நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ரகசிய திருமணமா?
- தமிழில் ‘சிறைச்சாலை’, ‘லேசா லேசா’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
- கல்யாணி ப்ரியதர்ஷன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தெலுங்கில் 2017-ல் வெளிவந்த 'ஹலோ' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் கல்யாணி பிரியதர்ஷன். இவரது பெற்றோர் இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பிரியதர்சன்- மலையாள நடிகை லிஸ்சி ஆவர். கல்யாணி பிரியதர்ஷன் தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் 'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் 'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இவர் இயக்குனரும் கூட. தமிழில் 'சிறைச்சாலை', 'லேசா லேசா' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை தான் நடித்த முதல் படமான 'ஹலோ' படத்திற்காக பெற்றுள்ளார்.
குறிப்பாக, இவர் ஹ்ர்தயம் மற்றும் மாநாடு படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டார். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகரை கல்யாணி ப்ரியதர்ஷன் ரகசியமாக திருமணத்தை செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலானது. இதனிடையே அந்த சின்னத்திரை நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாகவும், இது இரண்டாவது திருமணம் என்று கூறப்பட்டது. இதனால் கல்யாணி ப்ரியதர்ஷன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ ஒரு விளம்பரத்திற்காக படமாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ஒரு நகைக்கடையின் விளம்பரத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.