என் மலர்
நீங்கள் தேடியது "டிரைவர்கள்"
- பேருந்து படியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
- தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கூறி உள்ளார். இதனையடுத்து அவர்கள் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து பேருந்துகளை சாலையில் நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம் நடத்தினர். பேருந்துகளை சாலையிலேயே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், படியில் நின்று கொண்டிருந்த மாணவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கண்டித்ததால் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
- சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை ஒடிசா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
- டிரைவர்களிடையே தூக்கம், சோர்வு அதிகரிக்கும்போது டீ இலவசமாக வழங்கப்பட உள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசாவில் இரவு நேரங்களில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையே, சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இரவு நேர டிரைவர்களுக்கு இலவச டீ வழங்கும் திட்டத்தை அம்மாநில போக்குவரத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் இத்திட்டம் ஜனவரி 7-ம் தேதி வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் டிரைவர்களுக்கு இலவச டீ வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் டிரைவர்களிடையே தூக்கம் அல்லது சோர்வு அதிகரிக்கையில் இலவசமாக டீ வழங்கப்பட உள்ளது.
- மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 117 டிரைவர்கள், 117 கண்டக்டர்கள் பணிக்கு அனுப்ப விரும்பும் நிறுவனங்கள் இ-டெண்டரில் விண்ணப்பிக்கலாம்
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களிலும் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பஸ்களை இயக்குவதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 பணியிடங்களையும் (டிரைவர், கண்டக்டர் பணிகளை ஒரு சேர மேற்கொள்வோர்), கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் 122 டிரைவர் பணியிடங்களையும் நிரப்ப அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, கும்பகோணம் (174), சேலம் (254), கோவை (60), மதுரை (136), திருநெல்வேலி (188) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 812 டிரைவர், கண்டக்டர் பணிகளை ஒரு சேர மேற்கொள்வோருக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மேலாண் இயக்குனர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேநேரம், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகமானது ஒப்பந்தம் மூலம் 234 டிரைவர், கண்டக்டர்களை தங்களுக்கு வழங்குவதற்கு தகுதியான தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான இ-டெண்டர் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொழிலாளர் சட்டம் 1970-ன் கீழ் உரிமம் பெற்று ஊழியர்களுக்கான மாநில காப்பீட்டு நிறுவனம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், சரக்கு மற்றும் சேவை வரி நிறுவனங்களில் பதிவு பெற்று 250-க்கும் மேற்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் உரிமம் கொண்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தி அரசு, தனியார், தன்னாட்சி நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி அதில் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிறுவனங்கள் இ-டெண்டரில் பங்கு கொள்ளலாம்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 117 டிரைவர்கள், 117 கண்டக்டர்கள் பணிக்கு அனுப்ப விரும்பும் நிறுவனங்கள் இ-டெண்டரில் 6-ந் தேதி முதல் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://tntenders.gov.in/nicgep/app என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- மாணவ-மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு அரசு பஸ்சை நம்பி தான் உள்ளார்கள்.
- இரவு நேரங்களில் அரசு டிரைவர்கள் பஸ்சை ஓட்ட முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மோதிர மலையை சுற்றி சுமார் 14 மலை கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி காணி இன மக்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
குண்டும் குழியுமான சாலை
மலைவாழ் மக்கள் பயிரிடப்படும் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு குலசேகரம் சந்தைக்கு தினமும் அரசு பஸ்சில் தான் வந்து செல்வார்கள். மேலும் அங்கு உள்ள மாணவ-மாணவிகளும் தங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அரசு பஸ்சை நம்பி தான் உள்ளார்கள்.
கோதையாறு மலை கிராமத்தில் மின் உற்பத்தி நிலையம், அரசு ரப்பர் கழகம் மற்றும் பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் என ஏராளம் அரசு அலுவலங்களும் உள்ளன. மின்வாரிய அலுவலகத்தில் பணி புரிபவர்களின் குடியிருப்புகளும் உள்ளது.
பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு வரை சுமார் 15 கிலோ மீட்டர் சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டம் நடத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு மழைவாழ் மக்கள் அனைத்து கட்சியினருடன் பஸ் மறியல் போராட்டம் நடத்தினார்கள். காலையில் இருந்து மாலைவரை போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை சீரமைக்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்தன் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அதன்பிறகு பெய்த கனமழையால் சாலை, மீண்டும் மிக மோசமாக பழுதடைந்து காணப்பட்டது. இரவு நேரங்களில் அரசு டிரைவர்கள் பஸ்சை ஓட்ட முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள். தற்போது இந்த சாலைகள் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு தரமற்ற நிலையில் உள்ளது.
