வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை
24.11.2024 முதல் 30.11.2024 வரை
முன்னேற்றமான வாரம். ராசியில் புத, ஆதித்ய யோகம் குருவின் பார்வையில் உள்ளது.தந்தையால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும். நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். பெரிய அளவில் சொத்து வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பழைய முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். பணம் வரும் போது சேமித்து தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய நிலம் தொடர்பான வழக்குகளில் சாகமான தீர்ப்பு கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும்.
சிலருக்கு அத்தை அல்லது சித்தியின் மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும். அரசு, தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும். திருமண வாய்ப்பு தேடி வரும். தொழில் நிமித்தமாக பிரிந்த வாழ்க்கைத் துணை இல்லம் திரும்புவார். வீட்டுக்கடன் குறைந்த வட்டியில் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். சிலருக்கு வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும் குடும்ப உறவுகளிடம் மன சஞ்சலத்தை அதிகப்படுத்தும் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். ஸ்ரீ வாராகியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406