search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி வாட்ச் 2"

    • திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கம் கண்டனம்.
    • குறிப்பிட்ட பட காட்சிகளை நீக்க கோரிக்கை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தனராஜ் தலைமை வகித்து பேசும்போது.

    தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2-திரைப்படத்தில் நடிகர் மனோபாலா நடிக்கும் ஒருசில காட்சிகளில் இ-சேவை மைய ஆபரேட்டர்கள் ரூ.300 கொடுத்தால் தான் ஆதார் தொடர்பான சேவைகள் செய்ய முடியும் என்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த காட்சிகள் மூலம் இ-சேவை மைய ஆபரேட்டர்களை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மைய தொழில் மீதும், ஆபரேட்டர்கள் மீதும் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் காட்சிகள் இருப்பதால் குறிப்பிட்ட அந்த காட்சியை மட்டும் இந்தியன்-2 திரைப்படத்தில் இருந்து நீக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் படக்குழுவினருக்கும், திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.

    தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரஞ்சித், நவீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் வெளியான 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது.
    • வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.


    நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் படத்தின் காலண்டர் பாடலின் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இதனை படத்தின் நிறுவருமான லைகா வெளியிட்டுள்ளது.


    • சினிமா பற்றிய அவரது புரிதல் இணையற்றது.
    • புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் கமல்ஹாசன்.

    இந்தியன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா. இந்த படத்தின் 2-ம் பாகம் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகி உள்ளது. ஜூலை 12-ந் தேதி திரைக்கு வர இருக்கும் படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    சென்னை, மும்பை, சிங்கப்பூரில் நடந்த இந்தியன்-2 பட விழாவில் கமல் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். மும்பையில் நடந்த படத்தின் விழாவில் இந்தியன் முதல் பாகத்தில் நடித்த மனிஷா கொய்ராலா கமல்ஹாசனை நேரில் சந்தித்தார்.

    இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மனிஷா கொய்ராலா நான் இணைந்து நடித்த புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் கமல்ஹாசன். சினிமா பற்றிய அவரது புரிதல் இணையற்றது.

    அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருக்கலாம். அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் தன்னை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருப்பார் என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
    • போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது

    ரோடு ரேஜ் (Road rage) என்பது வாகனத்தை வேகமாக அல்லது கண்மூடித்தனமாக இயக்குது ஆகும். இந்தியாவில் இதனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பணக்காரர்களும், அரசியல், சினிமா பிரபலங்களும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக மாறியுள்ளது. சமீபத்தில் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உடபட இரண்டு இளம் ஐ.டி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்து வரும் நிலையில் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

     

    அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் டிரைவரும் ரவீனாவும் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.  

    பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசனின் கதாபாத்திரம் மிகவும் பேசப்படும்.
    • ஜூலை 12-ந்தேதி படம் திரைக்குக்கு வர இருக்கிறது.

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். லஞ்சத்தை எதிர்த்து போராடும் இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசனின் கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் வகையில் அமைந்ததுடன் படம் பெரிய வெற்றியை பெற்றது.

    28 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2-ம் பாகம் ஷங்கர் இயக்கத்தில் தற்போது தயாராகி வருகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து ஜூலை 12-ந்தேதி படம் திைரக்குக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.

    விழாவில் கமல்ஹாசன், ரகுல் பிரத் சிங், காஜல் அகர்வால், தம்பி ராமையா, இயக்குனர்கள் சங்கர், நெல்சன், லோகேஷ் கனகராஜ் மற்றும் பாபிசிம்கா உள்பட பலர் பங்கேற்றனர்.

    நான் தமிழன், நான் இந்தியன் என்பது எனது அடையாளம். இங்கு பிரிச்சு விளையாடனும்னு யாராவது நினைச்சா அது இந்தியாவில் நடக்காது. நாம் எப்போதும் வந்தாரை வாழ வைப்போம். தமிழனுக்கு எப்போதும் அமைதி காக்க வேண்டும் என்று தெரியும். எங்கே இருக்க வேண்டும் என்று தெரியும். தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக் கூடாது என்பதே என் எண்ணம்.

    பொதுவாக எனக்கு இரண்டாம் பாகம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் என்ன எதிர்பார்த்து வரவேண்டும் என்று மக்களுக்கு தெரியும். எக்கச் சக்க சோதனைகளை கடந்து இங்கு வந்து நிக்குறதுல எனக்கு சந்தோசம். இந்தியன் ஒரு பெரிய கதை. படம் மொத்தம் 3 பாகங்கள். இதே போன்று ஒரு படத்தை நான் சிவாஜியை வைத்து இயக்க நினைத்தேன். அவர்தான் என்னை இந்தியன் படத்தில் அப்பா-மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்க சொன்னார்.

