search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோபா அமெரிக்கா"

    • மோதிய இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    • சிலி, கனடா, பெரு அணிகள் காலிறுதிக்கு முன்னேற கடைசி ஆட்டத்தில் கடுமையாக போராடும் நிலை.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா- சிலி அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டம் முடியும் தருவாயில் அர்ஜென்டினா அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை கிடைத்தது. அந்த அணியின் மார்ட்டினேஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் "ஏ" பிரிவில் அர்ஜென்டினா இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கனடா 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    3 அணிகளின் காலிறுதி வாய்ப்பு

    சிலி ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 3-வது இடத்தில் உள்ளது. பெரு ஒரு தோல்வி, ஒரு டிரா உடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நான்கு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கின்றன.

    அர்ஜென்டினா பெருவை எதிர்கொள்கிறது. கனடா சிலியை எதிர்கொள்கிறது. கனடாவுக்கு எதிராக சிலி வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முன்னேற முடியும். டிரா செய்தால் கனடா முன்னேறி விடும்.

    அதேபோல் அர்ஜென்டினாவுக்கு பெரு அதிர்ச்சி அளித்து, கனடா தோல்வியடைந்தால் சிலி, பெரு இடையே கோல் அடிப்படையில் காலிறுக்கு முன்னேறும் போட்டி நீடிக்கும்.

    கனடா- பெரு போட்டி

    மற்றொரு போட்டியில் கனடா- பெரு அணிகள் மோதின. இதில் கனடா 1-0 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் பெரு வீரர் மிகுயேல் அராயுஜோ சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். இதனால் பெரு 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கனடா 74 நிமிடத்தில் கோல் அடித்தது. ஜோனாதன் டேவிட் இந்த கோலை அடித்தார்.

    • பிரேசில் வீரர்கள் 695 முறை பந்தை பாஸ் செய்தனர்.
    • 9 முறை கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் இந்திய நேரப்படி இன்று காலை கோஸ்டா ரிகா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது.

    பிரேசில் அணி டார்கெட்டை நோக்கி மூன்று முறை முயற்சித்தது. ஆனால் மூன்று முறையும் அதிர்ஷ்டம் கைக்கூடவில்லை. கோஸ்டா ரிகா ஒருமுறை கூட டார்கெட் நோக்கி பந்தை அடிக்கவில்லை.

    பிரேசில் வீரர்கள் 695 முறை பந்தை பாஸ் செய்தனர். கோஸ்டா ரிகா வீரர்கள் 249 முறைதான் பந்தை பாஸ் செய்தனர். பிரேசில் ஒரு மஞசள் அட்டையும், கோஸ்டா ரிகா 2 முறை மஞ்சள் அட்டையும் பெற்றது. பிரேசில் அணிக்கு 9 முறை கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கோஸ்டா ரிகாவுக்கு ஒருமுறைதான் கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

    மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா- பராகுவே அணிகள் மோதின. இதில் கொலம்பியா 2-1 என வெற்றி பெற்றது. 32-வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் டேனியல் முனோஸ் கோல் அடித்தார். 42-வது நிமிடத்தில் ஜெஃப்பர்சன் லெர்மா கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் கொலம்பியா 2-0 ன முன்னிலை பெற்றிருந்தது.

    2-வது பாதி நேர ஆட்டத்தில் பாராகுவே வீரர் ஜூலியோ என்சிசோ 69-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் கொலம்பியா 2-1 என வெற்றி பெற்றது.

    • அமெரிக்கா பொலிவியாவை 1-0 என வீழ்த்தியது.
    • உருகுவே 3-1 என பனமா அணியை எளிதாக வீழ்த்தியது.

    தென்அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான கால்பந்து தொடரான கோபா அமெரிக்கா தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் அமெரிக்கா- பொலிவியா அணிகள் மோதின. இதில் அமெரிக்கா 2-0 என வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 3-வது இடத்தில் கிறிஸ்டியன் புலிசிக் முதல் குாலை பதிவு செய்தார். 44-வது நிமிடத்தில் ஃப்ளோரியன் பலோகன் 2-வது கோலை பதிவு செய்தார். இதனால் பாதி நேர ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 என முன்னிலை பெற்றது, 2-வது பாதி நேரத்தில் பொலிவியா அணியால் பதில் கோல் போட முடியவில்லை. இதனால் அமெரிக்கா 2-0 என வெற்றி பெற்றது.

    2-வது போட்டியில் உருகுவே- பனமா அணிகள் மோதின. இதில் உருகுவே 3-1 என வெற்றி பெற்றது. முதல் நேரத்தில் 16-வது நிடமிடத்தில் உருகுவே முதல் கோலை பதிவு செய்தது. மேக்சிமிலியானோ இந்த கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல்பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதி நேரத்தில 84-வது நிமிடம் வரை கோல் விழவில்லை. 85-வது நிமிடத்தில் உருகுவே வீரர் டார்வின் நுனேஸ் கோல் அடித்தார். அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரம் வழங்கப்பட்டதில் உருகுவே 91-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தது. மத்தியாஸ் வினா இந்த கோலை அடிக்க உருகுவே 3-0 என முன்னிலைப் பெற்றது.

    94-வது நிமிடத்தில் பனமா ஆறுதல் கோல் அடித்தது. மிக்கேல் அமிர் முரில்லா இந்த கோலை அடிக்க உருகுவே 3-1 என வெற்றி பெற்றது.

    இதுவரை ஏ, பி, சி பிரிவுகளில் உள்ள அணிகள் தலா ஒரு போட்டிகளில் விளைாடியுள்ளன. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்க கோஸ்டா ரிகா அணியை எதிர்கொள்கிறது.

    ×