search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி"

    • தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
    • தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்தது.

    தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

    புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும், தொற்று குறித்து பயப்படத் தேவை இல்லை எனவும், ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    5 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் HMPV கண்டறியப்பட்டது.

    சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    • காலை 7:30 மணியளவில் சிறுமி தனது பள்ளிப் பையுடன் தனது வகுப்பை நோக்கி செல்வதைக் காணலாம்
    • அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த சிறுமி திடீரென்று வேதனையில் நெளிகிறாள்

    குஜராத்தில் 8 வயது சிறுமி பள்ளியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று [வெள்ளிக்கிழமை] குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தார். கார்கி ரன்பரா என்ற அந்த சிறுமி, தல்தேஜ் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான Zebar பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

    சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், காலை 7:30 மணியளவில் சிறுமி தனது பள்ளிப் பையுடன் தனது வகுப்பை நோக்கி செல்வதைக் காணலாம். அப்போது சிறுமிக்கு திடீரென உடல் அசௌகரியம் ஏற்படுகிறது.

    அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த சிறுமி திடீரென்று வேதனையில் நெளிகிறாள். அருகில் நின்றிருந்த ஆசிரியர்களும் மற்ற பள்ளிக் குழந்தைகளும் எதையும் புரிந்து கொள்வதற்குள், சிறுமியின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. சேரில் இருந்து சிறுமி சுருண்டு விழுந்தார்.

    சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த வார தொடக்கத்தில் கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் சாமராஜநகரில் அமைந்துள்ள பள்ளியில் வகுப்பிலேயே 3 ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • இது தொடர்பாக 4 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், 6 பேரை கைது செய்துள்ளனர்.
    • 13 வயதில் இருந்து பலமுறை சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

    கேரளாவின் பத்தனம்திட்டாவில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்தது 60 பேரால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இது தொடர்பாக 4 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், 6 பேரை கைது செய்துள்ளனர். உடற்கல்வி பயிற்சியாளர், பள்ளி வகுப்புத் தோழர்கள் என 60க்கும் மேற்பட்டோர் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் 18 வயதாகி உள்ளதாக கூறப்பட்டது. 13 வயதில் இருந்து பலமுறை சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

    சமீபத்தில் பள்ளியில் நடந்த குழந்தைகள் நலக் குழுவின் ஆலோசனை நிகழ்வின்போது சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் குணாதிசயங்களில் மாற்றம் இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

    பத்தனம்திட்டா குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் ராஜீவ் கூறுகையில், பள்ளியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து கூறினார்.

    இதையடுத்து, குழந்தைகள் நலக் குழு சார்பில் போலீசில் புகார் வழங்கப்பட்டது. விளையாட்டு வீராங்கனையான சிறுமி, பத்தனம்திட்டாவில் விளையாட்டு முகாம்கள் உட்பட பல இடங்களில் பயிற்சியாளர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

    தன்னை துஷ்பிரயோகம் செய்த சுமார் 40 பேரின் எண்களை தனது தந்தையின் மொபைல் போனில் சிறுமி பதிந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுமி உளவியல் நிபுணரிடம் அழைத்துச்செல்லப்பட்டார். மற்ற குற்றாவளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் தீவிரமாகியுள்ளது

    • சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
    • சிறுமிக்கு நடந்ததை வெளியே சொல்ல கூடாது என மிரட்டினார்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. சம்பவத்தின்போது ஞானசேகரன் மற்றொருவரிடம் போன் செய்து சார் என பேசியதாகவும், அந்த சார் உடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி விசாரணையில் கூறியதாக தழுவல் வெளியாகியது.

    சார் என்று யாரும் இல்லை என்றும் பொய்யான தகவல் பரப்ப வேண்டாம் என்றும் அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் யார் அந்த சார் என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.

     

    சட்டசபை கூட்டங்களிலும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் பலர் யார் அந்த சார் என்ற பேட்ஜை தனது சட்டையில் குத்திக்கொண்டு வந்தனர். இந்நிலையில் திமுக தொண்டர்கள் யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் கொடுத்துள்ளனர்.

    அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் புகார் அளித்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியதாகவும், புகாரிலிருந்து ஒரு சிறுவனின் பெயரை நீக்க வேண்டும் என தங்களை தாக்கியதாக சிறுமியின் தாய் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கு தொடர்பான புலனாய்வு விசாரணையில் அதிமுகவின் 103வது வட்ட செயலாளர் சுதாகர், சென்னை அண்ணாநகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.

    சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி தரப்பு சுதாகரை அணுகியதாகவும் சிறுமிக்கு நடந்ததை வெளியே சொல்ல கூடாது என மிரட்டியதோடு புகார் அளிக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல லட்சம் ரூபாய் பணம் பெற்று தருவதாக சுதாகர் பேசினார் என்று சிறுமி தரப்பு கூறியதை அடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உடன் சுதாகர் இருக்கும் புகைப்படங்களை வைரல் செய்து வரும் திமுக, சுதாகர் தான் அந்த சார் என டிரண்ட் செய்து வருகிறது. மேலும் சாலையில் வருவோர் போவோரிடமும் அந்த போட்டோவை திமுகவினர் வழங்கி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் அதிமுக திமுக இடையே சண்டை மூண்டுள்ளது.

    • சிறுமி விதுலா ஸ்ரீ சென்னையில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.
    • சிறுமியின் திறமை டிவைன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மருங்குளம் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ்-விஜயலட்சுமி தம்பதியின் மகள் விதுலா ஸ்ரீ (வயது 2).

    இந்த நிலையில் சிறுமி விதுலா ஸ்ரீ சென்னையில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவரை அவரது பாட்டி அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிகளுக்கு பரத கலை ஆசிரியை ஒருவர் பரதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த சிறுமி விதுலா ஸ்ரீ தானாகவே பரதம் ஆட தொடங்கி உள்ளார். சிறுமியிடம் இருந்த திறமையை அந்தப் பரத நாட்டிய ஆசிரியை மட்டுமல்லாமல் கோவிலில் கூடி இருந்த அனைவரும் வியந்து பாராட்டினர். இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய திறமையா என மனதார பாராட்டினர்.

    இதையடுத்து விதுலா ஸ்ரீக்கு திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆட அந்த ஆசிரியை கற்றுக் கொடுத்தார்.

    பரத முத்திரைகள், சுலோகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கற்று கொடுத்தார். இதனை கற்பூரம் போல் உடனே பற்றிக் கொண்ட சிறுமி விதுலா ஸ்ரீ திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆடி கற்றுக் தேர்ந்தார்.

    இதனை தொடர்ந்து சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறுமி விதுலாஸ்ரீ பங்கேற்று திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆடியபடியே பரதமுத்திரை மற்றும் சுலோகங்கள் கூறி சாதனை படைத்தார்.

    சிறுமியின் திறமை டிவைன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

    • ராஜஸ்தானை சேர்ந்த சுசீலா மீனா என்ற பள்ளிச் சிறுமியின் வேகப்பந்து வீச்சு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
    • ஏற்கனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்

    ராஜஸ்தானை சேர்ந்த சுசீலா மீனா என்ற பள்ளிச் சிறுமியின் வேகப்பந்து வீச்சு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இது மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

     

    சுசீலா மீனாவின் பந்துவீச்சு திறனை பார்த்து வியந்த சச்சின் அவரின் வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுடன் சுஷீலா மீனாவின் பந்துவீச்சு பாணியை ஒப்பிட்டு எழுதினார்.

    ஹைலைட் என்னவென்றால் இந்த பதவிக்கு ஜாகீர் கானும் பதில் அளித்துள்ளார். தனது பதிவில் ஜாகீர் கான் கூறியதாவது, நீங்கள் அதை [சிறுமியின் பந்துவீச்சு பாணியை] கவனித்தரிந்துள்ளீர்கள், அதை நான் முற்றிலும் ஏற்கிறன், அவளது விளையாட்டு மென்மையாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது, ஏற்கனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

     

    • ஜாகீர் கான் 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
    • ஒரு சிறுமி பந்து வீசும் வீடியோ ஒன்றை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

    இந்தியாவின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரும், மிகச்சிறந்த ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சாளருமான ஜாகீர்கான் (37) சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2015-ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் ஒரு சிறுமி பந்து வீசும் வீடியோ ஒன்றை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

    அதில் ஜாகீர் கானை போன்று ஒரு சிறுமி பந்து வீசுவதாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். மிருதுவானது, சிரமமற்றது, பார்ப்பதற்கு அழகானது. சுசீலா மீனாவின் பந்துவீச்சு உங்களது சாயலாக இருக்கிறது என கூறிய சச்சின், ஜாகீர் கானை டேக் செய்து, நீங்களும் இதை பார்த்தீர்களா என கேட்டுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தொல்லை தாங்காமல் அந்த சிறுமி , 6 மாதங்களுக்கு முன்பு பாட்டி வீட்டுக்கு சென்றார்.
    • நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த ராகவேந்திரா சிறுமி தூங்கிக்கொண்டிருந்த அறையைத் தட்டியுள்ளார்.

