search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபிஸ்தலம் பகுதியில் 5 புதிய கட்டிடங்கள் திறப்பு
    X

    புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    கபிஸ்தலம் பகுதியில் 5 புதிய கட்டிடங்கள் திறப்பு

    • ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார்.
    • கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் வேளாண்மை துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட துணை விவசாய விரிவாக்கம் மையம், திருமண்டங்குடி ஊராட்சியில் சண்முகம் எம்.பி. நிதியில் இருந்து கட்டப்பட்ட பொது விநியோக மையம், கூனஞ்சேரி, திருவைகாவூர் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடங்கள், கொந்தகை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியில் இருந்து கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடம் உள்பட ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 5 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். முன்னதாக ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.

    இதில் எம்.பி.க்கள். கல்யாணசுந்தரம், ராமலிங்கம், சண்முகம், அரசு தலைமை கொறடா செழியன், ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், சுதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் விஜயன், ஹாஜா மைதீன், சுரேஷ், ஊராட்சி தலைவர்கள் பிரபாகரன், பாலசுப்பி ரமணியன், பவுனம்மாள் பொன்னுசாமி, மகாலிங்கம், மகாலட்சுமி பாலசுப்பி ரமணியன், ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா, பாபநாசம் உதவி வேளாண்மை இயக்குனர் மோகன், வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம், மற்றும் வேளாண்மை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×