கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

ஆடி மாத ராசிபலன்

Published On 2024-07-17 03:07 GMT   |   Update On 2024-07-17 03:08 GMT

மாற்றங்களை பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும் கும்ப ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். மேலும் 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே ஆரோக்கியத் தொல்லையும், அதை முன்னிட்டு மருத் துவச் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் குறுக்கீடுகளும், எதிரிகளின் தொல்லைகளும் வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடக்க மாட்டார்கள். குடும்பப் பிரச்சினை கூடுதலாகி மன அமைதி குறையும். எதையும் உங்கள் நேரடிப்பார்வையில் வைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

குரு - செவ்வாய் சேர்க்கை

மாதத் தொடக்கத்திலேயே குருவும், செவ்வாயும் இணைந்து, 4-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். எனவே 'குரு மங்கள யோகம்' உருவாகிறது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் கைகூடிவரும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்போடு சில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலை விரிவு செய்யவும், புதிய முதலீடுகள் செய்து வளர்ச்சி அடையவும் நினைப்பீர்கள். ஆனால் ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது அரிது. உழைப்புக்கேற்ற பலனை எதிர்பார்க்க இயலாது. அனுபவஸ்தர் களின் ஆலோசனைகள் இக்காலத்தில் கைகொடுக்கும்.

புதன்-வக்ரம்

கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். பஞ்சமாதிபதியான அவர் வக்ரம் பெறுவதால், பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் மீண்டும் தலைதூக்கும். எதிரிகளின் பலம் கூடும். லாபம் ஒரு வழியில் வந்தாலும், மற்றொரு வழியில் செலவு வந்துகொண்டே இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வந்துசேரும். எனவே அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். அஷ்டமாதிபதியாகவும் புதன் இருப்பதால், அதன் வக்ர காலத்தில் மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வீடு மாற்றம் நன்மை தரும்.

சிம்ம - சுக்ரன்

ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம் தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் கணிசமான லாபம் கைகளில் புரளும். வாகன யோகம் உண்டு. புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்கள் நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர்கள், கணக்கு, வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு, படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். துணிந்து எந்த முடிவையும் எடுக்க இயலாது.

பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 19, 20, 26, 27, 31, ஆகஸ்டு: 1, 10, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

Similar News