    அவள் ஒரு தொடர் கதை படத்தில் என் சம்பளம் ரூ.2 ஆயிரம். படத்தின் பட்ஜெட் 4 லட்சம் ான் இப்போது தனி நபர் வருமானம் ஏறிவிட்டது. விலைவாசியும் உயர்ந்து விட்டது.

    இசை வெளியீட்டு விழாவிற்கு ஆன செலவு நான் நடித்த பல படங்களின் பட்ஜெட்டை காட்டிலும் அதிகம். மகள் ஸ்ருதி மனசு வச்சிருந்தா நான் இப்போது தாத்தாதான்.

    பிரமாண்டத்துக்கு உதாரணமே ஷங்கர் தான். உதயநிதி ஸ்டாலின் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் "திரிஷ்யம்" பெரும் வெற்றி பெற்றது
    • விஜயமோகன் எனும் வக்கீல் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார்

    கடந்த டிசம்பர் 21 அன்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடித்த "நெரு" திரைப்படம் உலகெங்கும் வெளியானது.

    2013ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வெளியாகி, வசூலில் சக்கை போடு போட்ட "திரிஷ்யம்" திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், நெரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் பெரும் வெற்றி பெற்றதும், 2021ல் இதே கூட்டணியில் "திரிஷ்யம் 2" வெளியாகி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

    சுமார் 2 வருடங்கள் கடந்து ஜீத்து ஜோசப்-மோகன்லால் இணைந்துள்ளதால், நெரு திரைப்படத்திற்கு மோகன்லால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்கும் ஆவலில் உலகெங்கும் திரைப்பட ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை போல் நெரு திரைப்படமும் நேர்மறை விமர்சனங்களுடன் வசூலை குவித்து வருகிறது.

    இதுவரை உலகெங்கும் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


    கதை சுருக்கம்:

    சாரா (அனஸ்வரா ராஜன்) எனும் இளம் பெண், பார்வை குறைபாடு உள்ள மாற்று திறனாளி. அவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறார். சிற்பக்கலை நிபுணரான சாரா, குற்றவாளியின் வடிவத்தை களி மண்ணில் செய்து தர, அதை வைத்து காவல்துறை, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. ஆனால், குற்றவாளி ஜாமீனில் வெளி வந்து விடுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக விஜயமோகன் (மோகன்லால்) எனும் வக்கீல் ஆஜராகி வழக்கை சிறப்பாக வாதாடி நீதியை நிலைநாட்டுகிறார்.

    விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
    • பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.

    ராமநாதபுரம்

    ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத் திற்கு கடந்த 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப் பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று (24-ந்தேதி) வேலை நாள் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்தி ருந்தார். அதன்படி இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாளாகும்.

    இந்தநிலையில் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மண்டபம், திருப்புல்லாணி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, நயினார்கோயில், போகலூர், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய11 ஒன்றியங்களில் சி.ஆர்.சி பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெறுகிறது.

    இதனால் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக தெரிவிக்கப் படுகிறது. மேலும் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை வழக்கம் போல் வகுப்புகள் நடக்கும் என தெரிவிக்கப் பட்டது. அதன்படி பள்ளிகள் இன்று செயல்பட்டன. 

    • 19-ந் தேதி முதல் 26ந் தேதி வரை துணைத்தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது
    • தேர்வெழுத மொத்தம் 380 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் :

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், பொதுத்தேர்வை எதிர்கொள்ளாதவர்களுக்கும் வருகிற 19-ந்தேதி முதல் 26ந்தேதி வரை துணைத்தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது.

    மே 10ந்தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி, பிஷப் உபகாரசாமி பள்ளி, தாராபுரம் விவேகம் மெட்ரிக் பள்ளி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வெழுத மொத்தம் 380 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கேஜிஎஃப்-2 திரைப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியான நிலையில் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி நடிப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி கேஜிஎஃப்-2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கேஜிஎஃப்-2 திரைப்படம் 1,500 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதற்கிடையில், படத்தில் டிரைலரில் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையிலும், புகைப்பிடித்தல் ஆரோக்கியமான சமூக பழக்கம் என்றும், புகைப்பிடித்தல் ஒரு ஸ்டைல் என்பது போலவும், புகைப்பிடித்தலை ஊக்குவிப்பது போலவும் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

    கேஜிஎஃப்-2
    கேஜிஎஃப்-2

    இதனால், கேஜிஎஃப் 2 திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று கர்நாடக மாநில ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கேஜிஎஃப்-2 திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகிவிட்டதால் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

    கே.ஜி.எப்.-2 படத்தில் வரும் ராக்கி பாய் வேடத்தில் ஈர்க்கப்பட்டு, சிறுவன் செய்த விபரீத செயலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
    கே.ஜி.எப். என்ற தங்க வயல் கோட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் கே.ஜி.எப். இதன் 2ம் பாகம் கே.ஜி.எப். சேப்டர் 2 என்ற பெயரில் புது வருட தினத்தில் வெளியானது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த, நடிகர் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூலில் பல நூறு கோடிகளை கடந்து சாதனை படைத்தது. வேகமும், விறுவிறுப்பும் கலந்து சண்டை பிரியர்களுக்கு தீனி போட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. படம் வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், அதில் வரும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. அவர்களது மனதில் இருந்து நீங்காத இடம் பெற்றுள்ளது. 

