சினிமா

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர்கள்

Published On 2019-01-14 05:43 GMT   |   Update On 2019-01-14 05:43 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரகாஷ்ராஜ், மோகன்லால், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட நடிகர்கள் போட்டியிட தயாராகி வருகிறார்கள். #PrakashRaj #Mohanlal #AkshayKumar
இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அரசியலில் இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இவர்களில் பலர் அமைச்சர்களாகவும் எம்.பி., எம்.எல்.ஏக்களாகவும் பதவி வகித்துள்ளனர். மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் முதல்-அமைச்சராகி ஆட்சி நடத்தி உள்ளனர்.

இப்போது கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி போட்டியிடுகிறது. ரஜினிகாந்தும் விரைவில் கட்சி தொடங்குகிறார். இந்த வருடம் புதிதாக மேலும் சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மத்திய தொகுதியில் அவர் நிற்கிறார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால், திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாராவதாக தகவல். பா.ஜனதா கட்சி அவருக்கு டிக்கெட் கொடுக்க ஆர்வமாக உள்ளது. நரேந்திர மோடியை மோகன்லால் சந்தித்து விட்டு வந்துள்ளார்.



ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்த அக்‌ஷய்குமாரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி அல்லது பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். நடிகை ஜெனிலியாவின் கணவரும் இந்தி நடிகருமான ரிதேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் லத்தூர் தொகுதியில் போட்டியிட முயற்சிக்கிறார்.
Tags:    

Similar News