சினிமா (Cinema)

ரஜினியை காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்

Published On 2019-01-28 10:25 GMT   |   Update On 2019-01-28 10:25 GMT
கர்நாடகாவில் படப்பிடிப்பில் இருந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் நடிகர் ரஜினியை ஒருவர் கத்தியால் குத்தவந்தபோது ஸ்டன்ட் நடிகர் அதிரடி அரசு கத்திக்குத்தை வாங்கிக் கொண்டு ரஜினியை காப்பாற்றினார். #Rajinikanth #AthiradiArasu
தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பதற்கு பெயர் போன நடிகர் அதிரடி அரசு. இவர் இயக்கி நடித்துள்ள படம் ‘கபடி வீரன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகர் ராதாரவி, நடிகை நமீதா, அபிராமி ராமநாதன் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்று பேசிய தயாரிப்பாளர்கள் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ரஜினிக்கு பதிலாக கத்திக்குத்து வாங்கி அவரது உயிரை காப்பாற்றியவர் அதிரடி அரசு எனக் கூறினார்.



இதுகுறித்து அவர் பேசியதாவது, “ ரிஸ்க் எடுப்பதற்கு பெயர் போனவர் அதிரடி அரசு. நாம் சொல்லி முடிக்கும் முன்பே அந்த வி‌ஷயத்தை செய்து முடித்துவிடுவார். அந்த அளவுக்கு ஆர்வம் மிக்கவர். எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால், கத்தியுடன் வந்து நின்றுவிடுவார். இவர் வருகிறார் என்றாலே எனது அலுவலகத்தில் உள்ளோர் பயப்படுவார்கள்.

மிகுந்த தைரியசாலி. சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவில் ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அங்கு திடீரென கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ரஜினியை கத்தியால் குத்த வந்தனர். அப்போது குறுக்கே விழுந்து கத்திக்குத்து வாங்கி ரஜினியின் உயிரை காப்பாற்றியர் அதிரடி அரசு தான்” என அவர் தெரிவித்தார். #Rajinikanth #AthiradiArasu #KabbadiVeeran

Tags:    

Similar News