search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராக்கெட்"

    • ஹமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இஸ்ரேல் மீது 250-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    பெய்ரூட்:

    இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

    இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 117 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    திடீர் தாக்குதலால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதமாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது. இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுக்ள் சபை அறிக்கை தெரிவிக்கிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை கடந்துள்ளது. அதேபோல், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர். ஒரே நாளில் இஸ்ரேல் மீது 250-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.
    • 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது.

    ஸ்பேஸ் எக்ஸ்ன், ஸ்டார்ஷிப் பிளைட்5 ராக்கெட் விண்ணில் செலுத்திய பிறகு, அதை ஏவுவதற்கு பயன்படுத்திய பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்தில் வந்தடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் மற்றும் பொதுவான விண்வெளி ஃபிளைட்களுக்கான புதிய தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    அதன்படி, புதிய அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஏவுதல் மற்றும் வெற்றிகரமாக திரும்புதலை நோக்கமாக கொண்ட ஸ்பேஸ்எக்ஸ், இன்று தனது 5வது விமான சோதனையை நிகழ்த்தியது.

    இதில், ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.

    இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது. அதன்படி, 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட், ஏவுகணை கோபுரத்தில் இருந்து புறப்பட்ட அதே இடத்தில் வந்து லேண்ட் ஆனது.

    ஸ்டார்ஷிப் ஆனது "சாப்ஸ்டிக்" என்ற அதன் கைகளால் பூஸ்டரை லாவகமாக பிடித்தது.

    வலைதளங்களில் பலரும் இதன் வீடியோவை பகிர்ந்து "என்னால் இதை நம்பவே முடியவில்லை" என ஆச்சரியத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    • துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது.
    • பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த முடியும்

    ஈரான் ஏவிய ராக்கெட் மூலம் புதிய ஆராய்ச்சி சாட்டிலைட் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் ஈரான் செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவது இது இரண்டாவது முறையாகும்.

    தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள சம்ரான் -1 [Chamran-1] என்று இந்த சாட்டிலைட் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரானின் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் 60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டு வருங்காலங்களில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும் டெக்னலாஜியின் [orbital manoeuvre technology] ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தைச் சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில் ஈரான் சாட்டிலைட்டை ராக்கெட் மூலம் ஏவ பயன்படுத்திய யுக்தியை போர் ஆயுதங்களான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ பயன்படுத்தக்கூடும் என்று  அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தமுடியும் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. 

    • இன்று காலை முதலே பிஷ்ணுபுர் மாவட்டத்தில் கிளர்ச்சிக்காரர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்
    • இந்த இடம் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தலைமையகம் அமைத்திருந்த இடத்துக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    மணிப்பூர் முன்னாள் முதல்வரும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவருமான மைரேம்பாம் கொய்ரெங்[Mairembam Koireng] வீட்டின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 13 வயது சிறுமி உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை முதலே பிஷ்ணுபுர் மாவட்டத்தில் கிளர்ச்சிக்காரர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மொய்ரங் [Moirang] மதியம் முன்னாள் முதல்வர் வீட்டு காம்பவுண்டுக்குள் ராக்கெட் பாய்ந்துள்ளது.

    இந்த இடம் இந்திய தேசிய ராணுவத்தில் தலைமையகம் அமைத்திருந்த இடத்துக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இம்பாலில் இருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதிகளிலிருந்து இந்த ராக்கெட்டுளை கிளர்ச்சிக்காரர்கள் ஏவி வருகின்றனர். மேலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பற்றமான சூழல் நிலவுகிறது.

    பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் முன்னாள் முதல்வர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைரேம்பாம் கொய்ரெங் 1963 மற்றும் 1969 ஆகிய காலகட்டத்திற்கு இடையில் 3 முறை முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட்டை உருவாகியுள்ளது.
    • தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா இதை உருவாகியுள்ள்ளது

    இந்தியாவின் முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட் நாளை சென்னையில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா [Space Zone India ] மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைத்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட்டை உருவாகியுள்ளது.

     

     இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட் ஆகும். மூன்று சோதனை செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட்டி நாளை மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இருந்து காலை 7 மணியளவில் லான்சர் மூலம் வானில் ஏவப்பட்ட உள்ளது. 3.50 மீட்டர்கள் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரே பறக்கக்கூடிய திறன் உடையது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். 

    • இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொடர் வெற்றியானது உலக அளவில் பெரும் பாராட்டைப் பெறுகிறது.
    • இஸ்ரோ விஞ்ஞானிகளின் விண்வெளி ஆராய்ச்சி தொடர்ந்து சிறக்க, வளர, உயர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் ஒரு மைல் கல்லாக செயற்கைக்கோள்களை எஸ்.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் நாட்டு மக்கள் பெரும் பயனடைவார்கள். இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொடர் வெற்றியானது உலக அளவில் பெரும் பாராட்டைப் பெறுகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் விண்வெளி ஆராய்ச்சி தொடர்ந்து சிறக்க, வளர, உயர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன். இதற்காக கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக பணியாற்றிவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது
    • ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 31ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேலுக்கிடையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில் லெபனானில் செய்யப்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

    இந்த குழப்பங்களுக்கு மத்தியில் மற்றொரு மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைத்தளத்தைக் குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

     

    • H3 வகையைச் சேர்ந்த ராக்கெட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.
    • ஆனால் விண்ணில் பாய்ந்த 14 நிமிடத்தில் வெடித்து சிதறியது.

    ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம்) இன்று புதிய H3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை (Daichi-4 (ALOS-4)) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

    இந்த ராக்கெட் நேற்று விண்ணில் பாய இருந்தது. ஆனால் சீதோஷ்ண நிலை காரணமாக (மோசமான வானிலை) தள்ளிவைப்பட்டது. இந்த நிலையில் டனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    சுமார் 15 நிமிடம் 34 வினாடிகளில் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து சென்றதாகவும், அதன்பின் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.

    H3 வகையைச் சேர்ந்த ராக்கெட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் விண்ணில் பாய்ந்த 14 நிமிடத்தில் வெடித்து சிதறியது. 2-ம் வகை என்ஜின் செயல்படாமல் தோல்வியடைந்ததால் வெடித்து சிதறும் நிலை ஏற்பட்டது. அதன்பின் 2-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செலுத்தியது.

    H3 இரண்டு நிலை திரவ எரிபொருள் ராக்கெட் ஆகும். H2A வகை ராக்கெட் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக H3 வகை ராக்கெட் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    H2A ராக்கெட்டை விட 1.3 மடங்கு அதிகமான சரக்குகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது H3 ராக்கெட். H2A ராக்கெட்டை விட பாதி அளவே செலவினம் கொண்டது H3 ராக்கெட் ஆகும்.

    1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 9 வருடங்களுக்கு முன்னதாக இந்த ராக்கெட் உருவாக்கும் பணி தொடங்கியது.

    • இந்தியாவில் வைத்தே ராக்கெட்களை தயாரிக்கும் தொழிலில் அதானி நிறுவனம் ஈடுபட உள்ளது.
    • தனது தயாரிப்புகளை உலகம் முழுவதிலும் அதானி ஏரோஸ்பேஸ் சந்தைப்படுத்த உள்ளது.

    இந்தியாவைச் சேர்ந்த உலகப் பணக்காரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், துறைமுகம்,விமானம், சோலார் உள்ளிட்ட துறைகளில் கோலோச்சி வருவதால் கடந்த 10 ஆண்டுகளாக கவுதம் அதானியின் சொத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அதானி குழுமத்தின் கிளை நிறுவனமான அதானி டிபன்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பிரான்சின் தாலேஸ் நிறுவனத்துடன் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

    அதாவது இந்தியாவில் வைத்தே ராக்கெட்களை தயாரிக்கும் தொழிலில் அதானி நிறுவனம் ஈடுபட உள்ளது. மத்திய அரசு பல்வேறு பொதுத்துறைகளை தனியார் மயமாக்கி வரும் நிலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இஸ்ரோவுக்கான ராக்கெட் தளவாடங்கள், இந்திய ராணுவத்துக்கான ராக்கெட் தளவாடங்களை அதானி ஏரோஸ்பேஸ் நிறுவனம் மேம்பட்ட முறையில் தயாரிக்க உள்ளது.

    முன்னதாக இந்தியாவுக்கான பெருமாபாலான ராக்கெட்டுகளை வெளிநாடுகளிலிருந்தே அரசு வாங்கி வந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரிப்பு நடைபெற உள்ளது. இந்தியா மட்டுமின்றி தனது தயாரிப்புகளை உலகம் முழுவதிலும் அதானி ஏரோஸ்பேஸ் சந்தைப்படுத்த உள்ளது.

