என் மலர்
நீங்கள் தேடியது "இறக்குமதி"
- அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 6.29 சதவீதம் சரிந்து 6.55 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது,
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சுவிட்சர்லாந்து, கொரியா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் இறக்குமதியும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த நிதியாண்டில் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில், அண்டை நாட்டிற்கான ஏற்றுமதி 8.3 சதவீதம் குறைந்து 5.8 பில்லியன் அமெரிக்க டாலராகவும், இறக்குமதி 10.96 சதவீதம் அதிகரித்து 46.65 பில்லியன் டாலராகவும், வர்த்தகப் பற்றாக்குறை 35.85 பில்லியன் டாலராக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 22.44 சதவீதம் குறைந்து 1 பில்லியன் டாலராகவும், ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதி 15.55 சதவீதம் அதிகரித்து 10.8 பில்லியன் டாலராகவும் உள்ளதாக வர்த்தக அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், நேபாளம், பெல்ஜியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கான நாட்டின் ஏற்றுமதியும் மதிப்பாய்வுக்கு உட்பட்ட மாதத்தில் குறைந்துள்ளது.
தரவுகளின்படி, அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 6.29 சதவீதம் சரிந்து 6.55 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது, அதே நேரத்தில் அந்த நாட்டிலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதி 6.3 சதவீதம் குறைந்து 3.82 பில்லியன் டாலராக உள்ளது.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சுவிட்சர்லாந்து, கொரியா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் இறக்குமதியும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
தரவுகளின்படி, அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 6.29 சதவீதம் சரிந்து 6.55 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது, அதே நேரத்தில் அந்த நாட்டிலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதி 6.3 சதவீதம் குறைந்து 3.82 பில்லியன் டாலராக உள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஏப்ரல்-ஆகஸ்ட் 2024-25 இல், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 5.72 சதவீதம் அதிகரித்து 34 பில்லியன் டாலர்களாக இருந்தது, அதே நேரத்தில் இறக்குமதி 3.72 சதவீதம் அதிகரித்து 19 பில்லியன் டாலர்களாக உயர்ந்து 15 பில்லியன் டாலர் வர்த்தக உபரியாக இருந்தது.
இதேபோல், ரஷியாவில் இருந்து நாட்டின் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 40 சதவீதம் குறைந்து 2.57 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஏப்ரல்-ஆகஸ்ட் 2024-25ல், கச்சா எண்ணெய் இறக்குமதியின் காரணமாக, இறக்குமதி 6.39 சதவீதம் அதிகரித்து 27.35 பில்லியன் டாலர்களாக இருந்தது.
- வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
- அக்டோபர் 1 முதல் 3 கட்டமாக தடை நீக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியின்போது இலங்கை அரசு அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கொரோனா தொற்று தொடங்கியது முதல் 4 ஆண்டாக இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வந்தன. தற்போது பொருளாதாரம் சற்று மீண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை தெரிவித்தது.
இந்நிலையில், பொருளாதாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து வாகனங்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க உள்ளோம் என இலங்கை அரசு தெரிவித்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டப்படி அக்டோபர் 1 முதல் 3 கட்டமாக தடை நீக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.
முதல்கட்டமாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து வாகனங்கள், 2ம் கட்டமாக டிசம்பர் 1 முதல் வணிக வாகனங்கள், 3ம் கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தனியார் பயன்பாட்டு கார்களை இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், பொருளாதார செயல்பாடுகள் மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கும் என அரசு கணக்கிட்டுள்ளது.
- உள்நாட்டில், மக்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்வதில் கப்பல் சேவை சிறப்பிடம் பெறுகிறது.
- கப்பல்கள் மூலம் வாணிபத்தை பெருக்கி நாட்டின் பொருளாதாரம் மேம்பட பாடுபட நாம் உறுதியேற்போம்.
ஒவ்வொரு ஆண்டும், தேசிய கடல்சார் தினம் ஏப்ரல் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது நாட்டின் கடல்சார் வாணிப துறை. நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பெரிய அளவிலான பொருட்களை எடுத்து செல்வதற்கு கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உள்நாட்டில், மக்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்வதில் கப்பல் சேவை சிறப்பிடம் பெறுகிறது.
உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார பரிமாற்றத்தில் தேசிய கடல்சார் துறையின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்குப் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய கடல்சார் தினம் ஏப்ரல் - 5 கொண்டாடப்படுகிறது.
'சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன்' கம்பெனி லிமிடெட்டின் முதல் கப்பலான எஸ்.எஸ்.லாயல்டியின் முயற்சி இந்தியாவின் வழிசெலுத்தலில் வரலாற்று தருணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இது வெளிநாடுகளுக்கு தனது பயணத்தைத் தொடங்கியது. குறிப்பாக கடல் வழிகள் முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
1964- ம் ஆண்டு ஏப்ரல் 5- ந் தேதி முதல் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதில் இந்தியாவின் கடல்சார் துறையின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து விழிப்புணர்வு பரப்பும் நோக்கத்துடன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசு, திருட்டு மற்றும் மாறும் வர்த்தக இயக்கவியல் ஆகியவை இத்துறை எதிர்கொள்ளும் சில சவால்களாகும். இந்தத் தொழிலின் போராட்டங்கள் குறித்து நமது கவனத்தை ஈர்ப்பதும், தீர்வுகளை திறம்பட கண்டறிய நாம் ஒன்றுபட உதவுவதும் இந்த தினத்தின் நோக்கம்.
