சினிமா செய்திகள்

ஆந்திரா, தெலங்கானாவிற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர்., பாலய்யா

Published On 2024-09-03 14:54 GMT   |   Update On 2024-09-03 14:54 GMT
  • கனமழைக்கு ஆந்திராவில் 17 பேரும், தெலுங்கானாவில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.
  • இரு மாநிலங்களிலும் பெய்து வரும் கன மழையால் வீடுகள், பயிர்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கனமழைக்கு ஆந்திராவில் 17 பேரும், தெலுங்கானாவில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.

தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

கடந்த 3 நாட்களாக இரு மாநிலங்களிலும் பெய்து வரும் கன மழையால் வீடுகள், பயிர்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவுள்ளதாக நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான பாலய்யா அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் நன்கொடை வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News