வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை
17.11.2024 முதல் 23.11.2024 வரை
எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் வாரம்.ராசியில் சூரியன் புதன் சேர்க்கை குரு, சனியின் பார்வையில் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பாதிப்பு இருக்காது. வயோதிகர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் நினைத்த இடமாற்றம் கிடைப்பது உறுதி. அடிக்கடி பிராயணம் செய்ய வேண்டிய சூழல் நிலவும்.
வருமானம் நிறைவாக இருக்கும். 18.11.2024 அன்று அதிகாலை 4.31 முதல் 20.11.2024 அன்று காலை 8.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கஷ்டங்களை திரும்பி திரும்பி நினைவு கூறும் போது மன வருத்தம் மட்டும்தான் மிஞ்சும் புதிதாக என்ன செய்யலாம், புதிதாக என்ன தொழில் செய்யலாம், புது வேலையை பார்ப்பது போன்ற விஷயங்களில் மனதை ஈடுபடுத்துங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும். கிரகங்கள் சாதகமாக இருப்பதால் தேய்பிறை அஷ்டமியில் காவல் தெய்வங்களை வழிபட வேண்டும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406