என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா"

    • என்னால தான் இப்படி ஆனது என்று நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரலை.
    • ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் முக்கியமானது.

    பாட்ஷா படத்தை தயாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    அனைவருக்கும் வணக்கம்.. ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர் தி டாகுமெண்டரி... இதுல அவரைப்பற்றி பேசுவதற்கு மிக்க மகிழ்ச்சி. என்னுடன் நெருங்கிய நெருக்கம், அன்பு, மரியாதை காட்டியவர்களில் மூன்று, நான்கு பேர். அதாவது, பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.பி. சார். இவங்க எல்லாம் இல்லைங்கற போது சில நேரத்தில் ரொம்ப மிஸ் பண்றோம்.

    'பாட்ஷா' 100-வது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பேசினேன். அமைச்சர் மேடையில் இருக்கும் போது பேசியிருக்க கூடாது. அப்போ எனக்கு தெளிவு இல்லை. பேசிட்டேன். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.வீரப்பனை, புரட்சித்தலைவி பதவியில் இருந்து தூக்கிட்டாங்க.

    எப்படி அது நீங்க அமைச்சர் மேடையில் இருக்கும் போது ரஜினி, அரசுக்கு எதிராக பேசினால் சும்மா இருக்க முடியும் என்று சொல்லி எம்.ஆர்.வீரப்பனை பதவியில் இருந்து தூக்கினாங்க. அது தெரிந்த உடனே எனக்கு ஆடிப்போச்சு. என்னால தான் இப்படி ஆனது என்று நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரலை. போன் பண்ணா யாருமே எடுக்கலை. மறுநாள் காலையில் நேரில் போய் சாரி சார் என்னால தான் ஆனது என்று சொன்னார். அவர் எதுவுமே நடக்காத மாதிரி.. அதெல்லாம் விடுங்க... அதைப்பற்றி கவலைப்படாதீங்க... மனசுல வெச்சுக்காதீங்க... நீங்க விடுங்க. சந்தோஷமா இருங்க... எங்க ஷுட்டிங் என்று சாதாரணமா கேட்டார்.

    எனக்கு அந்த தழும்பு எப்போதும் போகாது. போகலை. ஏன் என்றால் நான் தான் கடைசியா பேசினது. நான் பேசினதுக்கு பிறகு அவரு எப்படி வந்து பேச முடியும். மதிப்பிற்குரிய ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் முக்கியமானது என்றார். 



    • இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றிக் கொண்டிருந்தார்.
    • ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசிய விஷயங்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

    தமிழக சட்டமன்றக் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது கட்சி எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசினார். இதற்கிடையில் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும்விதமாக எழுந்து பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதாவை விமர்சிக்கும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா? என்று அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தினார்.

    இதனால் சுதாரித்துக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசிய விஷயங்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

    அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி - செங்கோட்டையன் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் சூழலில் செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கச்சத்தீவு தனித்தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
    • கச்சத்தீவு விவகாரத்திற்கும் ஜெயலலிதா சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

    கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார்.

    தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத் தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.

    இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து கச்சத்தீவு தனித்தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

    அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்காதது ஏன்?

    இந்திரா காந்தி இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை கொடுத்து இருப்பார். அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கு கொடுத்த சிகிச்சையை ஏன் ஜெயலலிதாவுக்கு கொடுக்கவில்லை? என்று அ.தி.மு.க.வினரிடம் கேள்வி எழுப்பினார்.

    கச்சத்தீவு விவகாரத்திற்கும் ஜெயலலிதா சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விஷயங்களை பேரவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.

    அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பை அடுத்து செல்வப்பெருந்தகை பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

    • கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவின் முன்னாள் வளர்ச்சி மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    வருகிற 27ந்தேதி கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வருமாறு சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். 

    • ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரி, சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பினார்.
    • ஜெயலலிதாவின் பொருட்களில் குறிப்பாக 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள் நீண்ட நாட்களாக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பெங்களூரு தனிக்கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு, பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதா ஏற்கனவே மரணம் அடைந்திருந்தார். அதனால் அவரது பெயர் இந்த தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவடைந்ததை அடுத்து அவர்கள் விடுதலையாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் பொருட்களில் குறிப்பாக 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள் நீண்ட நாட்களாக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அவை நிறம் மங்கி கிழிந்துவிடும் என்றும், அதனால் அவற்றை மட்டும் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பினார்.

    அந்த கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்குமாறு அவர் கோரினார். அவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் உரிய பதில் அளிக்கவில்லை என்று அவர் கூறினார். இதையடுத்து அவர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு கடிதம் அனுப்பி, தனக்கு உரிய தகவலை வழங்கும்படி மத்திய தகவல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரினார். அதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) விசாரணை நடக்கிறது.

    • மதுரையில் நாளை அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்-அஞ்சலி செலுத்துகின்றனர்.
    • நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    மதுரை

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை யொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (5-ந்தேதி) காலை 9 மணி அளவில் மதுரை கே.கே. நகரில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து வதோடு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படு கிறது.

    மாலை 4 மணியளவில் மதுரை பெரியார் பஸ் நிலை யத்தில் இருந்து நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக மவுன ஊர்வலமாக சென்று மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர அனைத்து நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்படுகிறது.

