சினிமா செய்திகள்

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரிக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் - அசோக் செல்வன்

Published On 2024-09-23 14:21 GMT   |   Update On 2024-09-23 14:21 GMT
  • முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி உள்ளது.
  • ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் தில்லி பாபு இம்மாத துவக்கத்தில் உயிரிழந்தார்.

தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. 'உறுமீன்', 'மரகதநாணயம்', 'ராட்சசன்', 'பேச்சிலர்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி. தில்லி பாபு கடந்த செப்டம்பர் 9 அன்று காலமானார்.

இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. இன்று காலை மறைந்த தில்லி பாபு அவர்களின் குடும்பம், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்ட நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்வை தயாரிப்பாளர் தனஞ்செயன் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, "தில்லி பாபு சார் என் கரியருக்கு புத்துயிர் கொடுத்தார். அவர் என்னையும் என் சகோதரியையும் மிகவும் அக்கறையுடன் வழிநடத்தினார். 'ஓ மை கடவுளே' படம் வெளியாவதற்கு முன்பு வரை எனக்கு திரைத்துறையில் மார்க்கெட் இருந்ததில்லை. இருந்தாலும் அவர் எனக்காக பணம் கொடுத்தார். அவர் கொடுத்த பாதையில்தான் நான் அதில் பயணிக்கிறேன். அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்," என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


Tags:    

Similar News