என் மலர்
நீங்கள் தேடியது "நிதி"
- மாநில அரசானது தொழிற்பூங்கா அமைக்க இதுவரை ரூ.74.95 கோடி செலவிட்டுள்ளது
- நிதியை ஏற்றால் தொழிலதிபர்களுக்கு இலவசமாக வழங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்
மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டிவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருவது தெரிந்ததே. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா [Medical Device Park] அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திருப்பி அனுப்பியுள்ள ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு தங்கள் மாநிலத்தின் செலவிலேயே அதை அமைத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசானது தொழிற்பூங்கா அமைக்க இதுவரை ரூ.74.95 கோடி செலவிட்டுள்ளது. எனவே மாநிலத்தின் விருப்பத்தின்படி, மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள ரூ.30 கோடியைத் திருப்பி அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்பூங்கா அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.350 கோடியாகும்
இந்த அறிவிப்பு குறித்து பேசிய அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பேசுகையில், 265 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு வழங்கிய ரூ.30 கோடியை நாங்கள் ஏற்றால், இந்த வளாகத்தில் உள்ள நிலங்களைத் தொழிலதிபர்களுக்கு ஒரு சதுரடி 1 ரூபாய்க்கும், ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய்க்கும், மற்ற அனைத்து வசதிகளையும் அடுத்த 10 வருடங்களுக்கு இலவசமாகவும் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
எனவே நாங்களே எங்களது நிதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் அடுத்த 5 முதல் 7 வருடங்களில் மாநில அரசுக்கு ரூ.500 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- நிதி பற்றாக்குறையால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- முன்னணி தமிழ் நடிகர்கள் பலர் முன்வந்து அதிகளவில் நிதி வழங்கி வருகின்றனர்.
நிதி பற்றாக்குறையால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க மேலும் ரூ.40 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சங்கத்தின் சார்பில் அதற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது.
முன்னணி தமிழ் நடிகர்கள் பலர் தாமாக முன்வந்து அதிகளவில் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி வழங்கிய நிலையில், அதைத்தொடர்ந்து தற்போது, நடிகர் தனுஷ், சங்க கட்டிட பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். அவருக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
முன்னதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல் ஹாசன், விஜய், நெப்போலியன் ஆகியோர் கட்டிட பணிகளுக்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டுக்குள் கட்டிட பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார்.
- நடிகர் விஷால் இன்று அவரை நேரில் காண சென்றார்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள சமீபத்தில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் அதைப் பெற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார். அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நேற்று நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நன்றி கூறுவதற்காக தென்னிந்திய பொதுச்செயலாளர் பதவியில் உள்ள நடிகர் விஷால் இன்று அவரை நேரில் காண சென்றார்.
"நன்றி என்பது இரண்டு வார்த்தைகளைக் குறிக்கிறது, ஆனால் ஒரு நபர் தனது இதயத்திலிருந்து அதைச் செய்தால் அதற்கு நிறைய அர்த்தம். நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு ஒரு கோடி நன்கொடை அளித்ததற்காக எனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் அண்ணனைப் பற்றி பேசுகிறேன். ஆம், உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்பொழுது அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டுள்ளீர்கள் . " நன்றிநண்பா " என்று நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- நிதி பற்றாக்குறையை சரி செய்ய பல்வேறு ஏற்பாடு.
- விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரிடம் கமல்ஹாசன் வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக இன்னும் முடியவில்லை.
இதற்காக, நிதி பற்றாக்குறையை சரி செய்ய பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி வழங்கினர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் சங்க கட்டட பணியை தொடர்வதற்காக வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை கமல்ஹாசன் வழங்கினார்.
நிர்வாகிகளான விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரிடம் கமல்ஹாசன் வழங்கினார்.
- பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
- காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது.
இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் மோடி பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கீடு.
- வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த திட்டம்.
சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச அளவிற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11.34 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் ரூ.88 லட்சத்தில் மேம்படுத்தப்பட உள்ளது.
- வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
- கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
சென்னை:
தி.மு.க. அரசு பொறுப் பேற்றதில் இருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாமலேயே உள்ளது.
மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது என்று பலமுறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் மத்திய நிதி மந்திரி இதற்கு அவ்வப்போது புள்ளி விவரங்களுடன் பதிலளித்து வருகிறார். இந்த சூழலில் வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிகள் அவ்வப் போது பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் அதில் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு என்ன?
