சினிமா செய்திகள்
null

விடாமுயற்சி அப்டேட்: வெளியான புது போஸ்டர்

Published On 2024-08-16 07:56 GMT   |   Update On 2024-08-16 07:57 GMT
  • விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
  • விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

விடாமுயற்சி அஜித் குமாரின் 62 ஆவது திரைப்படம் ஆகும். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக விடாமுயற்சி போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், தற்போது விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் நிகில் மேனின் தோற்றம் இடம்பெற்று இருக்கிறது.

 


விடாமுயற்சி படம் நீண்ட காலம் படமாக்கப்பட்டு வருகிறது. எனினும், இதுகுறித்த அப்டேட்டுகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை வழங்கி வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News