வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை
27.10.2024 முதல் 3.11.2024 வரை
விபரீத ராஜ யோகமான வாரம். ராசியில் 8. 11-ம் அதிபதி புதன் மற்றும் 7, 12-ம் அதிபதி சுக்ரன் குரு பார்வையில் சஞ்சாரம் செய்கிறார். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது.பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் ,வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள் .பொருளாதார பற்றாக்குறை அகலும். வரவு செலவு சீராக இருக்கும்.சிறிய உழைப்பில், குறைந்த முயற்சியில் விட்டதை பிடிக்கப் போகிறீர்கள். கைவிட்டுப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் வரும். தகுதிக்கேற்ப பதவி உயர்வும், புதிய வாய்ப்புகள், பொறுப்புகள் வழங்கப்படலாம்.
வழக்குகள் சாதகமாகும்.தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். குழந்தைப்பேறு, திருமணம், வீடு, வாகனம் போன்ற பாக்கிய பலன்கள் கைகூடும்.தீபாவளிக்கு பிறகு சிலருக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும்.உங்கள் குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். நோய் வைத்தியத்திற்கு கட்டுப்படும். கந்தர் அநுபூதி கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406