வேகமும், விவேகமும் இணைந்த கும்ப ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு சப்தமாதிபதி சூரியனும் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிகிறது. எனவே சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். 2-ல் ராகு 8-ல் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.
கும்பம் - புதன்
மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். பஞ்சமாதிபதியான புதன், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பிள்ளை களால் பெருமை சேரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் அகலும். பிரபலங்களின் நட்பால் பெருமை காண்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு வரலாம். மாமன், மைத்துனர் வழியில் விரயம் உண்டு.
மகரம் - சுக்ரன்
மாதத் தொடக்க நாளிலேயே, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாயோடு இணைந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. தொழில் மாற்றங்கள் ஏற்படலாம். பங்குதாரர்கள் பகையாகலாம். உடன்பிறப்புகள் வழியில் பிரச்சினைகள் உருவாகும். விரயங்கள் அதிகரிக்கும் நேரம் என்பதால், எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்யுங்கள்.
மீனம் - புதன்
மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம-அஷ்டமாதி பதியாக விளங்குபவர் புதன். அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான் என்றாலும், பஞ்சமாதிபதியாகவும் அல்லவா அவர் விளங்குகிறார். எனவே பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வரலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களிடம் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம் - சுக்ரன்
மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல நேரமாகும். சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். உற்றார் உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையலாம். கலைஞர்கள் மிகுந்த முயற்சி எடுத்து முன்னேற்றம் காணவேண்டிய நேரமிது. மாணவ - மாணவியர்கள் திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கல்களும் சிறப்பாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 13, 14, 17, 18, 29,
மார்ச்: 1, 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.