null
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு- கணவர் ஹேம்நாத் விடுதலை
- சித்ரா மரணத்தில் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.
- சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளூர், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சித்ரா மரணத்தில் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேர் மீது நசரேத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை சித்ரா வழக்கில் கணவர் ஹேம்நாத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் இல்லை, முகாந்திரம் இல்லை எனக்கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.