கடல்சார் துறையை மேம்படுத்துவதற்காக அதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் இன்று வழங்கப்படுகிறது. இளைய தலைமுறையினர் அதிகளவில் கடல்சார் தொழிலில் ஈடுபட வேண்டும்.
கப்பல்கள் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி - இறக்குமதி வாணிபத்தை பெருக்கி நாட்டின் பொருளாதாரம் மேம்பட பாடுபட நாம் அனைவரும் இந்த தினத்தில் உறுதியேற்போம்.
- இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத பொருட்கள் பிரிவில், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
- உள்நாட்டு வரத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதுடெல்லி:
இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத பொருட்கள் பிரிவில், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களின் கட்டுப்பாடு இல்லாத இறக்குமதிக்கான அனுமதி, 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய இருந்தது.
இந்நிலையில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பின் கட்டுப்பாடு இல்லாத இறக்குமதிக்கான அனுமதியை, 2025-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
உள்நாட்டு வரத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
- சீனாவிலிருந்து விலகிட பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன
- உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது
இனி இந்தியாவில் டேப்லெட், மடிக்கணினி, மற்றும் அனைத்து வகை கணினிகளையும் இறக்குமதி செய்ய உரிமங்கள் (license) வேண்டும்.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி மடிக்கணி, டேப்லெட், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் அல்ட்ரா ஸ்மால் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை இறக்குமதி செய்ய இனிமேல் உரிமம் வாங்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. சில சிறப்பு சேவைகளை செயல்படுத்த அவசியமான ஒரு சில கணினிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம்.
பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வெளிநாட்டு மின்னணு பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் தொடர்ச்சியாக இந்த கட்டுப்பாடு வருகிறது.
சீனாவிலிருந்து விலகி வேறு சில நாடுகளில் தங்கள் உயர்ரக மின்னணு பொருட்களை தயாரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக இருக்கிறார். அதன்படி அரசாங்கத்தின் பல துறைகளுக்கு கொள்கைகளை வகுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி, மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற ஹார்டுவேர் தயாரிப்பாளர்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வகையில் ரூ.170 பில்லியன் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டது.
அரசாங்கத்தின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை பெற விரும்பும் உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வருடாந்திர மின்னணு இறக்குமதியில் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளின் இறக்குமதி $60 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபேட் மற்றும் மேக்புக் கணினி வகைகளை இன்னமும் இந்தியாவில் தயாரிக்க தொடங்கவில்லை. இந்த ஊக்கத்தொகைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் அந்நிறுவனத்தை இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கலாம் என கருதப்படுகிறது.
டெல் டெக்னாலஜிஸ், ஹெச்பி மற்றும் அஸஸ்டெக் போன்ற நிறுவனங்களும் இதனை பயன்படுத்தி தங்கள் கணிணி வகைகளை இங்கு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என கணினி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற முயற்சிகளின் விளைவாக உள்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பிறகு, இன்று பங்கு வர்த்தகத்தில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் மின்னணு உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 2% - 5% வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் 69.20 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி
- இறக்குமதி 14 சதவீதம் குறைந்துள்ளது
இந்தியாவின் ஒட்மொத்த ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 60.09 பில்லியன் அமெரிக்க டாலராகும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா 69.20 அமெரிக்க டாலர் அளவில் ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் தற்போது 13 சதவீதம் குறைந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, இந்த குறைவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அதேவேளையில் இறக்குமதியும் குறைந்துள்ளது. 2022 ஜூன் மாதத்தில் 80.12 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்த இந்தியா, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 14 சதம்வீதம் குறைத்து 68.98 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்துள்ளது.
இறக்குமதி ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசம் 10.92 பில்லியனில் இருந்து 8.89 பில்லியனாக குறைந்துள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 182.70 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இது கடந்த ஆண்டை விட 7.29 சதவீதம் குறைவாக ஏற்றுமதி செய்துள்ளது.
- மத்திய மந்திரி பியூஷ் கோயலிடம் முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், கடம்பூர் ராஜூ கோரிக்கை
- உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
நாகர்கோவில்:
சென்னையில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோர் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் சென்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்யவேண்டும்.
தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையிலும் தீப்பெட்டி தொழிலை பேணி காக்கின்ற வகையிலும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டுமென வலியுறுத்தி இருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
- நாமக்கல்லில் 1500 கோழிப்பண்ணைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
- கடந்த 2 ஆண்டுகளாக முட்டைகளுக்கான தீவன பொருட்கள் விலை ஏற்றத்தால் முட்டை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்:
தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணை யாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி செயலாளர் முரளி, துணை தலைவர் பன்னீர்செல்வ ம்பொருளாளர் காளியண்ணன், சத்தியமூர்த்தி ஆகியோர் மத்திய மீன்பிடி, கால்நடை பராமரிப்பு , பால்வளம் மற்றும் தகவல் பராமரிப்பு அமைச்சுகத்தின் இணை மந்திரி எல். முருகனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்லில் 1500 கோழிப்பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு சத்துணவிற்கும், தமிழகம் , வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக முட்டைகளுக்கான தீவன பொருட்கள் விலை ஏற்றத்தால் முட்டை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 25 சதவீத கோழிப்பண்ணைகள் இழப்பை எதிர்கொள்ள முடியாமல் கோழிப்பண்ணைகளை மூடி விட்டனர். இதே சூழல் தொடர்ந்து நீடித்தால் மீதமுள்ள கோழிப்பண்ணைகளும் மூடும் அபாயம் ஏற்படும்.
தற்போது தீவன மூலப்பொருட்களில் முக்கியமாக மக்காச்சோளம் விலை உயர்ந்து கிலோ இப்போது ரூ 28 ஆக உள்ளது. மேலும் இப்போது போதிய மக்காச்சோளம் கிடைப்பதில்லை. தற்போது பெய்த கனமழையால் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பலத்த சேதமடைந்துள்ளது.
இதனால் மக்காச்சோளம் தட்டுப்பாடு ஏற்பட்டு்ள்ளதால் கோழி தீவனம் தயாரிப்பு முடங்கி உள்ளன. எனவே வெளி நாடுகளில் இருந்து மரபணு ரீதியாக மாற்றப்பட்ட உடைந்த மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
அவற்றை மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களாகிய எம்.எம்.டி.சி மற்றும் டிஜிஎப்டி மூலம் இறக்குமதி செய்து பண்ணையாளர்களுக்கு வழங்கி விவசாயம் சார்ந்து கோழிப்பண்ணை தொழிலை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
- மக்களின் போராட்டம் புரட்சியாக உருவெடுத்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
- ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன் அனுப்பப்பட்ட பொருட்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணியின் கடுமையான பற்றாக்குறையால், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு, எரிப்பொருள் என அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இதன் எதிரொலியாக பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் புரட்சியாக உருவெடுத்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சாக்லேட்டுகள், வாசனை திரவியங்கள், தொலைபேசிகள், பிரஷர் குக்கர்கள் மற்றும் ஷாம்புகள் உள்ளிட்ட 300 பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனினும், இந்த பொருட்கள் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன் அனுப்பப்பட்டு செப்டம்பர் 14-ம் தேதிக்குள் நாட்டிற்கு வந்தாலும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது.
- ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.
திருப்பூர்:
சர்வதேச வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே அதிக அளவில் நடக்கிறது. அதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பில் மாற்றங்கள் நமது நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நடப்பு ஆண்டு ஜனவரி இறுதி வரை 74.65 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் 76 ரூபாயை கடந்தது.
அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது. தற்போது 79.88 ரூபாயாக காணப்படுகிறது.டாலர் மதிப்பு உயர்வு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினருக்கு சாதகம், பாதகம் இரண்டையும் கொடுக்கிறது. சாதகங்களைவிட பாதகமே அதிகம் என்பதால் டாலர் மதிப்பு உயர்வு தொழில் துறையினரை கவலை அடைய செய்கிறது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-
டாலர் மதிப்பு உயர்வால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகமான சூழல் உருவாகியிருப்பது உண்மைதான். அதேநேரம். இந்த நிலை நீடிக்காது. ஏற்கனவே ஆர்டருக்கான ஆடை தயாரிப்பு, பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சற்று கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும். ஆனால் புதிய ஆர்டர் வழங்கும்போது, டாலர் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப ஏற்றுமதி ஆடை விலையை வெளிநாட்டு வர்த்தகர்கள் குறைத்து விடுவர். இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். லேபிள், பட்டன், ஜிப் போன்ற ஏற்றுமதி ஆடைகளின் இணைக்கும் அக்சசரீஸ்களை அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பின்னலாடை நிறுவனங்கள் அக்சசரீஸ் இறக்குமதிக்கு அதிக தொகை செலவிட வேண்டியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வு, பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு குறுகிய கால நன்மையே அளிக்கும். தலைவலிதான் அதிகம்.
டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் துணி, பிரின்டிங் இங்க், அக்சசரீஸ், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என ஆடை உற்பத்தி சார்ந்த மெஷினரிகளை உலகளாவிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பா தவிர மற்ற நாடுகளுடனான வர்த்தகம் டாலரிலேயே நடக்கிறது. இப்போது டாலர் மதிப்பு உயர்வு திருப்பூரில் ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்களை மிகவும் பாதிக்க செய்கிறது.இறக்குமதி மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிரின்டிங் போன்ற ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.வெளிநாடுகளிலிருந்து அதிநவீன எந்திரங்களை இறக்குமதி செய்வதும் சிக்கலாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.