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மத்திய அரசின் தொகை எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தொகுப்பு அனுப்புமாறு தமிழக அரசை கவர்னர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடிதம் கவர்னரின் செயலாளர் வழியாக தலைமைச் செயலாளருக்கு கடந்த 8-ந் தேதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
இதன்படி விவரங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முழுமையான விவரங்கள் கிடைக்கும் போது மத்திய அரசு நிதி தமிழகத்தில் முழுமையாக செலவழிக்கப் பட்டுள்ளதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதா? என்கிற விவரம் தெரியவரும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இதற்கு முன்பு பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்த போது கொரோனா காலத்தில் செலவழித்த தொகை பற்றி கணக்கு கேட்டதாகவும் எனவே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- சாதியை சொல்லி திட்டியதால் தற்கொலை செய்த வாலிபர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது
- தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கொப்பம்பட்டி கிராமம், பெரியார் நகரைச் சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகன் விஷ்ணுகுமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து உள்ளனர். வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தாழ்த்த ப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் விசாரணை மேற்கொண்டு, வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டு இறந்துவிட்ட விஷ்ணுகுமாரின், தந்தை வீரமுத்துவிடம், உதவித் தொகை ரூ. 6 லட்சம் ரூபாய் (50 சதவீதம்) காசோலை யினை, தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் வழங்கினார்.
முன்னதாக இந்நிகழ்வு குறித்து, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் துறை ரீதியான நடவடிக்கை கள் குறித்து, புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யாவுடன், தேசிய தாழ்த்த ப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் க.ஸ்ரீதர், இலுப்பூர் வருவாய்
கோட்டாட்சியார் தெய்வநாயகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்எம்.மஞ்சுளா, குளத்தூர் வட்டாட்சியர் காமராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ்-ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினர்
- மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மார்த்தாண்டம்:
கிள்ளியூர் அருகே உள்ள தூத்தூர் ஊராட்சிக் குட்பட்ட கே.ஆர்.புரம், சின்னத்து றையை சேர்ந்த மீனவர் லெரின்ஷோ (வயது 26), ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் ஆழ்கட லில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த மாதம் 9-ந் தேதி தவறி கடலில் விழுந்து இறந்தார். அவரது குடும்பத்தின் வறுமை சூழலை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தமிழ்நாடு கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்று, மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சென்று லெரின்ஷோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ. 2 லட்சத்தை வழங்கினர். பத்மனாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மீன்வள துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், ஆய்வாளர் லிபின் மேரி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார்.
- கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.
கபிஸ்தலம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் வேளாண்மை துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட துணை விவசாய விரிவாக்கம் மையம், திருமண்டங்குடி ஊராட்சியில் சண்முகம் எம்.பி. நிதியில் இருந்து கட்டப்பட்ட பொது விநியோக மையம், கூனஞ்சேரி, திருவைகாவூர் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடங்கள், கொந்தகை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியில் இருந்து கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடம் உள்பட ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 5 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். முன்னதாக ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.
இதில் எம்.பி.க்கள். கல்யாணசுந்தரம், ராமலிங்கம், சண்முகம், அரசு தலைமை கொறடா செழியன், ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், சுதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் விஜயன், ஹாஜா மைதீன், சுரேஷ், ஊராட்சி தலைவர்கள் பிரபாகரன், பாலசுப்பி ரமணியன், பவுனம்மாள் பொன்னுசாமி, மகாலிங்கம், மகாலட்சுமி பாலசுப்பி ரமணியன், ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா, பாபநாசம் உதவி வேளாண்மை இயக்குனர் மோகன், வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம், மற்றும் வேளாண்மை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
- புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உலகம்பட்டி, வி.புதூர், கட்டுகுடிப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி, கரிசல் பட்டி, முசுண்டப்பட்டி, புழுதிப்பட்டி மற்றும் கட்டுகுடிபட்டி ஆகிய அரசு மேல்நிலை பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:
விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 270 மாணவர்கள், 6ஆயிரத்து 323 மாணவிகள் ஆக மொத்தம் 10 ஆயிரத்து 593 பேருக்கு இந்த ஆண்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 7 அரசு பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 511 மாணவர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல் நலம், சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் நோக்கில், தமிழக அரசால் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியில், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகையும், புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
- பிரச்சினையை தீர்ப்பதற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தோவாளை அருகே திடல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை உள்ளது. இச்சாலையானது மிகவும் குறுகலாகவும், மிகவும் பழுதடைந்தும் காணப்பட்டு வருகிறது. இந்த சாலையானது நெடுஞ் சாலைத்துறையின் கிராம சாலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் சரி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை யினை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல் சிறமடம்-அனந்தனார் கால்வாய் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6 கோடியே 98 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இந்த சாலை ஊராட்சி சாலையாக ஆக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான நிதி யினை அரசு ஒதுக்கி பணி யினை தொடங்கிட வேண்டும்.முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும் என்றும் இதன்பேரில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றும் பொருட்டு மாவட்ட கலெக்டரிடம் விவரங்கள் தெரிவிக்க கூறப்பட்டிருந்தது. இதில் அரசு தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தும் இத்திட்டம் கொண்டு வரப்பட வில்லை. அஞ்சுகிராமம், பால்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட் டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடி தண்ணீர் வசதி கிடைக்கப் பெறவில்லை. இப்பிரச்சினையை தீர்ப்ப தற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
இதேபோன்று ஈசாந்தி மங்கலம் பகுதியில் தற்போது குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரு கின்ற வீடுகளுக்கு குடி தண்ணீர் வசதி முறையாக செய்யப்பட வேண்டும். தோவாளையில் கட்டப்பட்டு வருகின்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணி மண்டப பணிகளை விரைந்து கட்டி முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.