சினிமா செய்திகள்
null

டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்

Published On 2024-10-04 12:27 GMT   |   Update On 2024-10-04 12:41 GMT
  • அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • அமெரிக்காவில் நடைப்பெறவிருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்டர் ஃபைர்ஸ்ட் லுக் மற்றும் கதாப்பாத்திரங்களின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் பெறும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

கடந்த மாதம் படத்திற்கான எந்தவித அப்டேட்டும் கிடைக்காததால் ரசிகர்கள் மனம் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் நடைப்பெறவிருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் தேர்தல் வாக்குமூல அறிக்கையை பற்றி பதிவு செய்து இருந்தார்.

அப்பதிவில் தல ரசிகர்கள் எங்களுக்கு நீங்கள் விடாமுயற்சி திரைப்படத்தில் அப்டேட் மற்றும் வெளியீட்டு தேதியை தெரிவித்தால். நானும் என் மதுரையை சேர்ந்த நண்பர்களும் கண்டிப்பாக உங்களுக்கு வாக்களிப்போம் என பதிவு செய்துள்ளனர்.

இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News