search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்மட்ட மேம்பாலம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.
    • ஊராட்சிக்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    சட்டசபையில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:-

    எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 லட்சம் உள்ளது. இது போதாது. ரூ.5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.

    தாம்பரம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள பாதாள சாக்கடை திட்டங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதை புதுப்பிக்க வேண்டும். 135 ஏக்கர் பரப்பளவில் உள்ள திருநீர்மலை ஏரி மிக பெரிய ஏரி. சென்னை சேத்துப் பட்டில் படகு குழாம் உள்ளது போன்று சென்னை புறநகர் பகுதியில் படகு குழாம் எதுவும் இல்லை. எனவே அதை திருநீர்மலை ஏரியில் அமைக்க வேண்டும்.

    அங்கு பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில் மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும். திரிசூலம் ஊராட்சிக்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, மீனம்பாக்கம் முதல் இரும்புலியூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பேசினார்.

    • 88.52 ஏக்கர் பரப்பளவில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
    • வண்டலூர் முதல் காட்டாங்குளத்தூர் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.

    சென்னை:

    சென்னை, கோயம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

    ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல மின்சார ரெயிலோ, மெட்ரோ ரெயில் போக்குவரத்தோ இல்லாததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் பெரும் அவதி அடைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்தநிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    வண்டலூர் முதல் காட்டாங்குளத்தூர் வரை முதற்கட்டமாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் எனவும், தேவையற்ற காலவிரயம் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • உயர்மட்ட மேம்பால பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நிறைவு பெற்றது.
    • கடந்த 6-ம் தேதி பாலத்தில் வாகனங்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை புதுநத்தம் சாலையில், பாரத் மாலா திட்டத்தின் கீழ் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. 268 தூண்களுடன் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில், 3 இடங்களில் வாகனங்கள் இறங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததையடுத்து கடந்த 6-ம் தேதி பாலத்தில் வாகனங்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அப்போது, மதுரை மேம்பாலத்தையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    ×