என் மலர்
நீங்கள் தேடியது "திருமணங்கள்"
- கடந்த 2017-ம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது.
- குருவாயூரில் ஓரே நாளில் இவ்வளவு திருமணங்கள் நடப்பது இதுவே முதல் முறை.
கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஏராளமானோர் திருமணம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று 354 திருமணங்கள் நடைபெற்றன. குருவாயூரில் ஓரே நாளில் இவ்வளவு திருமணங்கள் நடப்பது இதுவே முதல் முறை.
கடந்த 2017-ம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது.
இன்று 363 திருமணங்களுக்கு முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் 9 குழுக்கள் தேவஸ்தானத்திற்கு தெரிவிக்காததால் 354 திருமணங்கள் மட்டும் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திருமணங்கள் தொடங்கின.
- திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது.
- மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆவணி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்தம் நாளான இன்று திருத்தணி முருகன் கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
இதனால் மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.
ஆடை அணிகலன்களோடு பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. எத்தனையோ வகையான சிகை அலங்காரங்கள் இருந்த போதும் சில தலைமுறைகளுக்கு முன்னாள் பிரபலமாக இருந்த கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.
நவீன இந்திய கொண்டை
குட்டையான மற்றும் அடர்த்தியான முடி உள்ள பெண்களுக்கு இந்த வகையான கொண்டை பொருத்தமாக இருக்கும். பண்டிகைகள் மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள இது சரியான தேர்வாகும். கவுன்கள் மற்றும் முழங்கால் வரையிலான ஆடைகள் அணியும்போது இந்த வகையான சிகை அலங்காரம் கூடுதல் அழகு சேர்க்கும். ஓவல், வட்டம் மற்றும் வைரவடிவ முகத்தோற்றம் கொண்ட பெண்கள் நவீன இந்திய கொண்டை அலங்காரத்தை தேர்வு செய்யலாம்.
பன் கொண்டை
எல்லா வயது பெண்களுக்கும் பொருத்தக்கூடிய எளிமையான கொண்டை வகை இது. பார்ட்டிகளுக்கும், பயணங்களுக்கும், அலுவலக நிகழ்ச்சிகளுக்கும் இந்த வகை கொண்டை அலங்காரம் ஏற்றதாக இருக்கும். திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது பன் கொண்டையில் பூக்கம் மற்றும் அணிகலன்கள் கொண்டு அலங்கரித்தால் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.
டாப் பன் கொண்டை
டாப் பன் கொண்டை அலங்காரம் பார்ட்டிகள். திருமண வரவேற்புகள் மற்றும் மேற்கத்திய பின்னணி கொண்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள சரியான தேர்வாகும். நீளமான முடி கொண்ட பெண்களுக்கு இந்த வகை கொண்டை அழகுக்கு அழகு சேர்க்கும்.
ஆஃப் பன் கொண்டை
ஆஃப் பன் கொண்டை எனப்படும் இந்த கொண்டை இன்றைய இளம் பெண்களிடம் பிரபலமாக உள்ளது. விருந்துகளில் கலந்து கொள்பவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வாகும். குட்டையான அல்லது நடுத்தரமான நீளம் கொண்ட கூந்தல் உள்ள பெண்களுக்கு இந்த வகை கொண்டை மிகவும் பொருத்தமாக இருக்கும்.
சைடு பன் கொண்டை
பக்கவாட்டு கொண்டை எனப்படும் இந்த கொண்டை அலங்காரம் நேர்த்தியான மற்றும் அழகான தோற்றம் அளிக்கும். இந்த வகை சிகை அலங்காரம் விருந்துகள், திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அலங்கரித்துக்கொள்ள ஏற்றது.
லோ பன் கொண்டை
கனமான அலங்கார பொருட்கள் இல்லாமல் எளிமையாக செய்யப்படும் இந்த வகை கொண்டை அலங்காரம் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அல்லது சாதாரண பண்டிகை நாட்களில் கலந்துகொள்வதற்கு ஏற்றது.
மெஸ்ஸி டாப் பன் கொண்டை
நேரமில்லாமல் அவசரமாக கிளம்பக்கூடிய நிகழ்வுகளுக்கு ஏற்ற கொண்டை அலங்காரம் இது. சில நொடிகளில் செய்யக் கூடிய இந்த வகை சிகை அலங்காரம் எளிமையாக இருந்தாலும் உங்களுக்கு வசீகரமான தோற்றத்தை கொடுக்க கூடியது.
+2
- அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது.
- அதிகாலை முதல் கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்கள் தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம், மேலும் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறுகிறது. இன்று ஆவணி மாத முதல் சுப முகூர்த்த தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமண ஜோடிகள், பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
இன்று 100-க்கும் மேற்பட்ட திருமணங்களும் கோவிலில் நடைபெற்றது. அதிகாலை முதல் கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- நடப்பு 2022-ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் இன்று 4-ந்தேதி மற்றும் 11, 12, 14 ஆகிய 4 நாட்கள் திருமண சுப முகூர்த்த தினங்களாகும்.