    ஆந்திரப் பிரதேசத்தில் 3 வருடமாக ப்ரொபோஸ் செய்தும் காதலை ஏற்காத 17 வயது சிறுமியை 21 வயது வாலிபர் வீடு புகுந்து தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் நந்திகோட்கூர் நகரில் உள்ள பைரெட்டி காலனியில் தனது தாத்தா பாட்டி வீட்டில் சிறுமி இருந்தபோது நேற்று இரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    களுகோட்லா கிராமத்தைச் சேர்ந்த ராகவேந்திரா [21 வயது] கடந்த சில ஆண்டுகளாக காக்கிநாடா மாவட்டத்தில் சமர்லகோட்டாவைச் சேர்ந்த அந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியைப் பின்தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி தொல்லை செய்து வந்துள்ளார்.

    அந்த நபரின் தொல்லை தாங்காமல் அந்த சிறுமி , 6 மாதங்களுக்கு முன்பு நந்திகோட்கூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றார். ஆனால் அங்கும் அவரை பின்தொடர்ந்து ராகவேந்திரா தொல்லை செய்துள்ளான்.

    இந்த நிலையில்தான் நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த ராகவேந்திரா சிறுமி தூங்கிக்கொண்டிருந்த அறையைத் தட்டியுள்ளார். சிறுமி கதவைத் திறந்ததும் உள்ளே நுழைந்து கதவை உள்ளே இருந்து ராஜேந்திர பூட்டினான். பின்னர் சிறுமி மீது தான் பாட்டிலில் கொண்டுவந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளான்.

     உதவிக்காகக் கத்த முடியாதபடி சிறுமியின் வாயை ராகவேந்திரா இறுக்கியதாக கூறப்படுகிறது. தீ பற்றி எறிந்த நிலையில் சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

    முன்னதாக சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும், சிறுமியின் பாட்டி விழித்து கதவை தட்டியுள்ளார். ஆனால் சிறுமி முழுவதும் எறிந்த பிறகே ராகவேந்திரா கதவை திறந்துள்ளான்.

    ராகவேந்திராவின் உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பியோட முயன்ற அவனை அவரது  அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் ராகவேந்திராவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

     

    • வழக்கை விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • சிறுமியின் உடலில் 45 காயங்கள் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.

    மேற்கு வங்கத்தில் சவுத் 24 ஜேநகர் பகுதியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி 9 வயது சிறுமி டியூஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முஸ்தகின் சர்தார் என்ற நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். மறுநாள் காலை குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் உள்ளூர் வாசிகள் வாகனங்களுக்கு தீ வைத்தனர், போலீஸ் நிலைகளை சேதப்படுத்தினர்.

    சிறுமியின் சடலம் ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலைக்கு பின் நடந்த இந்த மற்றொரு சம்பவம் பொதுமக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வழங்கப்படும் என மம்தா உறுதியளித்தார்.

    அதன்படி மேற்கு வங்க போலீஸ் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) வழக்கை விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் சிறுமியின் உடலில் 45 காயங்கள் இருந்ததாகவும் குற்றவாளி முஸ்தகின் சர்தார் தான் எனவும் உறுதி செய்யப்பட்டது

    விசாரணையின் போது 36 சாட்சிகள் ஆஜரான நிலையில், பருய்பூர் விரைவு நீதிமன்றம் நேற்று [வியாழக்கிழமை] முஸ்தாகின் சர்தாருக்கு மரண தண்டனை விதித்தது. குற்றம் நடந்து 61 நாட்களில் மரண தண்டனை வழங்கப்படுவது மேற்கு வங்கத்தின் நீதித்துறை வரலாற்றில் அரிதானதாகப் பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இரண்டு மாதங்களில் இதுபோன்ற ஒரு வழக்கில் தண்டனை அதுவும் மரண தண்டனை வழங்கப்படுவது மாநில வரலாற்றில் முதல் முன்னோடியாக அமைந்துள்ளது . இந்த சிறந்த சாதனைக்காக மாநில காவல்துறை மற்றும் வழக்குத் தொடர்பாக பணியில் ஈடுபட்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், என்று தெரிவித்துள்ளார். 

