உழைப்பே உயர்வுக்கு வழி என்று சொல்லும் ரிஷப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் மறைந்திருக்கிறார். 6-க்கு அதிபதி மறைவதால் 'விபரீத ராஜயோக' அடிப்படையில் திடீர் திடீரென நல்ல மாற்றங்கள் உருவாகும்.
திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்த, யாருடைய உதவியேனும் உங்களுக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உத்தியோக முன்னேற்றம், தொழில் வளர்ச்சி போன்றவை இப்பொழுது படிப்படியாக நடை பெறத் தொடங்கும்.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் அடைகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியாக விளங்குபவர், குரு. அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடு கட்டுவீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். நீங்கள் எடுத்த முயற்சியின் காரணமாக, பிறர் போற்றும் அளவிற்கு உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகல, அதிகார வர்க்கத்தினரின் ஆதரவை நாடுவீர்கள். வெளிநாட்டு முயற்சியில் தடை உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உங்கள் சகப் பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் இருக்கும் சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே இவரது பார்வை பலனால் வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். 'உறவினர்கள் சிலர் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறார்களே' என்று கவலைப்படுவீர்கள்.
உடன்பிறப்புகளின் அனுசரிப்பு குறையலாம். ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் சுமுகமாக நடந்துகொள்ளுங்கள். வாகன வழியில் சில பிரச்சினைகள் வரலாம். பணப் பற்றாக்குறையால் கவலைப்படுவீர்கள்.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ம் இடத்திற்கு செல்லும்போது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். அரசு வழியில் செய்த முயற்சி கைகூடும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு உண்டு. உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டு, புதிய ஆபரணங்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடத்திற்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவதால், இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். திருமணத்தடை அகலும். திடீர் விரயங்கள், நல்ல விரயங் களாக மாறும். பெற்றோரின் ஆதரவோடு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவி களுக்கு நினைவாற்றல் அதிகரிக்க, பயிற்சி மிகவும் அவசியம். பெண்கள், தங்களின் பிரச்சினைகளில் இருந்து விடுபட வாய்ப்பு உண்டு. மருத்துவச் செலவுகளை தவிர்க்க இயலாது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 23, 24, டிசம்பர்: 6, 7, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.