சினிமா

எனக்கு நிறம் தடையாக இருந்தது - ஈஸ்வரி ராவ்

Published On 2019-01-01 11:12 GMT   |   Update On 2019-01-01 11:12 GMT
ராமன் அப்துல்லா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஈஸ்வரி ராவ் தனது சினிமா வாழ்க்கை பற்றி கூறியிருக்கிறார். #EaswariRao
ராமன் அப்துல்லா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஈஸ்வரி ராவ் காலா படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்ததன் மூலம் அடுத்த சுற்றில் நடித்து வருகிறார். தனது சினிமா வாழ்க்கை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘தமிழ்மொழி, டான்ஸ், நடிப்பு என்று எதுவும் தெரியாமல், 17 வயதில் ‘கவிதைபாடும் அலைகள்’ படத்தில் அறிமுகம் ஆனேன்.

கதாநாயகியாக தொடர்ந்து நடிக்க விரும்பினேன். ஆனால் என் கறுப்பு நிறமும் ஒல்லியான உடலமைப்பும் அதற்கு பெரிய தடையாக இருந்தன. நிறப்பாகுபாட்டால் ரொம்ப வருத்தப்பட்டேன். கவர்ச்சியான வேடங்கள்ல நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. ஆசைப்பட்டபடி என் சினிமா வாழ்க்கை அமையவில்லையே என்று கவலை ஏற்பட்டது. பிறகு சீரியலுக்கு வந்ததுடன், ‘சரவணா’ உள்பட சில படங்களில் நடித்தேன். 2006 -ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.



‘காலா’ படம் தொடர்பாக ரஞ்சித், 2 மாதமாக என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். 3வது மாதம்தான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நான் நடிப்பது உறுதியாச்சு. என்னை அறிமுகப்படுத்திய பாலு மகேந்திராவுக்கு அர்ப்பணிப்பு பண்ற மாதிரியும், பெண்களை உயர்வா சித்திரிக்கும் வகையிலும் உருவாகிவரும் படம்தான் ‘அழியாத கோலங்கள்’. இந்த படத்தை தயாரிப்பதுடன், படத்தில் சில காட்சிகளில் நடித்து இருக்கிறேன்’ என்று கூறினார்.

Tags:    

Similar News