    திருப்பரங்குன்றத்தில் நடக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படு கிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் அம்மா பேரவை சார்பிலும் டி. குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பொது மக்களுக்கு அன்ன தானமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கும்படி வேண்டு கிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை மாநகர் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளரான கோபாலகிருஷ்ணன் கூறி யிருப்பதாவது:-

    ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 9 மணி அளவில் மதுரை சட்டக்கல்லூரி முன்பிருந்து மவுன ஊர்வலமாக சென்று கே.கே.நகரில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரையில் அனைத்து பகுதிகளிலும் அ.தி.ம.மு.க. சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் எனது தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் உருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி.
    • அரிசி, காய்கறிகள் பிண்டம் வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திதி கொடுத்தார்.

    முன்னதாக கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி, செலுத்தினர்.

    பின்னர் அரிசி, காய்கறிகள் பிண்டம் (சோற்று உருண்டை)வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் அமைதிப்பேரணி நடத்தினர்.
    • மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

    மதுரை

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

    பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பி.எஸ். கண்ணன், வி.கே.எஸ்.மாரிசாமி, முத்து இருளாண்டி,அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையமாரி துரை, மீனவரணி செயலாளர் ராமநாதன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலைபிரபு, கருப்பையா, கொம்பையா,கண்ணன், வேல்முருகன், ஆரைக்குடி முத்துராமலிங்கம், மிசா செந்தில் மற்றும் 200 பெண்கள் உள்பட 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    • அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக பகுதி செயலாளர் ஆட்டோ கருப்பையா தலைமையில் நடந்தது.

    அவனியாபுரம்

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக பகுதி செயலாளர் ஆட்டோ கருப்பையா தலைமையில் வட்ட கழக செயலாளர் கொம்பையா முன்னிலையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கண்ணன், மகாலிங்கம், பவுண்டு ராஜ், வட்டச் செயலாளர் கமலக்கண்ணன், பகுதி இளைஞரணி செயலாளர் ஓம் ஜெயபிரகாஷ், அம்மா பேரவை செயலாளர் பைபாஸ் ரமேஷ், வெள்ளூர் கார்த்திகேயன், ராதா, முத்து, கணேசத்தேவர், திருப்பதி, ஆட்டோ ராஜ கோபால், கலைப் பிரிவு முத்துப்பாண்டி மற்றும் அவனியாபுரம் கிழக்கு மேற்கு மத்திய பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் ஜெயலலிதா நினைவு தின மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.
    • தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டியில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா நினைவு தின மவுன அஞ்சலி நடந்தது. பேரூர் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவை தலைவர் ஆர்.எஸ்.ராமசாமி வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார். இதில் பேரூர் துணைச்செயலாளர் சந்தனத்துரை, நிர்வாகிகள் ராஜேந்திரன், திருப்பதி, முத்து கண்ணன், மருதையா, பொன்ராம், ரங்கராஜ், பிரேம், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

    அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமையில் விராலிப்பட்டி, செம்மினிபட்டி, கச்சைகட்டி, ராமையன்பட்டி. பூச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிளைச் செயலாளர்கள் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • ராமநாதபுரத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • அவரது படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    மறைந்த அ.தி.மு.க, பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் ராமநாதபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆலோ சனையின் பேரில், நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பா ட்டில் அரண்மனை அருகே ஜெயலலிதா படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சேது பாலசிங்கம், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், சரவணகுமார், ராமநாதபுரம் நகர் துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் பாரதி நகரில் ராமநாதபுரம் (தெற்கு) ஒன்றியம், ராமநாதபுரம் நகர் (கிழக்கு) அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தர்மர் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து முருகன், ராமநாதபுரம் நகர் செயலாளர் (கிழக்கு) பாலசுப்பிரமணியன், மாவட்ட இணை செய லாளர் சித்ரா, மாவட்ட துணை செயலாளர் கற்பகம், தொகுதி செயலாளர் பரமக்குடி நவநாதன், முதுகுளத்தூர் மூக்கையா, திருவாடானை ராமகிருஷ்ணன், ராமநாத

    பு ரம் முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் உடையத்தேவன், சர வணன், நந்திவர்மன், கோட்டைச்சாமி, ரஜினிகாந்த், கரிகாலன், செந்தில் குமார், சண்முக பாண்டியன், கே.பாண்டி சரவணன், சுரேஷ், சிவக்குமார் சீனிமாரி, அழகர்சாமி மற்றும் பலர் பங்ேகற்றனர்.

    • ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • வழக்கறிஞர்கள் செல்ல பாண்டியன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-வது ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

    நகரக் செயலாளர் டி. ஜி. சண்முகசுந்தர் தலைமையில், சிங்காரவேலு தெற்கு ஒன்றிய செயலாளர், ஆர். ஜி .எம். பாலகிருஷ்ணன் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னிலையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் நகர் மன்ற தலைவர், சுரேஷ் குமார் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், சுரேந்தர் மாவட்ட மாணவர் அணி செயலாளர், அன்பரசன் நகர அவைத் தலைவர், முருகதாஸ் மாவட்ட பிரதிநிதி, சிதம்பரம் நகர துணை செயலாளர், எம் முருகதாஸ் நகர பாசறை செயலாளர், டி பிரதீப் குமார் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், கே ஜகபர் நகர எம்ஜிஆர் மன்ற தலைவர், மரியதாஸ் நகர இளைஞரணி செயலாளர், தினேஷ்குமார் நகர மாணவர் அணி செயலாளர், வழக்கறிஞர்கள் செல்ல பாண்டியன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×