வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை
வளமான பலன்களைப் பெறும் வாரம். ராசியில் அஷ்டமாதிபதி புதன் குரு பார்வையில் சஞ்சாரம் செய்வதால் 3,4-ம் அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தை நெருங்குகிறார். நல்ல வாழ்வியல் மாற்றம் உண்டாகும். கடந்த சில வருடங்களாக அர்த்தாஷ்டம சனியால் பட்ட இன்னல்கள் முடிவுக்கு வரப்போகிறது. விபத்தில் மருத்துவனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள். விரைவில் பணிக்கு செல்ல முடியும்.
விபத்துக் காப்பீட்டு தொகை கிடைக்கும். தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தடைபட்ட பணிகள் துரிதமாகும். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் ஒரிரு வாரங்களில் முடிவுக்கு வந்து விடும். எதிர்பாராத தனச் சேர்க்கையால் கடந்த கால இழப்புகள் இருந்த இடம் தெரியாது. தடைபட்ட பணி மாற்றம், ஊதிய உயர்வு, இடமாற்றம் உங்களை மகிழ்விக்கும். குடும்பத்துடன் பூர்வீகம் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். திருமண முயற்சி நிறைவேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். உடல்நிலை தேறும்.பவுர்ணமியன்று அன்னதானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406