வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை
22.12.2024 முதல் 28.12.2024 வரை
முன்னேற்றமான வாரம். ராசி அதிபதி செவ்வாய்க்கு சுக்ரன் பார்வை. ராசியில் உள்ள அஷ்டம அதிபதி புதனுக்கு குருப்பார்வை. அபரிமிதமான வாழ்வியல் முன்னேற்றம், விபரீத ராஜ யோகம் உண்டாகப் போகிறது. உங்களுக்குள் தெரியாமல் முடங்கி கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும். முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். லாட்டரி, பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம். அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்க வாய்ப்பு உள்ளது. தாய் வழி உறவுகள் மூலம் வரன் பற்றிய தகவல் கிடைத்து திருமணம் நடைபெறும்.
கணவன்-மனைவி இடையே சின்னச்சின்ன ஊடல்கள் வந்து போகும். அர்த்தாஷ்டம சனியால் எதிலும் பிடிப்பு இல்லாமல் இருந்த உங்களுக்கு சேமிப்பில் நாட்டம் அதிகரிக்கும். முரட்டு தைரியத்தை கைவிட்டு விவேகத்துடன் செயல்பட்டால் முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். முன்னோர்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406