும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 138 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 12 அரசு பள்ளிகளும், 28 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளி மாணவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 33 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் மாணவர்கள் 14 ஆயிரத்து 879 பேரும், மாணவிகள் 18 ஆயிரத்து 748 பேரும் ஆவார்கள். பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இதில் கோவை மாவட்டம் 97.67 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் 32 ஆயிரத்து 842 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 14 ஆயிரத்து 375 பேரும், மாணவிகள் 18 ஆயிரத்து 467 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 96.61 சதவீதமும், மாணவிகள் 98.50 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.48 சதவீதம் அதிகமாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-1 தேர்வில் மாநில அளவில் கோவை மாவட்டம் 3-வது இடம் பிடித்துள்ளது.
கோவை கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 384 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 13 ஆயிரத்து 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 97.98 ஆகும். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 827 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 4 ஆயித்து 672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 96.79 ஆகும். பேரூர் கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 746 பேர் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 591 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 97.70 ஆகும். எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 670 பேர் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 466 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 97.65 ஆகும்.
81 அரசு பள்ளிகளில் 7 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 7 ஆயிரத்து 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.78 ஆகும். 16 மாநகராட்சி பள்ளிகளில் 1,728 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,612 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 93.29 ஆகும். 4 நகராட்சி பள்ளியில் 576 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 545 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.62 ஆகும். 2 ஆதிதிராவிடர் பள்ளிகளில் 37 பேர் தேர்வு எழுதினர். இதில் 34 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 91.89 ஆகும். 7 சுய நிதி பள்ளியில் 714 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதில் 698 பேர் தேர்ச்சியடைந்தனர். இது 97.76 சதவீதம் ஆகும். 1 ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 131 பேர் தேர்வு எழுதினர். இதில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.24. 41 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 ஆயிரத்து 102 பேர் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 999 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.55 ஆகும். 203 மெட்ரிக் பள்ளிகளில் 15 ஆயிரத்து 715 பேர் தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 674 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 99.74 ஆகும்.
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டம் 97.93 சதவீதம் பெற்று மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்தது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 ஆயிரத்து 984 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 23 ஆயிரத்து 487 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த ஆண்டு 96.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது 1.53 சதவீதம் கூடுலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் 95.61, மாநகராட்சி பள்ளியில் 96.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருப்பூர் கலெக்டர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டு வெளியான பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பொன்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 27). இவர் சென்னையில் கைப்பை தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வந்தார்.
அப்போது பொன்னம் பூண்டி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பள்ளி விட்டு வீடு திரும்பிய அந்த மாணவியை ரகுநாதன் ஏமாற்றி தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரி டம் கூறி அழுதார். அதனை தொடர்ந்து அவர்கள் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ரகுநாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பின்னர் கைதான ரகுநாதனை விழுப்புரம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ரகுநாதன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை கப்பலூர் மில் காலனியை சேர்ந்த முருகா னந்தம் மகள் இளைய ராணி (வயது17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 முடித்து விட்டு பரீட்சை விடுமுறை என்பதால் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது இளைய ராணியின் தாய் பிளஸ்-2 படிப்பு என்பது அரசு பரீட்சை. எனவே 12-ம் வகுப்பு புத்தகங்களை இப்போது முதலே படிக்க தொடங்கு என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இளைய ராணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் அங்கன்குளத்தைச் சேர்ந்த வர் கார்த்திக் (27). இவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார்.
இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.
இந்த நிலையில் கார்த்திக் சம்பவத்தன்று ஒத்தக்கடை காந்தி நகரில் இருக்கும் நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு நள்ளிரவில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews