search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்து"

    • சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) ஆகிய ரெயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
    • கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) கோவையில் இருந்து நாளை காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

    சேலம்:

    அரக்கோணம்-காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வாலாஜா ரோடு ரெயில் நிலையம் பகுதியில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    இதையொட்டி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) மற்றும் சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) ஆகிய ரெயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்ப டுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

    அதன்படி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) கோவையில் இருந்து நாளை காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

    காட்பாடி முதல் சென்னை சென்ட்ரல் வரை செல்லாது. இதே போல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை வரை செல்லும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு வங்காளத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பணியிட நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
    • முறைகேடு வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் காங்கோபத்யாய் விசாரித்து வந்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பணியிட நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்போது மாநில கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜி, தற்போதைய கல்வி இணை மந்திரி பரேஷ் அதிகாரி ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.

    இந்த முறைகேடு வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் காங்கோபத்யாய் விசாரித்து வந்தார். இந்த வழக்கில், முறைகேடாக சேர்க்கப்பட்ட 1,911 'குரூப்-டி' பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

    • மகனுக்கு எழுதி கொடுத்த 7 சென்ட் நிலம் மற்றும் வீடு அமைந்துள்ள கட்டிட ஆவணத்தை ரத்து
    • சப்-கலெக்டர் நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள குமாரபுரம் கைதோடு கோவில், விளாகம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை (வயது 74), இவருடைய மனைவி தங்கம் (63). இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் இறந்து விட்ட நிலையில் இளைய மகன் அனீஷ் (36) என்பவரோடு வசித்து வந்தனர்.

    இதில் தங்கம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அனீஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ததோடு பிரதீபா (35) என்பவரை 2-வதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு தாய், தந்தையான தங்கத்தையும், நீலகண்டபிள்ளையையும் அனீஷ் சரியாக கவனிக்கவில்லை. வயதான காலத்தில் மகன் கவனிப்பான் என எதிர்பார்த்திருந்த பெற்றோருக்கு இது பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இருவரையும் வீட்டை விட்டு மகன் அனீஷ் துரத்தி விட்டார். இதனால் அவர்கள் உறவினர்கள் பராமரிப்பில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் தீர்ப்பாயத்தில் தங்கம் புகார் மனு கொடுத்தார். அதில், மகன் அனீஷ், மருமகள் பிரதீபா ஆகிய 2 பேரும் சேர்ந்து எங்களை கவனிக்காமல் வீட்டை விட்டுதுரத்தி விட்டனர்.

    எனவே எங்களது எதிர்காலம் கருதி மகனுக்கு எழுதி கொடுத்த சொத்துகளை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த பத்மநாபபுரம் உட்கோட்ட நடுவரும், சப்-கலெக்டருமான கவுசிக் இருதரப்பினரையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

    இதில் இருதரப்பு வாதங்களையும் அவர் பதிவு செய்து கொண்டார். பெற்றோரை அனிஷ் முறையாக பாதுகாக்கவும், பராமரிக்கவும் தவறியுள்ளார் என நடுவர் கவுசிக் முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து தாயார் தங்கம், மகனுக்கு எழுதி கொடுத்த 7 சென்ட் நிலம் மற்றும் வீடு அமைந்துள்ள கட்டிட ஆவணத்தை ரத்து செய்தார். மேலும் பெற்றோரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் 'மகன் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அப்படி செய்தால் போலீஸ் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டார். பின்னர் ஆவணம் ரத்து செய்த உத்தரவை தக்கலை சார்பதிவாளருக்கும் அனுப்பினார்.

    • தைப்பூசத்தையொட்டி, தேரோட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், வழக்கம் போல், தைப்பூச நாளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    • வருகிற பிப்ரவரி 9-ந் தேதி வரை தினசரி கட்டளைதாரர்கள் மூலம் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தைப்பூசத்தை முன்னிட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மற்றும் தேரோட்டம் நடைபெறும்.

    இந்த ஆண்டு, வரும் பிப்ரவரி 5-ந் தேதி, தைப்பூச விழா தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டப்படுகிறது. மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில், ரூ.40 லட்சம் மதிப்பில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில் திருப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இதை முன்னிட்டு, முன் கோபுரம் வர்ணம் பூசுதல், தேருக்கான பழைய மரக் கட்டைகள் அகற்றி, புதிய மரக்கட்டைகள் பொருத்தப்படுகிறது. கோவில் பகுதியில் மேல்தளம் அமைத்தல், பழைய ஆஸ்பெஸ்டாஸ் சீட் அகற்றி, பூ வேலைப்பாடுகள் அமைத்தல், கதவு, ஜன்னல் அமைத்தல், பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை கட்டுதல் போன்ற பல்வேறு பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு, தைப்பூசத்தையொட்டி, தேரோட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், வழக்கம் போல், தைப்பூச நாளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி, தைப்பூசக் கொடியேற்றம் கோவிலில் நடைபெற்றது. வருகிற பிப்ரவரி 9-ந் தேதி வரை தினசரி கட்டளைதாரர்கள் மூலம் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வருகிற பிப்ரவரி 5-ந் தேதி, தைப் பூசத்தன்று, பால் குடம், தீர்த்தக்குடம், அபிசேகம் மற்றும் காவடி ஊர்வலம் நடைபெறும். விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

    • திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
    • திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருச்சி- திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் இன்டர்சிட்டி ரெயில் ேசவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 22627) ரெயில், திருநெல்வேலி- திருவனந்தபுரம் இடையேயும், மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 22628) ரெயில், திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையேயும் வரும் 4-ந் தேதி முதல் 9 மற்றும் 14 முதல் 17-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அதே வேளையில், திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாம்பன் பாலத்தில் 28-ந் தேதி வரை ெரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து இன்று (25-ந் தேதி) மற்றும் 26, 27-ந் தேதிகளில் வரும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் டிசம்பர் 26, 27, 28-ந் தேதிகளில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ெரயில்கள் ஆகியவை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.

    நாளை (26-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை திருச்சி-ராமேஸ்வரம், மதுரை-ராமேசுவரம், ராமேசுவரம்-கோவை விரைவு ெரயில்கள் ஆகியவை இரு மார்க்கத்திலும் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்.

    பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம் ெரயில் நிலையத்தில் 9360548465, மண்டபம் ெரயில் நிலையத்தில் 9360544307 ஆகிய அலைபேசி எண்களுடன் உதவி மையம் செயல்படுகிறது என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் திட்டமிடப் பட்டுள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
    • தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் திட்டமிடப் பட்டுள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ரெயில் எண்:06772 கொல்லம் சந்திப்பு-கன்னியாகுமரி மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06773 கன்னியாகுமரி-கொல்லம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06429 கொச்சுவேளி-நாகர் கோவில் சந்திப்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06430 நாகர்கோவில் சந்திப்பு-கொச்சுவேளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:16366 நாகர்கோவில் கோட்டயம் முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் நவம்பர் 17, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஒரு மணிநேரம் தாமதமாக ஓடும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

    • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    • சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற சிறுவர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 15 சிறுவர்கள் தங்கி அரசு பள்ளிகளில் படித்து வந்தனர்.கடந்த 5ந் தேதி இரவு உணவு மற்றும் இனிப்பு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.இதில் மாதேஷ்(வயது 14), அத்தீஷ் (11), பாபு (10) ஆகிய 3 சிறுவர்கள் பலியாகினர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினர். திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    கலெக்டர் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் ஆய்வறிக்கை சென்னையில் உள்ள சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கலெக்டர் கூறுகையில் ,ஆய்வின் அடிப்படையில் முதல்கட்டமாக ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் பூட்டப்பட்டது. சிறுவர் நலனை கருத்தில் கொள்ளாமல் கவனக்குறைவாக சேவாலயம் நடத்தப்பட்டு வந்துள்ளது.சிறுவர்கள் தங்குவதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது. சேவாலய உரிமத்தை ரத்து செய்யுமாறு ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • கோவையில் தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும்.
    • இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

