சினிமா செய்திகள்

மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்டது பச்சை துரோகம் - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த டிடிஎஃப்

Published On 2024-10-07 13:07 GMT   |   Update On 2024-10-07 13:07 GMT
  • சாலைகளில் பைக் ஓட்டி சாகசம் செய்து அதை யூ டியூப்பில் வீடியோவாக பதிவேற்றி பிரபலமானவர் டிடிஎஃப் வாசன்.
  • இவரை கதாநாயகனாக வைத்து செல்அம் என்ற இயக்குனர் "மஞ்சள் வீரன்" என்ற படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

சாலைகளில் பைக் ஓட்டி சாகசம் செய்து அதை யூ டியூப்பில் வீடியோவாக பதிவேற்றி பிரபலமானவர் டிடிஎஃப் வாசன்.

யூடியூப் மூலம் பிரபலமான இவரை கதாநாயகனாக வைத்து செல்அம் என்ற இயக்குனர் "மஞ்சள் வீரன்" என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.

"மஞ்சள் வீரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் அப்படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை இயக்குனர் செல்அம் தெரிவித்து இருந்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலானது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக டிடிஎஃப் வாசன் அவரது யூடியூம் சேனலில் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் "என்னிடம் இப்போது வரை மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தகவலை இயக்குனர் செல்அம் தெரிவிக்கவே இல்லை. நான் தொடர்புகொண்டாலும் அவர் பேசவே தயாராக இல்லை. என்னிடம் சொல்லியிருந்தால் நானே ஒத்துக்கொண்டு விலகியிருப்பேன். ஆனால் படப்பிடிப்பு நடத்தாமலேயே அதற்கு நான் வரவில்லை என்று நேரடியாக பத்திரிகையாளர்களிடம் கூறியது மிகப்பெரிய தவறு. அண்ணன் அண்ணன் என்று சொல்லிக்கொண்டு மலிவான விளம்பரத்திற்காக என்னை அவர் பயன்படுத்தியது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதுபோலான ஒரு பச்சதுரோகத்தை நான் பார்த்ததே கிடையாது" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News