என் மலர்
நீங்கள் தேடியது "பேராசிரியர்கள்"
- பேராசிரியர்களுக்கு பீனிக்ஸ் அகாடெமியில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
- பேராசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சான்றிதழை துணை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை:
தமிழ்நாட்டு மாணவர்கள் உயர்கல்வியில் உலக அளவில் முன்னேறவும், உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் நிலையை தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் சாதாரண ஏழை, எளிய மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு உருவாக்கவும் 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நான் முதல்வன் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர்களுக்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மாநிலத்திலுள்ள பீனிக்ஸ் அகாடெமியில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி பெற்று திரும்பிய 15 பேராசிரியர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சான்றிதழை துணை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
- விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
- தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10-ம் நாள் வெளியிடப்பட்டன.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர்.
ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்துவிட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
- துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.
ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,
தமிழகம் முழுவதும் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட உள்ளன. சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் பெருமை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.
துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பிரச்சனை இன்றோடு முடிந்துவிடும் என்று அவர் கூறினார்.
- பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
- சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை முறையாக வழங்க வேண்டும்.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.
ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு அமர்ந்தனர். தமிழக அரசிடம் இருந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு 2017-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள மானிய நிலுவைத் தொகையை விரைவாக கொடுக்கக்கோரி இப்போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து சென்னை பல்கலைக்கழக அலுவலக பேரவை தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
மாதம் வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை முறையாக வழங்க வேண்டும்.
தற்காலிக பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து கலந்து பேசி முடிவு செய்வோம் என்றார்.
- ஒரே பாட திட்ட முறையை கைவிட கோரி மதுரையில் கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
- துணை தலைவர் முன்னிலை வகித்தார்.
மதுரை
மதுரை பழங்காநத்தத்தல் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று உண்ணா விரத போராட்டம் நடந்தது. தலைவர் செந்தாமரை கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் முன்னிலை வகித்தார்.
மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது பல்கலைக்கழக தன்னாட்சி உரிமையை பறிக்கும். மேலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த இது வலிவகுக்கும். தமிழ் நாட்டின் உயர்கல்வியை பாதிக்கும் இந்த பொது பாடத்திட்ட முறையை திரும்ப பெற வேண்டும்.
உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் இணை பேராசிரியர் பணி மேம்பாடு மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும். பேராசிரியர் பதவி உயர்வுக்கு முனைவர் பட்டம் கட்டாயம் என்ற விதியில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- முனைவர் இளங்கோவன் கலந்து கொண்டு தொழில்முனை–வோராக வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
- அனைத்துத் துறை பேராசிரியர்களும், 150-ற்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் வணிகவியல் மன்றம் விழா 2022-23 நடைபெற்றது.
அண்ணாமலை பல்கலைக்–கழகத்தின் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தெழில்முனை–வோராக வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சொ.சசிகுமார் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.திருநாராயணசாமி மற்றும் துறை பேராசிரி–யர்கள் முனைவர் வே.மகேஸ்வரி முனைவர் வி.சுரேஷ் முனைவர் எம்.ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்துத் துறை பேராசிரியர்களும், 150-ற்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
- தேர்தல் அறிக்கையில் கவுரவ பேராசிரியர்களை பணி நிரந்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்.
- அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
பல்லடம் :
பல்லடம் அரசு கல்லூரி வளாகம் முன்பு கவுரவ பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கவுரவ பேராசிரியர்களாக குறைந்த சம்பளத்தில் பணிபுரிகிறோம்.
தேர்தல் அறிக்கையில் கவுரவ பேராசிரியர்களை பணி நிரந்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மேலும், அடுத்த கட்டமாக வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மருதமலை செல்லும் வழியில் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
- கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடவள்ளி
கோவை மருதமலை செல்லும் வழியில் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் வேலை பார்த்து வரும் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் சங்கம் ஒன்றும் வைத்துள்ளனர். இந்த நிலையில் கல்லூரி பேராசிரியர்கள் இன்று காலை திடீரென பல்கலைக்கழகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் துணைவேந்தர் காளிராஜ், பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் நேரில் வந்து பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர்.அதனை ஏற்று பேராசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த கல்லூரிக்கு சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
- பயிற்சியில் உள் மற்றும் வெளிக்கல்லூரி பேராசிரியர்கள் வகுப்பு எடுத்தனர்.
- கலந்து கொண்ட இடைநிலை அறிவியல் ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கவனித்து குறிப்பு எடுத்துக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட அறிவியல் ஆசிரிய ர்களுக்கான முதற்கட்ட இரண்டு நாள் பணியிடைப் பயிற்சியானது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதி உதவியுடன் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ். ஜோதிமணியம்மாள் தலைமையேற்று சிறப்பித்தார். செயலர் எஸ்.செந்தில்குமார், இணை செயலர் எஸ். சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை தலைவர் மற்றும் பணியிடை பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயசுந்தரம் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர் நடராஜன் தலைமையுரை வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு பயிற்சியை தொடக்கி வைத்து கலந்து கொண்ட ஆசிரியர்களை ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரை வழங்கினார்.
இதில் நாகை மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் உள் மற்றும் வெளிக்கல்லூரி பேராசிரியர்கள் வகுப்பு எடுத்தனர். இதனை கலந்து கொண்ட இடைநிலை அறிவியல் ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கவனித்து குறிப்பு எடுத்தனர். இறுதியாக இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் காதர்நிவாஸ் நன்றியுரை வழங்கினார்.
- காளீஸ்வரி கல்லூரியில் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் 153 பேராசிரியர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
சிவகாசி
சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் உளதர உத்தரவாத அமைப்பின் சார்பில் "நேரம் மற்றும் அழுத்தத்தை கையாளும் முறைகள்" குறித்த ஆசிரியர் மேம்பாடு நிகழ்வு நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மின்னணுவியல் துறையின் இணைப் பேராசிரியர் கவுதமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், நேரத்தையும் அழுத்தத்தையும் சரிவர கையாளும் முறைகள் குறித்து விளக்கினார். வேலையின் முக்கியத்துவம், அவசரம் ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். அவசரகதியில் வேலை செய்யாமல் நிதானமாக பணி புரிந்தால் சிறப்பாக அமையும்.
குறிக்கோள்களை அடைவதற்கு நேரமேலாண்மை முக்கியம் ஆகும். அன்றன்று செய்ய வேண்டியவற்றை அன்றே செய்து முடிக்க வேண்டும்.
நமது உடம்பில் அட்ரினலின் வேதிப்பொருள் சுரப்பதால் அழுத்தம் உண்டாகிறது. அழுத்தம் உண்டாவதால் உடல், மனம். குணம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். மனநலத்தை சீராக வைத்திருக்க தினமும் சிறு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தியானம் மற்றும் நல்லுறக்கம் மிகவும் முக்கியம் என்றார்.
உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியா வரவேற்றார். துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தகவல் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் 153 பேராசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.