search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிரிகட்சித் தலைவர்"

    • நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
    • 'வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது'

    கடந்த ஜூலை [ஜூன் 27] ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மக்களவையில் ராகுல் காந்தியின் உரை பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் இடையிலான கருத்து மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    கூட்டத்தொடரின் ஆரம்ப கூட்டங்களில் தான் பேசும்போது ஜெகதீப் தன்கர் மைக்கை ஆப் செய்வதாக கார்கே பல முறை குற்றம்சாட்டினார். ஆனால் மைக்கின் கண்ட்ரோல் தன்னிடம் இல்லை என்று ஜெகதீப் விளக்கம் அளித்தார். நேற்று முன் தினம் இருவருக்கும் இடையில் சற்று இணக்கம் ஏற்பட்டு அவை கலகலப்பாக இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.

    நேற்று மாநிலங்களவையில், காங்கிரஸ் எம். பி பிரமோத் திவாரி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசியபோது, ஆளும் பாஜக பல வழிகளில் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சாடினார். இந்த கருத்தை கண்டித்த ஜெகதீப் தன்கர், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது என்று தெரிவித்தார். உடனே எழுந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ், அதை [துரோகத்தை] எங்களால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்தார். இதனால் பொறுமை இழந்த ஜெகதீப் தன்கர், ஜெயராம் ரமேஷை பார்த்து, நீங்கள் மிகவும் புத்திசாலி, திறமை வாய்ந்தவனர், நீங்கள் உடனே வந்து எதிர்கட்சித் தலைவர் கார்கேவின் இடத்தில் அமர்ந்து அவரது வேலையே நீங்களே பார்க்கலாம் என்று கிண்டலாக தெரிவித்தார்.

    ஜெகதீப் தன்கரின் கருத்தை கண்டிக்கும் வகையில் கார்கே உடனே எழுந்து, வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது, எனவே தான் ஜெயராம் ரமேஷை புத்திசாலி என்று தெரிவிப்பதன்மூலம் தலித் ஆகிய நான் மந்தமான நபர் என்றும் அவர் எனக்கு பதில் இங்கு வந்து அமர வேண்டும் என்றும் கூறுகிறீர்கள் என்று காட்டமாக ஜெகதீப் தன்கரிடம் தெரிவித்தார்.

     

    இதனால் சற்று கலக்கமடைந்த தன்கர், நான் அப்படி கூறவில்லை, எனது கருத்தை நீங்கள் திரித்துக் தவறாக எடுத்துகொண்டீர்கள், உங்கள் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. நீங்கள் இருக்கும்போது ஜெயராம் ரமேஷ் ஏன் பேச வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அவ்வாறு சொன்னேன், நீங்கள் சில பிரச்னைகளை தீர்க்க வேண்டியது உள்ளது என்று தெரிவித்தார்.

     

    இதற்கு பதிலளித்த கார்கே, என்னை உருவாகியவர் இங்கு உள்ளார் [சோனியா காந்தியை சுட்டிக்காட்டி] மேலும் மக்கள் என்னை உருவாக்கியவர்கள். நீங்களோ ஜெய்ராம் ரமேஷோ என்னை உருவாக்கவில்லை என்று தெரிவித்தார். 

     

    • மல்லிகார்ஜுன கார்கே ராகுலின் மனதை மாற்றுவதற்கு பல தந்திரங்களை கையாண்டுள்ளாராம்.
    • பதவியை ஏற்கவில்லை என்றால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்

    மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றுள்ள ராகுல் காந்தி வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுத்துள்ளார். இதற்கிடையில் ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர வைக்க காங்கிரஸ் தொடக்கம் முதலே படாத பாடுபட்டு வருகிறது.

     

    ஆனால் ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுத்து இதுவரை காங்கிரஸ் காமிட்டியினருக்கு பிடி கொடுக்கமாலேயே இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் கூட ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கும்படி தலைவர் கார்கே உட்பட கமிட்டியினர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

     

    குறிப்பாக மல்லிகார்ஜுன கார்கே ராகுலின் மனதை மாற்றுவதற்கு பல தந்திரங்களை கையாண்டுள்ளாராம். அதாவது, ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கவில்லை என்றால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று செல்லமாக மிரட்டியுள்ளாராம்.

     

    இதுகுறித்து செய்தியாளர்கள் ராகுலிடன் கேள்வியெழுப்பிய நிலையில் அதற்கு அவர், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து முடிவெடுத்த பின்னர் அவர் [கார்கே] அறிவிப்பார், அவர் [கார்கே] என்னை மிரட்டியது உண்மைதான் என்று புன்னகையுடன் தெரிவித்தார்.

     

    நடந்த முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமயிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைபற்றி பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிரான மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. முன்னதாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தியை தான் பிராமராக தேர்ந்தெடுப்பேன் என்று கார்கே கூறியது குறிப்பிடத்தக்கது.

    ×