- தேய்பிறை நாளில், திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளை சேலம் மக்கள் தவிர்த்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சேலம்:
தீப கார்த்திகை தீப திருவிழா வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு அடுத்த நாள் (7-ந்தேதி) பவுர்ணமி நாள் ஆகும். அதன் பிறகு தேய்பிறை தொடங்குகிறது.
குறிப்பாக, நடப்பு 2022-ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் இன்று (4-ந்தேதி) மற்றும் 11, 12, 14 ஆகிய 4 நாட்கள் திருமண சுப முகூர்த்த தினங்களாகும். இதில் இன்றைய தேதியை தவிர மற்ற 3 நாட்களும் தேய்பிறையில் வருகிறது.
தேய்பிறை நாளில், திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளை சேலம் மக்கள் தவிர்த்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வருகிற 16-ந்தேதி மார்கழி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்திலும் சுப நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுகிறார்கள்.
இதனால் இன்று ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடைபெற்றன. சேலம் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள திருமண மண்டபங்கள், சிறிய அளவிலான மண்டபங்கள், சமுதாய கூடங்கள் திருமண கோஷ்டியினரால் நிரம்பி வழிந்தன. அதுமட்டுமின்றி மணமகன், மணமகள் வீடுகள் முன்பு போடப்பட்ட திருமண பந்தல்கள், நட்சத்திர ஓட்டல் கூட்ட அரங்குகளிலும் திருமண நிகழ்ச்சிகள் களை கட்டியது.
சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில், கோட்டை பெருமாள் கோவில், உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோவில், ஊத்துமலை முருகன் கோவில், காசிவிஸ்வநாதர் கோவிலில் திருமணங்கள் நடந்தன. மேலும் ஏற்காடு அடிவாரம் அறுபடை முருகன் கோவில், அம்மாப்பேட்டை செங்குந்தர் பாலசுப்பிரமணியர் கோவில், அயோத்தியப்பட்டணம் ராமர் கோவில், செட்டிச்சாவடி முருகன் கோவில், அழகாபுரம் முருகன் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் என இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களிலும் திருமணங்கள் நடைபெற்றன.
மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் புரோகிதர்களுக்கு மவுசு அதிகரித்தது. ஒரே புரோகிதர் பல திருமணங்களுக்கு ஒத்துக்கொண்டதால் கார்களிலும், மொபட் உள்ளிட்ட வாகனங்களிலும் புரோகிதர்கள் திருமணம் நடக்கும் இடங்களுக்கு அவசர அவசரமாக சென்று திருமணங்களை நடத்தி வைத்தனர். மாவட்டம் முழுவதும் திருமண விழா வாகனங்கள் அதிக அளவில் செல்வதை காண முடிந்தது.
- சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறு வது வழக்கம். இன்று ஒரு நாளில் மட்டும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து 18 திருமணங்கள் நடை பெற்றன.
- ஒரே நாளில் 18 திருமணங்கள் நடைபெற்றதால் வாகனத்திலும் குவிந்த வண்ணம் இருந்தனர்.
ஆத்தூர்:
திருமணங்கள் சொர்க்கத் தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அந்த திருமணங்கள் தெய்வத்தின் சாட்சியாக கோவிலில் நடைபெறுவது வழக்கம். தமிழகம் முழுவதும் புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கியதும் முதல் திருமண முகூர்த்த நாளான இன்று பல கோவில்களில் திருமணங்கள் நடைபெற்றன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறு வது வழக்கம். இன்று ஒரு நாளில் மட்டும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து 18 திருமணங்கள் நடை பெற்றன.
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் மண மகன்-மணமகள் கழுத்தில் மங்கள நாண் அணிவிக்க ஆர்வத்துடன் மணமக்களும், அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர். மேலும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தார் உட்பட அனை வரும் திரளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதனால் கோவில் வளாகம் முழுவதும் திருவிழா கோலமாக காட்சி அளித்தது. கோவிலின் திரும்பிய திசை எங்கும் மணமக்கள் நிறைந்து காணப்பட்டனர். செண்டை மேளம், கெட்டி மேளம் உள்ளிட்ட மங்கல ஓசைகள் கோயில் வளாகத்தில் அதிரடியாக ஒலித்தன.
பின்னர் மணமக்கள் திருமண விழாவை முடித்து கோவிலில் சாமி தரிசனம் செய்து தங்கள் இல்லங்களுக்கு சென்றனர். ஒரே நாளில் 18 திருமணங்கள் நடைபெற்றதால் வாகனத்திலும் குவிந்த வண்ணம் இருந்தனர்.