    • இதனை கவனித்த அவ்வழியாக வந்த டிரக் ஓட்டுநர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் அவர்களை நெருங்கினான்.
    • அதன்பின் சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    நண்பனுடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும்போது மூன்று பேரால் காட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மாலை சில்வானி-சாகர் சாலையில் உள்ள சியர்மாவ் காட்டில் வைத்து இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

    15 வயது சிறுமியும் அவரது அவரது 21 வயது ஆண் நண்பரும் அப்பகுதியில் உள்ள வனதேவி கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது காட்டுப்பகுதி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    இதனை கவனித்த அவ்வழியாக வந்த டிரக் ஓட்டுநர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் அவர்களை நெருங்கினான். வனப்பகுதிக்குள் வைத்து இருவரையும் சுற்றி வளைத்த அவர்கள் பெண்ணின் நண்பனைக் கடுமையாகத் தாக்கினர். அதன்பின் சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மூன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் சிறுமியும் இளைஞரும் வனத்திலிருந்து வெளியேறி சாலையை அடைந்தனர். ஆனால் இளைஞனின் இருசக்கர வாகனத்தின் சாவியை அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். எனவே அங்கிருந்து சாலை வழியாக நடந்தே போலீசிடம் சென்றுள்ளனர்.

    அவர்கள் அளித்த புகாரின் பேரில் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவனை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றொருவனைத் தேடி வருகின்றனர்.

    • சிறுமி பள்ளி செல்வதற்காக குளித்துவிட்டு ஆடையை மாற்றிக் கொண்டு இருந்தார்.
    • 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மஞ்சேரியல், சென்னூர், பத்மா நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மகள் கஸ்தூரி நிவ்ருதி (வயது 12).

    இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சிறுமி பள்ளி செல்வதற்காக குளித்துவிட்டு ஆடையை மாற்றிக் கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென சிறுமி மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஆடுகள் ஏலத்தில் விடப்பட்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
    • ஏலத் தொகையை தாங்களே செலுத்தி, ஆட்டை திரும்ப பெற்றுக்கொள்ள முயன்றபோதும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 11 வயது சிறுமி செல்லமாக ஒரு ஆட்டை வளர்த்து வந்தாள். அதை கண்காட்சிகளில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பது அவளது எண்ணமாக இருந்தது.

    குழந்தைகளுக்கு விவசாய, சமூக திறன்களை கற்றுக்கொடுப்பதற்காக ஒரு திட்டத்தின் கீழ் அந்த ஆடு சிறுமிக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பிட்ட நாள் வந்ததும் அந்த ஆட்டை திட்ட அதிகாரிகள் பெற்றுச் சென்றுவிடுவார்கள். ஆடுகள் ஏலத்தில் விடப்பட்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும்.

    செல்லமாக வளர்த்த ஆட்டை ஏலத்திற்கு கொடுக்க சிறுமிக்கு மனம் வரவில்லை. ஆனால் திட்ட அதிகாரிகள் ஒப்பந்தப்படி ஆட்டை அழைத்துச் சென்று ஏலத்தில் விட்டு விற்றுவிட்டனர். ஆனால் அன்றைய தினம், சிறுமி மேஜைக்கு அடியில் படுத்து அழுதுபுரண்டாள். அவளை பெற்றோரால் சமாதானப்படுத்த முடியவில்லை.

    ஏலத் தொகையை தாங்களே செலுத்தி, ஆட்டை திரும்ப பெற்றுக்கொள்ள முயன்றபோதும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. ஏலமிடப்பட்ட ஆடு பலியிடப்பட்டது.

    இதையடுத்து சிறுமியின் தாய், ஏல நிறுவனம் மீது கோர்ட்டில் முறையிட்டாள். 2 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சிறுமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. பலியான ஆட்டிற்காக 3 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2½ கோடி) சிறுமிக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவியது.

    ×