     திருப்பூர்:

    ஈரோடு ரெயில் நிலையம் அருகே பொறியியல் பணி நடைபெறுவதால் கோவை-சேலம் தினசரி ரெயில் (எண்.06802) கோவையில் தினமும் காலை 9.05 மணிக்கு புறப்–படும். இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.இதுபோல் சேலம்-கோவை தினசரி ரெயில் (எண்.06803) சேலத்தில் தினமும் மதியம் 1.40 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம். எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வந்த பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், பூதப்பாண்டி கட்டிடபிரிவு உதவி பொறியாளர் அலுவலகம் ஆகியவை பராமரிப்புக்கு என்று தென்காசி மாவட்டம் ஆலங்கு ளம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று தக்கலையில் இயங்கி வந்த கட்டிட பிரிவு அலுவலகம் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    தமிழக பொதுப்பணித்து றையில் கட் டிடஅமைப்பு உருவாக்கப்பட்டபோது, குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டம், 4 உப கோட்டம் மற்றும் 10 பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அரசு கட்டிடங்களை பராமரிப்பு செய்து வருவ துடன், புதிய கட்டிடங்க ளையும் கட்டி வருகிறது.

    இந்த அலுவலகங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து மாற் றப்படுவதால் ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம், 3 உதவி பொறி யாளர் இளம் பொறியாளர், ஒரு கண்காணிப் பாளர், ஒரு உதவியாளர் பணியிடம் போன்றவை இந்தமாவட் டத்தில் இருந்து பறிபோய் விடுகிறது. இதனைக் கருத் தில் கொண்டு, குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த அலுவலகங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு பிறப்பிக்கப் பட்ட அரசு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.

    • கும்பகோணம் வழியாக செகந்திராபாத் நகருக்கு இயங்கிய சிறப்பு ரெயில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
    • தீபாவளியை ஒட்டி வரும் பயணிகளுக்கு நல்ல பயனாக அமையும்.

    பாபநாசம்:

    தீபாவளி பண்டிகையை ஒட்டி செகந்திராபாத்-தஞ்சாவூர் இடையே சென்னை எழும்பூர், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் பாபநாசம் வழியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

    வண்டி எண் 07685 செகந்திராபாத்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 8.25 மணிக்கு செகந்திராபாத்தில் புறப்பட்டு நால்கொண்டா, குண்டூர், தெனாலி, சென்னை எழும்பூர் (ஞாயிறு காலை 10.15), திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, வழியாக மறுநாள் ஞாயிற்று கிழமை மாலை 5.10 மணிக்கு கும்பகோணம், 5.24 மணிக்கு பாபநாசம் வந்து தஞ்சாவூருக்கு இரவு 7.00 மணிக்கு சென்றடையும்.

    மறு மார்கத்தில் வண்டி எண் 07686 தஞ்சாவூரிலிருந்து அக்டோபர் 24 மற்றும் 31ம் தேதி (திங்கட்கிழமை) காலை 7.00 மணிக்கு புறப்பட்டு பாபநாசம் (7.19 காலை) கும்பகோணம் (7.48 காலை) சென்னை எழும்பூர் (பகல் 2.00 மணி) வந்து செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு செகந்திராபாத் சென்றையும். கும்பகோணம் வழியாக செகந்திராபாத் நகருக்கு இயங்கிய சிறப்பு ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் தற்போது பண்டிகைக்கால சிறப்பு ரயில் இவ்வழியே அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    இந்த சிறப்பு ரயில் ஆந்திரா, தெலுங்கானா மாநில பகுதிகளில் மற்றும் சென்னையில் இருந்து மெயின் லயன் பகுதிக்கு தீபாவளியை ஒட்டி வரும் பயணிகளுக்கு நல்ல பயனாக அமையும்.

    இத்தகவலினை திருச்சி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
    • இத்தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை-திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கோவை-சேலம் பயணிகள் தினசரி ரெயில் (எண்.06802) கோவையில் இருந்து தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் சேலம்-கோவை ரெயில் (எண்.06803) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×