    கே.ஜி.எப்.-2
    கே.ஜி.எப்.-2

    இந்த படத்தினை தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள 15 வயது சிறுவன் 2 நாட்களில் 3 முறை பார்த்திருக்கிறான். அதில் ராக்கி பாய் வேடத்தில் வரும் நடிகர் யஷின் நடிப்பில் ஈர்க்கப்பட்டு உள்ளான். இதனால், ஒரு முழு சிகரெட் பேக்கையும் ஒரே மூச்சில் புகைத்துள்ளான். இதன் விளைவாக, அந்த சிறுவனுக்கு கடுமையான தொண்டை வலி மற்றும் இருமலும் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை ஐதராபாத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்பின்பு மருத்துவர்கள் போராடி சிகிச்சை அளித்து சிறுவனை மீட்டுள்ளனர். அவனுக்கு கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டு உள்ளது. 

    கே.ஜி.எப்.-2
    கே.ஜி.எப்.-2

    இது பற்றி நுரையீரல் துறை மருத்துவர் ரோகித் ரெட்டி பாதுரி கூறும்போது, ராக்கி பாய் போன்ற வேடங்களை பார்த்து டீன்-ஏஜ் சிறுவர்கள் எளிதில் ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். இந்த இளஞ்சிறுவன், ஒரு முழு சிகரெட் பேக்கையும் புகைத்ததில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளான். நமது சமூகத்தில் திரைப்படங்கள் அதிக தாக்கம் ஏற்படுத்த கூடிய ஒன்றாக உள்ளது. சிகரெட் புகைத்தல், புகையிலை போடுதல் அல்லது மதுபானம் குடித்தல் போன்ற செயல்களை, கவர்ந்திழுக்கும் விசயம் ஆக்காமல் பார்த்து கொள்ளும் அறநெறி பொறுப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு உள்ளது. பெற்றோர்களும், தங்களுடைய குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது குழந்தைகளின் செயல்களில் எந்த காரணிகளெல்லாம் தாக்கம் ஏற்படுத்துகிறது என கண்காணிக்க வேண்டும். பின்னர் வருந்துவதற்கு பதில், முன்பே அவர்களுக்கு புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் போன்றவற்றின் தீய விளைவுகளை பற்றி எடுத்து கூறி, அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெற்றோர்கள் முக்கிய பங்காற்றுவது மிக அவசியம் என கூறியுள்ளார்.
    சேலத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி அதன்படி சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் சேலம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்துவதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது பணிக்கு வந்த ஆசிரியர்கள் திடீரென விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கமாக பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் தன் மையங்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தது. 

    தற்போது வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு மையங்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஆசிரியர்கள் தொலைவிலுள்ள மையங்களுக்கு செல்ல வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

    தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அதிகாரிகளுடன் சமரசம் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
    • ஜூன் 19ந் தேதி துணைத்தேர்வு நடக்குமென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகளை முதலில் கண்டறிய வேண்டும்.

    திருப்பூர் :

    கடந்த 8ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவர் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 19ந் தேதி துணைத்தேர்வு நடக்குமென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கு ஒரு மாதம் இருப்பதால் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தேர்வுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் வாயிலாக, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி தேர்வுக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகளை முதலில் கண்டறிய வேண்டும். தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர் விபரத்தை வகுப்பாசிரியர் மூலம் சேகரித்து அவர்களை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஊக்கப்படுத்த வேண்டும். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் உதவியோடு ஆலோசனைகளை வழங்கி துணைத்தேர்வெழுத ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஆசிரியர் பணியிடம் சூழலுக்கு தக்கவாறு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தேவையான உரிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும். பயிற்சி மாணவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அடுத்த வாரம் அல்லது மே இறுதியில் துணைத்தேர்வு எழுத உள்ள மாணவருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை செய்து வருகிறது. பிளஸ் -2 தேர்வு முடிவு 8-ந் தேதி வெளியாகிய நிலையில் தேர்ச்சி பெறாத தேர்வுக்கு வராத மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 17ந்தேதியுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் நாளை 23-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ×