சமூகத்தில் நல்ல பெயர் எடுக்க விரும்பும் ரிஷப ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சகாய ஸ்தானத்தில் தனாதிபதி புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்துசேரும். தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். ஜென்ம ராசியில் குரு இருப்பதால் நிம்மதி குறைவாக இருந்தாலும், நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக கிடைக்க வேண்டிய யோகங்கள் கிடைக்கப்பெறும்.
குரு - செவ்வாய் சேர்க்கை
மாதத் தொடக்கத்தில் இருந்தே உங்கள் ராசியில் குருவும், செவ்வாயும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ராசிக்கு குரு லாபாதிபதி, செவ்வாய் விரயாதிபதி. இவை இரண்டும் சேரும் பொழுது, கிடைக்கும் லாபம் முழுவதும் விரயமாகும் நிலை உருவாகும். எனவே சேமிக்க இயலாது. ஒரு தொகை செலவழிந்த பின்னரே, அடுத்த தொகை கைக்கு கிடைக்கும். இட விற்பனை மூலமாக லாபம் கிடைக்கலாம். ஆனால் கிடைத்த லாபத்தை தொழிலுக்கான மூலதனமாக உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. உத்தியோகம், வீடு மாற்றம், இடமாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
புதன் - வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். ஆடி 28-ந் தேதி வரை வக்ர நிலையிலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு தன - பஞ்சமாதிபதியானவர் புதன். அவர் வக்ரம் பெறும்பொழுது பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கலில் குழப்பம் ஏற்படும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீ காரம் கிடைக்காது.
சிம்ம - சுக்ரன்
ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் வேளையில், மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். எதிரிகள் விலகுவர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தி, ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புகழ் கூடும். வியாபாரம், தொழில் செய்வர்களுக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடை பெறும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 22, 23, 26, 27, ஆகஸ்டு: 1, 2, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.