சினிமா செய்திகள்

54-வது கேரள மாநில திரைப்பட விருதுகள் 2024 - சிறந்த படம் முதல் சிறந்த கலை இயக்குனர் வரை

Published On 2024-08-16 10:41 GMT   |   Update On 2024-08-16 10:41 GMT
  • 54- வது பெருமைக்குரிய கேரளம் மாநில விருதுக்கான பட்டியலை இன்று வெளியானது.
  • ஆடு ஜீவிதம் திரைப்படம் மொத்தம் 9 மாநில விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

54- வது பெருமைக்குரிய கேரளம் மாநில திரைப்பட  விருதுக்கான பட்டியலை இன்று திருவனந்தபுரத்தில் கேரள கலாச்சார விவகாரதுறை அமைச்சர் சஜி செரியன் இன்று வெளியிட்டார்.

சிறந்த நடிகருக்கான விருதை பிரித்விராஜ் ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.

இந்தாண்டு பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்காக மிக கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார் பிரித்விராஜ்.

இப்படத்திற்காக உடல் எடை குறைத்து , உண்மையில் அந்த பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு மனிதனாக நடித்து இருப்பார். திரைப்படம் தற்பொழுது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருதை `உள்ளொழுக்கு' படத்திற்காக ஊர்வசியும், தடவு திரைப்படத்திற்காக பீனா ஆர் வென்றுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் ஊர்வசி மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளொழுக்கு. மாமியார் மற்றும் மருமகள் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தனர். இப்படம் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சிறந்த இயக்குனருக்கான விருதை ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக பிளெஸ்ஸி வென்றுள்ளார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த காதல் தி கோர் திரைப்படம் வென்றுள்ளது.

ஆடு ஜீவிதம் திரைப்படம் மொத்தம் 9 மாநில விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற திரைத்துறைக்கான விருதுகளின் பட்டியல்


சிறப்பு குறிப்பு-அபிநயா கிருஷ்ணன் (ஜெய்வம்) கே ஆர் கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு (காதல்)

சிறப்பு நடுவர் (நடிப்பு) - கே.ஆர்.கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு (காதல்)

சிறப்பு ஜூரி படம் - ககனாச்சாரி

சிறந்த அறிமுக இயக்குனர் - பாசில் ரசாக் (தடவ்)

பிரபலமான படம் - ஆடுஜீவிதம்

நடனம் - விஷ்ணு (சுலைகா மன்சில்)

சிறந்த பெண் டப்பிங் கலைஞர் - சுமங்கலா (ஜனம் 1947 - பிரணயம் துடாருன்னு)

சிறந்த ஆண் டப்பிங் கலைஞர் - ரோஷன் மேத்யூ (உள்ளொழுக்கு), சிறந்த ஒப்பனை கலைஞர் - ரஞ்சித் அம்பாடி (ஆடுஜீவிதம்)

ஒலி வடிவமைப்பு - ஜெயதேவ் சகடத், அனில் ராதாகிருஷ்ணன் (உள்ளொழுக்கு)

ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி, சரத் மோகன் (ஆடுஜீவிதம்)

ஒத்திசைவு ஒலி - ஷமீர் அகமது (ஓ பேபி)

கலை இயக்கம் - மோகன்தாஸ் (2018)

எடிட்டிங் - சங்கீதா பிரதாப் (லிட்டில் மிஸ் ராவ்தர்)

பின்னணிப் பாடகி (பெண்) - ஆனி ஆமி (மங்களப்பூழுக்கும் - பசுவும் அற்புதவிளக்கும்)

பின்னணிப் பாடகர் (ஆண்) - வித்யாதரன் மாஸ்டர் (பத்திரநானொரு கனவில் - ஜனம் 1947 - பிராணயம் துடருன்னு)

சிறந்த இரண்டாவது படம் - இரட்டை

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News