இயக்குநர் கதை சொன்ன போது அழுதே விட்டேன் - வையாபுரி
- "பைக் டாக்சி" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
- லைசென்ஸ் படத்தில் ஒரு நாள் மட்டுமே நடித்தேன்.
நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் கே.எம் இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் 'பைக் டாக்சி' படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், திரைப்படத்தின் பூஜை, திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.
அப்போது, இந்நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கூறியதாவது:-
நான் இப்படத்தில் அப்பா கதாபாத்திரம் செய்கிறேன். அப்பா என்றாலே சிறு நடுக்கம் வரும், அப்பா என்றாலே தானாகப் பொறுப்பு வரும், ஆனால் அப்பாவை விட இப்படத்தில் நாயகி நக்ஷாவிற்கு அதிக பொறுப்பு உள்ளது. இயக்குநர் கதை சொன்ன போது அழுதே விட்டேன். அத்தனை உருக்கமாக இருந்தது.
லைசென்ஸ் படத்தில் ஒரு நாள் மட்டுமே நடித்தேன். இயக்குநர் பேசக்கூட மாட்டார். இவர் ஒழுங்காகக் கதை சொல்வாரா ? என்று நினைத்தேன், மிரட்டிவிட்டார். ரெஹனா மேடம் இசையில் நடிப்பது மகிழ்ச்சி.
லைசென்ஸ் படம் வெற்றிப்படமாக இல்லையென்றாலும், அடுத்த பட வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இளஞ்செழியனுக்கு என் வாழ்த்துக்கள். கண்டிப்பாக இப்படம் வெற்றிப்படமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.