    மேலும் இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்த்த மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கும் EDGE குழுமத்துடன் அதானி குழுமம் இதுபோன்றதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. 

    • 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' அக்னிபான் ராக்கெட்டை தயாரித்தது.
    • செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக ராக்கெட் ஏவப்பட இருந்தது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஏவுதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது.

    இந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில்முனைவோரால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    அதில் இருந்து முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட, 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' தயாரித்த 'அக்னிபான்' ராக்கெட் நாளை காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அக்னிபான் ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தொழில்நுட்ப கோளாறு சீரான பிறகு, விண்ணில் ஏவப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய விண்வெளி திட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.
    • காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் சிட்கோ தொழிற் பேட்டையில் பிரபல தனியார் நிறுவனத்தின் கனரக லாரி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவிற்கு தேவைப்படும் அதிநவீன கனரக லாரியை தயாரித்து சாலை மார்க்கமாக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொழிற்சா லையின் தலைமை செயல் அலுவலர் தெரிவித்தாவது:-

    இந்திய விண்வெளிதிட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.

    அதன் பிறகு அவற்றை இஸ்ரோவின் ஏவுதளமான ஸ்ரீஹரி கோட்டாவுக்கு கொண்டு செல்ல இந்த பிரம்மாண்ட லாரி பயன்படும்.

    லாரியின் விலை ரூ.1.40 கோடி ஆகும். இந்த லாரி 74 அடிநீளமும், 17.5 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது. இதன் மேற்புரம் தானாக திறந்து கொள்ளும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வாகனம் எந்த பக்கமும் தானே திரும்பிக்கொள்ளும் சிறப்பு ஸ்டேரிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தின் மூலம் மகேந்திரகிரியில் தயாராகும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை மிகுந்த பாதுகாப்புடன் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அனுப்ப முடியும்.

    மழை உள்ளிட்ட அனைத்து வித பாதிப்புகளையும் தாங்கி உள்ளே இருக்கும் ராக்கெட்டை பாதுகாப்புடன் கொண்டுச் செல்வதற்காக முழுவதும் இந்திய தொழில்நுட்பத்துடன் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு இரு சிறிய ரக லாரிகளை அனுப்பி வைத்தோம். தற்போது மகேந்திரகிரிக்கு மிகவும் நவீன முறையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட லாரியை உருவாக்கி அனுப்பி வைத்துள்ளோம்.

    மேலும் திருவனந்தபுரம் தும்பாவில் உள்ள இஸ்ரோ தளத்திற்கு ஒரு லாரி தயாரிக்கும் ஒப்பந்தம் பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன என்றார்.

    இந்நிலையில் லாரி அரக்கோணத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மகேந்திரகிரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி லாரி நேற்று மாலை அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் சென்றது. லாரி மிகவும் நீளமாகவும், அகலமாகவும் இருந்ததால் அந்த வழியில் நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 394-அடி உயரம் கொண்டது.
    • பூமிக்கு திரும்பி வந்து இந்தியப் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டது.

    உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் "சூப்பர் ஹெவி" எனப்படும் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்துள்ளது.

    33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 394-அடி உயரம் கொண்டது. இந்த ராக்கெட் சோதனை இரண்டு முறை தோல்வியில் முடிந்தது. அதில் ஏற்பட்ட தவறுகள் சரிசெய்யப்பட்டன.

    இந்த நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் தெற்கு டெக்சாசின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதை நேரலையில் 35 லட்சம் பேர் பார்த்தனர். வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் குறிப்பிட்ட இலக்கை சென்றடைந்தது. பின்னர் பூமிக்கு திரும்பி வந்து இந்தியப் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டது.

    ஆனால் மீண்டும் வளி மண்டலத்தில் நுழைந்த போது ராக்கெட் திடீரென்று தொடர்பை இழந்தது. இறுதி இலக்கை அடைவதற்கு முன்பே தொடர்பை இழந்தது. கீழ்-நிலை பூஸ்டர் வெற்றிகரமாக நீரில் தரையிறங்குவதில் தோல்வி்யடைந்தது.

    இருந்தபோதிலும் இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப்பின் மூன்றாவது ஏவுகணை சோதனையில் அதன் பல நோக்கங்களை பூர்த்தி செய்ய முடிந்ததாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

    ×