இந்த நிலையில் தரமற்ற இந்த சாலையில் அரசு பஸ்களை இயக்க மாட்டோம் என திருவட்டார் அரசு போக்குவரத்து கழக பணிமனை டிரைவர்கள் கூறியதை தொடர்ந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து ெகாண்டனர்.
மதுரை
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று இந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில செயலாளர் சேவுகன் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் வரியை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்குவதுபோல் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு திட்டத்தில் அரசு முன்னுரிமை அளிக்க ேவண்டும். எப்.சி. கட்டணம், சாலைவரியை குறைக்க வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
- 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டு னர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 3-ந் தேதி நாமக்கல் கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
- மாத ஊதியம் ரூ.15,235 மொத்த ஊதியமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்.
நாமக்கல்:
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டு னர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 3-ந் தேதி நாமக்கல் கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
ஓட்டுனர்களுக்கான அடிப்படை தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆண், பெண் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். வயது 24 முதல் 35 மிகாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்று இருக்க வேண்டும்.
ஓட்டுனர்களுக்கான தேர்வு முறை எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாத ஊதியம் ரூ.15,235 மொத்த ஊதியமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளர்க ளுக்கான தகுதி பி.எஸ்.சி.நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. 12 -ம்வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் லைப் சயின்ஸ் பட்டதாரி பிரிவில் பிஎஸ்சி ஜூவாலஜி, பாட்டனி, கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்தி ருக்க வேண்டும். இவர்க ளுக்கு ஊதியம் ரூ.15 435 வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் விண்ணப்ப
தாரர்கள் அசல் சான்றி தழ்களை அனைத்தையும் நேரில் கொண்டு வர வேண்டும் என நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அரசு பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறை பிடித்தனர்.
- பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
பல்லடம் :
பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்றிரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் ராஜன் பஸ்சை ஓட்டினார். பல்லடம் பனப்பாளையம் சோதனைச்சாவடி பகுதியில் சென்றபோது அந்த பஸ் நிறுத்தத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி(வயது 21),உதயசந்திரன்(23) ஆகியோர் திருப்பூர் செல்வதற்காக பஸ்சிற்கு காத்துக் கொண்டிருந்தனர்.
வாலிபர்கள் தகராறு
அவர்கள் பஸ்சை நிறுத்துமாறு கை காட்டினர். இடை நில்லா பஸ் என்பதால் அந்த பஸ் நிற்காமல் சென்றது. இந்தநிலையில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, உதயசந்திரன் ஆகியோர் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் சென்று ராயர்பாளையம் பஸ் நிறுத்தம்அருகே, அரசு பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறை பிடித்தனர். மேலும் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர்கள் சாலையிலேயே பஸ்களை நிறுத்தி டிரைவர் ராஜனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் - பல்லடம் சாலையில் இருபுறமும் சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டது.
டிரைவர்கள் போராட்டம்
தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், இரு தரப்பினிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அரசு பஸ் ஓட்டுநர்கள், சிரஞ்சீவி, உதயச்சந்திரன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் சமாதானம் செய்ததையடுத்து டிரைவர்கள் பஸ்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருப்பூர்- பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
- தென்மண்டல இணை செயலாளர் பிரதீப், ரெயில் ஓட்டுனர்கள் செல்வகுமாரி, சுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நாகர்கோவில் :
ரெயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்குவதை ரத்து செய்ய வேண்டும். ரெயில்வே துறை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஊதியத்திற்கு ஏற்ப இரவு நேரப்படி பணி அலவன்ஸ் வழங்குதல், வார ஓய்வு லோக்கோ பைலட்டுகளுக்கும் வழங்க வேண்டும்.
பெண் ரெயில் டிரைவர் களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய லோக்கோ ஓடும் தொழிலாளர் கழகம் சார்பில் ரெயில் ஓட்டுனர்கள் மற்றும் உதவி லோக்கோ பைலட்டுகளின் ஒருநாள் நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது.
அதன்படி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கிளை தலைவர் காந்தி தலைமை தாங்கினார். தென்மண்டல செயற்குழு உறுப்பினர் நாகராஜன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தென்மண்டல இணை செயலாளர் பிரதீப், ரெயில் ஓட்டுனர்கள் செல்வகுமாரி, சுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.