சினிமா செய்திகள்
null

ரூ. 200 கோடி சம்பளம் வேண்டாம்னு, விஜய் அரசியலுக்கு வருகிறார்.. நடிகர் சவுந்தரராஜா

Published On 2024-06-23 07:02 GMT   |   Update On 2024-06-23 08:05 GMT
  • உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்.
  • இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும்

நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுகமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சவுந்தரராஜா விஜய்யின் அரசியல் பயணம் பற்றி பேசினார். 

 


அப்போது பேசிய அவர், விஜய் அண்ணா நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களா இருந்து, இன்று தொண்டராக மாறி இருக்கீங்க. நீங்க மட்டுமல்ல அடுத்தடுத்து, லாரி லாரி, டிரெயின், டிரெயின், ஃபிளைட் பிளைட்னு 2026-க்கு வந்துட்டே இருக்காங்க. நான் மிகைப்படுத்தி பேசல, இந்த உற்சாகம்தான் பலருக்கு பயத்தை உண்டாக்கும். அந்த உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்.

ஒரு விஷயம் நண்பா. நாம சின்ன விஷயம் பண்ணாலும், அதை ஃபோக்கஸ் பண்ண கேமரா இருக்கு. நாம வளரக்கூடாதுனு பண்ணுவாங்க. இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும், பலபேரை சிந்திக்க வைக்கும். நம்ம அண்ணன் தளபதிக்கு பலமா நிற்கும்.

நம்ம அண்ணன் தளபதி விஜய், இன்னைக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒருத்தர் சினிமா வேண்டாம்னு, நான் சம்பாதிச்ச பணம், வெற்றி, புகழ், வாழும் வாழ்க்கைக்கு இந்த மக்கள் தான் காரணம். அந்த மக்கள், இந்த மண்ணிற்காக வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வர பேராசை தான் காரணம். அந்த பேராசை, ஒவ்வொருத்தர் குடும்ப ரேஷன் கார்டில் உறுப்பினர் ஆவதுதான்.

விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா, அவருக்கு பேசவை தெரியாதுனு நிறைய பேர் என்கிட்ட சொன்னாங்க. நான் அவங்களுக்கு பதில் கொடுக்கவே இல்லை. இப்போ சொல்றேன், மௌனத்திற்கு இருக்கும் சக்தி மிகவும் பெரியது. விஜய் மிகவும் சைலண்ட் ஆன நபர். அந்த சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு. அது வைலன்ஸ்-க்கு எதிராக மட்டும் தான் வெளியே வரும்.

விஜய் மிகப்பெரிய பேச்சாளர், விரைவில் அதை பார்ப்பீங்க. பேச்சாளர் பக்கம்பக்கமா பேசனும்னு அவசியம் இல்லை. ஒரு வார்த்தை பேசினா போதும். தமிழக அரசியலை படிங்க. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஏன் ரூ. 10 லட்சம் கொடுக்கனும். நீங்கள் ரசிகரா இல்லாமல் தொண்டரா மாறுங்க. அரசியல் படிச்சு கேள்வி கேட்கனும். நீங்க கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கனும்.

நாம வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு நல்லது செய்வோம். விஜய் அண்ணா வழியில் மக்களுக்கும், மண்ணுக்கும் நல்லது செய்வோம், என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News