வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை
8.12.2024 முதல் 14.12.2024 வரை
பாக்கிய பலன்கள் மேன்மை பெறும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய். ராசியில் சூரியன், புதன் சேர்க்கை குரு பார்வையில் சஞ்சாரம் என முக்கிய கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளது. பாக்கிய பலன்களும் அதிர்ஷ்டமும் கூடும். திட்டமிட்ட காரியங்களை இனி மெல்ல மெல்ல நிறைவேற்றுவீர்கள். திருமணம், வீடு வாகன யோகம், புத்திர பிராப்தம், பிள்ளைகளின் சுப விசேஷங்கள், பேரன் பேத்தி யோகம், நல்ல வேலை, தொழில் என சுப பலன்கள் நடக்கும்.
சிலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம். இளைய சகோதரரால் தொழில் விரயம், முடக்கம் வில்லங்கம் ஏற்படலாம். சிலருக்கு தாய்வழிச் சொத்தில் தாய்மாமாவுடன் எல்லைத் தகறாறு உண்டாகும். மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்கும். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் கவுரவம் பங்கப்படாமல் எளிதாக சமாளித்து விடுவீர்கள். புதிதாக வாங்கிய சொத்தின் பத்திரப் பதிவு நடக்கும். எந்த விஷயத்தையும் கணவன், மனைவி திட்டமிட்டு செய்வது நன்மையை மேலும் அதிகரிக்கும். மரிக்கொழுந்து சாற்றி சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406