உலக அளவில் 1 பில்லியன் வியூஸ்.. நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படங்கள் இதுதான்!
- உலகளவில் ஓடிடி தளங்களில் முதன்மையாக விளங்குவது நெட்பிளிக்ஸ் ஆகும்.
- இந்தியாவிலிருந்து வரும் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் 2023 ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும்1 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன
உலகளவில் ஓடிடி தளங்களில் முதன்மையாக விளங்குவது நெட்பிளிக்ஸ் ஆகும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முக்கியமாக இளைஞர்களை அதிகமாகக் கொண்ட இந்தியாவில் நெட்பிளிஸ் தளத்துக்கு கணிசமான சாப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர். பல்வேறு ஜானர்களில் எடுக்கப்படும் சீரிஸ்களுக்கும், படங்களுக்கும் பெயர் பெற்றது நெட்பிளிக்ஸ்.
பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் ஊர்களின் இருப்பிடமான இந்தியாவில் கதைகளுக்கு பஞ்சம் இல்லை. அந்த வகையில் இந்தியாவிலிருந்து வரும் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் 2023 ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும்1 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் காலகட்டத்தில் இந்த புதிய மைல் கல்லை நெட்பிளிக்ஸ் எட்டியுள்ளது. சுஜோய் கோசின் "ஜானே ஜான்" 20.2 மில்லியன் பார்வைகளுடன் நெட்பிளிக்ஸ் இல் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படமாக உள்ளது, ஷாருக்கானின் "ஜவான்" 16.2 மில்லியன் பார்வைகளுடனும் விஷால் பரத்வாஜின் "குஃபியா" 12.1 மில்லியன் பார்வைகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
"OMG 2" (11.5 மில்லியன் வியூஸ்), "லஸ்ட் ஸ்டோரீஸ் 2" (9.2 மில்லியன் வியூஸ்), "டிரீம் கேர்ள் 2" (8.2 மில்லியன் வியூஸ்) மற்றும் கேரள பெண் சீரியல் கில்லரைப் பற்றிய ஆவணப்படமான "கர்ரி அண்ட் சயனைட்" (8.2 மில்லியன் வியூஸ்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.