12.01.2025 முதல் 18.01.2025 வரை
வாழ்க்கைத் தரம் உயரும் காலம். நீச்ச பங்க ராஜ யோகம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தான அதிபதி சூரியனின் பார்வையில் சஞ்சரிக்கிறார். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம் வந்து விட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும். தன வரவு சிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல், வாஸ்துப்படி வீட்டை திருத்தி அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் விலை உயர்ந்த அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்கு வார்கள்.
14.1.2025 அன்று காலை 4.19 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்கள், நெருக்கமானவர்கள் முதுகில் குத்தும் நேரம் என்பதால் உறவினர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. பவுர்ணமியன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406